தண்டுத்துளைப்பான்: குளுமெட்டியா டிரான்ஸ்வெர்சா
அறிகுறிகள்:
- உச்சியில் உள்ள கிளைகள்/தண்டுகளில் மேலிருந்து கீழ்நோக்கி வலை பின்னியிருக்கும்.
- நாற்றுக்கள் குட்டை வளர்ச்சியுடன் பார்பதற்கு நுனியில் கொத்தாக தோற்றமளிக்கும்.
பூச்சியின் விபரம்:
- புழு : அடர் இளஞ்சிவப்பு நிறத்தில், அடர் பழுப்பு நிற முன் மார்புடன் இருக்கும்.
- பூச்சி : சாம்பல் நிறத்தில், சாம்பல் நிற இறக்கைகளுடன் அலை போன்ற வரிகளுடன் காணப்படும்.
கட்டுப்பாடு:
- வயலை சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும்
- தாக்கப்பட்ட பயிரின் பகுதிகளை சேகரித்து, அழிக்க வேண்டும்.
- கோடை உழவு செய்தல்.
- கார்பைரில் 50 wp 0.1 % தெளிக்க வேண்டும்
|