TNAU Agritech Portal
பயிர் பாதுகாப்பு :: நெல் பயிரைத் தாக்கும் நூற்புழுக்கள்

வேர் முடிச்சு நுாற்புழு : மெலாய்டோகைன் கிரேமினிகோலா

அறிகுறிகள்:

  • வேர்களின் மேல் கொக்கி போன்ற வித்தியாசமான முடிச்சுகள் காணப்படும்.
  • புதிதாக வெளிவந்த இலைகள் வடிவம் உருமாறி இலை ஓரங்கள் சுருங்கிக் காணப்படும்.
  • பயிரின் வளர்ச்சி குன்றுதல்
  • தாக்கப்பட்ட பயிர்கள் பயிக்காலத்திற்கு முன்பே கதிர்விட்டு முதிர்ச்சியடைந்துவிடும்.
  • துார்களின் எண்ணிக்கை குறைந்து காணப்படும்.
  • கதிர்களின் அளவு குறைந்து தானியங்களின் எண்ணிக்கையும் குறைந்து காணப்படும்.      
வேர் முடிச்சுக்கள் பயிர் சோகை அறிகுறி

கட்டுப்பாடு :

  • வயலில் நீர் தேக்கி, மண் காய்ந்துவிடாமல் பராமரித்தல் மற்றும் பயிர் சுழற்சி ஆகியவை உழவியல் கட்டுப்பாட்டு முறைகளை கடைபிடித்தல்.
  • 50-100µm தடிமன் பாலீதின் விரிப்புகளை பரப்பி, 3 வாரங்களுக்கு மண் வெப்பமூட்டம் மேற்கொள்ள வேண்டும். பின்பு வயலைத் தயாரித்தல் வேண்டும்.
  • தரிசாக விடுதல் மற்றும் மண் மூட்டப் பயிர்களான எள், தட்டைப்பயறு, ஆகியவற்றை பயிரிடுவதன் மூலம் நுாற்புழுக்களைக் குறைக்க முடியும்.
  • நுாற்புழுக் கொல்லிகளைப் பயன்படுத்தி மண்ணை நனைத்தல், நாற்றுக்களின் வேர்கள் மற்றும் விதைகளை ஊற வைத்தல் ஆகியவை நுாற்புழுக்களின் எண்ணிக்கையை குறைக்கிறது.
  • கார்போசல்ஃபான் கொண்டு உடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016