வெள்ளை வேர்ப்புழு: ஹோலோட்டிரைக்கியா வகை
தாக்குதலின் அறிகுறிகள்:
- புழுக்கள் வேர்களையும் கிழங்குகளையும் கடித்துத் தின்பதால் செடி வாடும்
- வண்டுகள் இரவு நேரங்களில் இலைகளைக் கண்டபடி கடித்து சேதப்படுத்தும்
பூச்சியின் விபரம்:
- புழு: பழுப்புத்தலையுடைய அழுக்கேறிய வெண்ணிற ‘C’ வடிவப்புழுக்கள்
- வண்டு: பழுப்புநிற வண்டுகள், மார்பு பகுதி வெளிர் நிறத்தில் இருக்கும்
கட்டுப்படுத்தும் முறை:
- கோடை உழவு செய்து மண்ணில் இருக்கும் கூட்டுப்புழுப்பளை வெளிகொணர்ந்து அழிக்கவும்
- கோடை மழை பெய்து 10 நாட்கள் கழித்து குயினல்ஃபாஸ் 5% ஹெக்டேருக்கு 25 கிராம் வைக்க வேண்டும்.
- ஹெக்டேருக்கு 1 விளக்குபொறி 7 மணிலிருந்து 9 மணி வரைக்கும் வைக்க வேண்டும்
- காலையில் வண்டுகளை கையில் சேகரித்து அழிக்கவும்
|
|
|
பாதிக்கப்பட்ட உருளைக்கிழங்கு |
புழு |
|
வளர்ச்சியடைந்த வண்டு |
|