பயிர் பாதுகாப்பு :: நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
கூண்டுப் புழு: நிம்புலா டிபன்டாலிஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இலைகளின் பச்சையத்தை சுரண்டி உண்ணுவதால், இலைகள் வெள்ளைநிறக் காகிதம் போல் தோன்றும்
  • இலையின் நுனிப்பகுதியை அறுத்தால் தூர்களைச் சுற்றி குழாய் வடிவ கூண்டுகள் காணப்படும்
  • குழல் வடிவ கூண்டுகள் நீரின் மீது மிதந்து கொண்டிருக்கும்
  • கத்திரிக்கோல் கொண்டு சரியான கோணத்தில் வெட்டப்பட்டது போல் இலைகள் வெட்டப்பட்டிருக்கும்

பூச்சியின் விபரம்:

  • முட்டை: முட்டைகள் இளம் மஞ்சள் நிறத்தில், தட்டு போன்று, மென்மையாகவும், ஒழுங்கற்ற வடிவத்திலும் காணப்படும். நீரின் மீது மிதந்து கொண்டிருக்கும் இலைகளின் அடிப்பகுதிகளில் முட்டைகள் இடப்பட்டிருக்கும்.
  • புழு: புழுக்கள் பச்சை நிறத்தில், ஆரஞ்சு பழுப்பு நிறத் தலைப்பகுதியுடன் காணப்படும். ஒவ்வொரு புழுவும் குழல்வடிவக் கூடுக்குள் உயிர் வாழும். இந்த கூடுகள் இலைகளில் தொங்கிக்கொண்டிருக்கும். நன்கு வளர்ச்சியடைந்த புழுக்கள் 15 மி.மீ நீளம் வரைக் காணப்படும்.
  • கூட்டுப்புழு: இலைக்கூடுகளுக்குள் கூட்டுப்புழு உருவாகிறது. புதிதாக உருவான கூட்டுப்புழுக்கள் பால் போன்று வெண்மை நிறத்தில் தோன்றி, பின் இளம் மஞ்சள் நிறத்திற்கு மாறி விடும்.
  • அந்துப்பூச்சி: சிறியதாக, வெள்ளை நிறத்துடன், மங்கிய பழுப்பு நிற அலை போன்ற குறிகளுடன் காணப்படும். அந்துப் பூச்சியானது 5 மி.மி அளவுடையாது, பூச்சியானது பிரகாசமான வெள்ளை நிறத்தில், கருப்பு புள்ளிகளுடன் காணப்படும்

கட்டுப்படுத்தும் முறை:

  • ஒரு ஏக்கருக்கு ஆறு லிட்டர் என்ற அளவில் மண்ணெண்ணெய் பயன்படுத்தி கூண்டுப்புழுக்களை கட்டுபடுத்தலாம்.
  • துார்களிலிருக்கும் புழுக்களை கீழே விழச் செய்ய, இளம்பயிர்களின் குறுக்கே கயிரைப் போட்டு இழுத்தால் கூடுகள் நீரில் விழும். பின் வயலிலுள்ள நீரை வடிய செய்யலாம் அல்லது வயலின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்கு நாற்றின் மீது படும்படி கயிரைக் கொண்டு இழுத்தால் முட்டைகளும் கீழே விழுந்துவிடும்.
  • மிதைல் பாரத்தியான் 0.05% (அ) குயினைல்பாஸ் 0.05% தெளிக்க வேண்டும்.
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015