தண்டுத் துளைப்பான்: சிர்போபேகா இன்ஸெர்டுலஸ் |
தாக்குதலின் அறிகுறிகள்:
- இலையின் நுனியில் பழுப்பு நிற முட்டைக் கூட்டம் காணப்படும்
- தழைப்பருவத்தில் புழுக்கள் தண்டுகளில் நுழைந்து வளரும் தண்டுகளை உட்கொள்வதால் அதன் நடுப்பகுதி காய்ந்துவிடுகிறது. இதுவே "குருத்து காய்தல்" எனப்படுகிறது.
- நன்கு வளர்ச்சியடைந்த பயிரில் முழு தானியக் கதிர்களும் காய்ந்துவிடும். மிஞ்சியிருக்கும் தட்டையான தானியங்களே "வெண்கதிர்" எனப்படுகிறது.
- குருத்தைப் பிடித்து இழுக்கும் போது அவை எளிதாக கையோடு வந்துவிடும்.
- பழுப்பு நிற அந்துப்பூச்சிகள் வயலில் இருக்கும்
|
|
|
காய்ந்த நடுக்குருத்து |
வெண்கதிர் |
|
பூச்சியின் விபரம்:
- முட்டை: முட்டைகள் பாலேடு போன்ற வெள்ளை நிறமாகவும் தட்டையாகவும், முட்டை வடிவத்திலும் இருக்கும். இவை கூட்டமான திரளாக இடப்பட்டு வெளிர் மஞ்சள் நிற இழைகளால் மூடப்பட்டிருக்கும். இவை பெரும்பாலும் இலைகளின் நுனிப் பகுதிக்கருகே வைக்கப் பட்டிருக்கும்.
- புழு: வெளிரிய மஞ்சள் நிறத்தில் கரும்பழுப்பு நிற தலை கொண்டு அதில் முன் மார்புக் கவசத்துடன் காணப்படும்.
- கூட்டுப்புழு: வெள்ளை நிற கூண்டுப்புழுவாதலால் நெற்பயிர் தண்டுகளுக்குள்ளே ஏற்படும், அல்லது வைக்கோல் மற்றும் பயிர்த் துார்களின் உள்ளேயும் ஏற்படும்.
- அந்துப்பூச்சி:
பெண் அந்துப்பூச்சி: முன் இறக்கைகளின் நடுப்பகுதி நன்கு பிரகாசமான மஞ்சளான பழுப்பு நிறத்தில் கருப்பு நிறப் புள்ளிகளுடன் காணப்படும். மேலும் அதன் மலப்புழைப் பகுதியில் மஞ்சள் நிற மயிர்கற்றை இருக்கும்.
ஆண் அந்துப்பூச்சி: சிறிய மற்றும் வெளிரிய மஞ்சள் நிற முன் இறக்கைகளைக் கொண்டிருக்கும். இதில் கருப்புப் புள்ளிகள் இருக்காது.
|
|
கட்டுப்படுத்தும் முறை:
பொருளாதார சேத நிலை அளவு: 25%"குருத்து காய்தல்" அல்லது 2 முட்டை குவியில்/மீட்டர்
- முட்டை ஒட்டுண்ணிகளான டிரைக்கோடெர்மா ஜப்பானிக்கம் எக்டருக்கு 5 மி.லி வீதம் இரண்டு முறை நாற்றங்காலில் தெளிக்க வேண்டும்.நாற்றுக்களை நெருக்கமாக நடுதலைத் தவிர்க்க வேண்டும்.
- வேப்பக் கொட்டைச் சாறு தெளிப்பதன் மூலம் தண்டுத் துளைப்பானை கட்டுப்படுத்தலாம்
- நாற்று நடும் போது நாற்றின் நூனியை கிள்ளி விடுவதால் தண்டுத் துளைப்பானின் முட்டை குவியல் அழிக்கப்படுகிறது
- பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கெள்ளியை தெளிக்கவும்
- பாசலான் 35 EC 1500-மி.லி/ஹெக்டேர்
- அசிபேப் 75% SP 666-1000 கி/ஹெக்டேர்
- அசார்டியாக்டின் 0.03% 1000 மி.லி/ஹெக்டேர்
- கார்போபியுரான் 3% CG 25 கி.கி/ஹெக்டேர்
- கார்போசல்பான் 6% G 16.7 கி.கி/ஹெக்டேர்
- கார்போசல்பான் 25% EC 800-1000 மி.லி/ஹெக்டேர்
- கார்டேப்ஹைட்ரோகுளோரைடி 50% SP 1 கி.கி/ஹெக்டேர்
- குளோரோடேரேனிலிபுருள் 0.4% G 10 கி.கி/ஹெக்டேர்
- குளோரோனபரிபாஸ் 20% EC 1.25 லி/ஹெக்டேர்
- பைப்ரினில் 5% SC 1000-1500 கி/ஹெக்டேர்
- குளோரோடேரேனிலிபுருள் 20% EC 1.25 லி /ஹெக்டேர்
- பைப்ரினில் 80% WG 50-62.5 கி.கி/ஹெக்டேர்
- புளுபென்டிமைட் 20% WG 125 கி/ஹெக்டேர்
- புளுபென்டிமைட் 39.35% SC 50 கி/ஹெக்டேர்
- பாஸ்போமிடான் 40% SL 1250 மி.லி/ஹெக்டேர்
|
பின்வரும் பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றைத் தெளிக்கலாம்:
|
|
|
எதிர்ப்பு இரகம் ஏடிடீ 47 |
டிரைக்கோகிராமா முட்டை அட்டை |
டிரைக்கோகிராமா ஜப்பானிக்கம் |
|