பயிர் பாதுகாப்பு :: நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
குருத்து ஈ: ஹைடிரல்லியா ஸஸக்கி

தாக்குதலின் அறிகுறிகள்:

  • உள்ளே உள்ள இளம் திசுக்களை உண்ணும்.
  • மஞ்சள் கலந்த வெள்ளைநிற நீளவாட்டு கொப்புளம் துளையுடன் காணப்படும்
  • இலைகள் சுருங்கும் பயிர்கள் குட்டை வளர்ச்சியுடன், முதிர்ச்சி அடைவது தாமதமாகும்
  • இளம் இலைகள் நுனியின் அருகில் கீழ்ப்புறமாக தொங்கும்.

பூச்சியின் விபரம்:

  • முட்டை: வெள்ளை நிறத்தில், சுருள் வடிவமாக, இலைகளின் இருபக்கங்களிலும் தனியாக முட்டைகளை இடும்
  • புழு: புதிதாக வெளி வந்த புழு கண்ணாடி போன்று, மங்கிய வெள்ளை நிறத்தில் காணப்படும். பின் வளர்ச்சியடையும் போது மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடும். புழுக்கள் இலையின் கீழ்நோக்கிச் சென்று குருத்துக்குள்ளே சேதத்தை ஏற்படுத்தும். சேதம் ஏற்பட்ட இலைகளின் மேல் சிறு துளைகளும், இலை ஓரத்தில் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறப் புள்ளிகளுடனும் காணப்படும்.
  • கூட்டுப்புழு: இலையுறைகளுக்கிடையே கூட்டுப்புழு உண்டாகிறது. அங்கு கூட்டுப்புழு தண்டுகளுடன் தளர்வாக ஒட்டிக் கொண்டிருக்கும். கூட்டுப்புழு இளம் பழுப்பு நிறத்திலிருந்து அடர் பழுப்பு நிறமாகவும், பகுதி நீள் உருளை வடிவமாகவும் காணப்படும்.
  • அந்துப்பூச்சி: வளர்ச்சிபெற்ற பூச்சிகள் அடர்சாம்பல் நிறத்தில் இருக்கும். இவை 1.8-2.3 மி.மீ அளவுடன் காணப்படும்.
    மஞ்சள் கலந்த வெள்ளைநிற நீளவாட்டு கொப்புளம் துளையுடன் காணப்படும்
    முதிர்பூச்சி
    முதிர்பூச்சி: கூட்டுப்புழு:புழு

கட்டுப்படுத்தும் முறை:
பொருளாதார சேத நிலை: 25% சேதமடைந்த இலைகள்

  • மாற்று சார்பு செடிகளை அகற்றவேண்டும் மற்றும் பருவத்திற்கு முன்னரே நடவு செய்யவேண்டும்
  • பரிந்துரைக்கப்பட்ட சாம்பல் சத்து உரத்தை பயன்படுத்தவேண்டும்
  • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கெள்ளியை தெளிக்கவும்
    • கார்டேப் ஹைட்ரோகுளோரைடி 4% G 18750-25000 கி/ஹெக்டேர்
    • குளோரோனபரிபாஸ் 4% G 18750-25000 கி/ஹெக்டேர்
    • பைப்ரினில் 5% SC 1000-1500 கி /ஹெக்டேர்
    • பைப்ரினில் 35% EC 1428 மி.லி /ஹெக்டேர்
    • பாசலோன் 35% EC 1428 மி.லி /ஹெக்டேர்

மாற்றுப்பயிர்களை அகற்றவேண்டும் குருத்து ஈயின் புழுக்களை தாக்கும் சிறு குளவிகள்
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015