பயிர் பாதுகாப்பு :: நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
பச்சைத் தத்துப்பூச்சி: நெபோடெட்டிக்ஸ் வைரஸ்ஸென்ஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இலைகள் நுனி முதல் அடிப்பகுதி வரை முழுவதும் மஞ்சள் நிறமாக மாறிவிடும்
  • இப்பூச்சிகள் துங்ரோ, நெல் மஞ்சள் குட்டை போன்ற வைரஸ் நோய்களைப் பரப்புகின்றன
  • பயிரின் வீரியம் குறைந்து வளர்ச்சி குன்றி குட்டையாகக் காணப்படும்
  • பயிர் வாடுதல் அல்லது முற்றிலுமாக காய்தல். பயிரை முழுவதுமாக தாக்கி அதன் சாற்றை உறிஞ்சுதல.

பூச்சியின் விபரம்

  • முட்டை: பச்சையான ஒளிகசியும் தன்மையுடைய முட்டைகள், இலைத்தாளின் நடுநரம்பு அல்லது நெற்பயிர் உறை அல்லது பச்சைப்புல் ஆகியவற்றில் இடப்பட்டிருக்கும். ஒரு வரிசையில் 10-15 குவியல்களாக முட்டைகள் இடப்பட்டிருக்கும்.
  • புழு: இளம் பூச்சிகள் மென்மையான உடலுடன் மஞ்சளான வெண்மை நிறத்தில் இருக்கும். படிப்படியாக இந்நிறம், பச்சையாக மாறி 5 இளம் பூச்சி வளர்ச்சி நிலைகளுடனும் காணப்படும். பின்பு 18-20 நாட்களில் முதிர் பூச்சிகள் உருவாகிறது.
  • அந்துப்பூச்சி: இவை 3-5 மி.மீ நீளம் கொண்டு, பிரகாசமான பச்சை நிறத்தில் வேறுபட்ட கருப்பு நிற அடையாளங்களுடன், கூம்புப் பலகை வடிவில் சிறப்பான விட்டக்கோடு இயக்கத்துடன் காணப்படும். ஆண் பூச்சியின் முன் இறக்கையின் நடுப்பகுதியில் கருப்புநிற புள்ளி காணப்படும். ஆனால் பெண் இனப் பூச்சியில் அவை கிடையாது. ஜூலை-செப்டம்பர் மாதத்தில் பூச்சிகள் செயல்திறனுடன் விளங்கும்.பெண் இனப்பூச்சிகள் 50-55 நாட்கள் வரை வாழக் கூடியது.
      மஞ்சள் நிறமான இலைகள்
முதிர் பூச்சி

கட்டுப்படுத்தும் முறை:

பொருளாதார சேத நிலை அளவு: 60/25 வலை வீச்சுகள் (அ) 5/குத்து தழைப்பருவத்தில் (அ) பூத்தல் பருவத்தில் 10/குத்து (அ) துங்ரோ உட்பரவல் இடங்களில் 2/குத்து. வயலில் துங்ரோ மற்றும் பச்சைத் தத்துப்பூச்சிகள் இருப்பைக் கண்காணிக்க வேண்டும். நடவு செய்யப்பட்ட வயலின் குறுக்கில் பக்கவாட்டில் நடக்கும்போது 20 குத்துக்களைச் சரிபார்க்க வேண்டும்.

  • விளக்குப் பொறிகளை பயன்படுத்துவது பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கான மிக சிக்கன முறையாகும்
  • அதிகாலை நேரத்தில் விளக்குப் பொறியை சுற்றி பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தோ அல்லது தூவியோ கவரப்பட்ட பச்சைத் தத்துப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்
  • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கெள்ளியை தெளிக்கவும்
    • பாஸ்போமிடான் 40% SL 1000 மி.லி /ஹெக்டேர்
    • புரப்பனோபாஸ் 50 EC 1000 மி.லி /ஹெக்டேர்
    • கார்போபியுரான் 3 G 17.5 மி.லி /ஹெக்டேர்
    • பியுரோசன் 25% SC 800 மி.லி /ஹெக்டேர்
    • கார்போசல்பான் 25% EC 800-1000 மி.லி /ஹெக்டேர்
    • பைப்ரினில் 5% SC 1000-1500 கி /ஹெக்டேர்
    • இமிடாகுளோபிரிட் 17.8% SL 100-125 மி.லி /ஹெக்டேர்
    • தையமீத்தாக்கம் 25% WG 100 கி /ஹெக்டேர்
    • ட்ரைஅசோபாஸ் 40%EC 625-1250 மி.லி /ஹெக்டேர்
 
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015