பயிர் பாதுகாப்பு :: நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
புகையான்: நிலபர்வட்டா லூகன்ஸ் |
தாக்குதலின் அறிகுறிகள்:
- நீர் மட்டத்திற்கு மேலிருக்கும் பயிரின் அடிப்பகுதியில் இளங்குஞ்சுகள் மற்றும் முதிர்பூச்சிகள் ஒட்டிக்கொண்டிருக்கும்.
- தாக்கப்பட்ட பயிர்கள் முற்றிலும் காய்ந்து "தீய்ந்த மாதிரி" காட்சியளிக்கும். பழுப்புத் தத்துப்பூச்சியானது புல்தழைகுட்டை நோய், காய்ந்த குட்டை நோய் மற்றும் வாடிய குட்டை நோய் ஆகியவற்றைப் பரப்பும் உயிரியாகத் திகழ்கிறது.
- முதிர்ச்சியடைந்த பயிர்கள் காய்ந்து வட்டமான திட்டுகளாகக் காணப்படும். மேலும் பயிர்கள் சாய்ந்து விடும்.
- தத்துப்பூச்சிகளால் ஏற்படும் "பயிர் தீய்ந்தது" போன்ற அறிகுறிகளை மற்ற "தீய்ந்த" அறிகுறிகளிலிருந்து அதில் இருக்கும் கரும் புகைப்பூசணத்தின் மூலமாக வேறுபடுத்த முடிகிறது. நச்சுயிரி தாக்கப்பட்ட பயிர்களையும் கண்டறிய முடிகிறது.
|
|
பயிர் தீய்ந்தது போன்ற தோற்றம் |
|
பூச்சியின் அடையாளம்:
- முட்டை: இலையுறைகளில் 2-12 தொகுதிகளாக முட்டைகள் இடப்பட்டிருக்கும். (பயிரின் அடிப்பகுதியின் அருகில் அல்லது இலைத்தாள்களின் அடிப்பக்க நடுநரம்புகளில்), வெள்ளையான, ஒளி ஊடுருவுகின்ற, மெலிந்த நீள் உருளை வடிவிலும், வளைவான முட்டைகள் 2 வரிசைகளில் நேர்கோட்டில் வைக்கப்பட்டிருக்கும். (வட்டமான சற்று குவிந்த வடிவத்திலுள்ள பெண் பூச்சியால் உருவான முட்:டைதோலால் முட்டைகள் மூடப்பட்டிருக்கும். பயிர்ச் செடியின் பரப்பிலிருந்து நுனிகள் மட்டுமே வெளியே துருத்திக் கொண்டிருக்கும்).
- இளம்பூச்சி: புதிதாக பொரிந்து, வெளிவந்த இளம் உயிரிகள் பருத்தி போன்று வெண்மையான நிறத்தில், 0.6 மி.மீ நீளத்துடன் இருக்கும். பின் 5 வது வளர்ச்சிநிலையில் இவை ஊதா நிறமான பழுப்பு நிறம் போன்றும், 3.0 மிமீ நீளத்துடன் மாறிவிடும்.
- அந்துப்பூச்சி: முதிர்ச்சியடைந்த தத்துப்பூச்சி 4.5-5.0 மிமீ நீளத்துடன், மஞ்சளான பழுப்பு முதல் கரும்பழுப்பு நிற உடலைக் கொண்டிருக்கும். அதன் இறக்கைகள் நிறமில்லாமல், மங்கிய மஞ்சள் நிறமாகக் காணப்படும். இரண்டு தனிச்சிறப்புடைய இறக்கை அமைப்புகளைக் கொண்டது. "நீளிறக்கைகள்" மற்றும் "சிற்றிறக்கைகள்".
- இறக்கை வெளிப்புற அமைப்பு பல காரணிகளால் துாண்டப்படுகின்றது. அதாவது, இளம் உயிரிப் பருவத்தில் கூட்டமாகவும், உணவின் அளவு மற்றும் தரம் குறைந்தும், குறுகிய நாள் அளவு, மற்றும் குறைந்த வெப்பநிலை ஆகியவை முதிர்ச்சி நிலையை மேம்படுத்துகின்றன.
|
|
|
முதிர்பூச்சி |
|
கட்டுப்படுத்தும் முறை:
பொருளாதார சேத நிலை அளவு: ஒரு குத்துக்கு 1 சிலந்தி இருக்கும் நிலையில் ஒரு துாருக்கு 2 பழுப்பு தத்துப்பூச்சி இருக்கலாம். சிலந்திகள் இல்லையெனில் துாருக்கு 1 என்ற எண்ணிக்கையில் புகையான்கள் இருக்கலாம். கொன்றுண்ணி சிலந்தி இல்லாத நிலையில் ஒரு துாருக்கு 1 தத்துப்பூச்சி என்றும் சிலந்திகள் 1/குத்து என்ற அளவில் இருக்கும்போது துாருக்கு 2 தத்துப்பூச்சிகள் என்ற எண்ணிக்கையில் இருக்கலாம்.
- தேவைக்கு அதிகமான தழைச்சத்து உரங்களை பயன்படுத்துதலைத் தவிர்த்தல் வேண்டும்.
- தேவைக்கு அதிகமாக தண்ணீர் பாய்ச்சுவதை தவிர்க்கவும்விளக்கு பொறி அமைத்து புகையானை கவர்ந்து அழிக்கலாம்
- வயலில் நன்றாக தண்ணீர் வடிந்த பிறகு மருந்து தெளிக்க வேண்டும்
- வேப்பெண்ணை 3 சதவிகிதம், 15 லிட்டர்/ஹெக்டேர்் (அ) இலுப்பை எண்ணை 6 சதவிகிதம் 30 லிட்டர்/எக்டர் (அ) வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவிகிதம் 25 கிலோ/ஹெக்டேர்
- பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கெள்ளியை தெளிக்கவும்
- பாசலான் 35 EC 1500 மி.லி/ஹெக்டேர்
- கார்ப்ரைல் 10 D 25 கி.கி/ஹெக்டேர்
- மீ்த்தைல்டேம்மட்டான் 25 EC 1500 மி.லி/ஹெக்டேர்
- குளோரோபைரிபாஸ் 20 EC 1250 மி.லி/ஹெக்டேர்
- அசிமேட் 75% SP 666-1000 கி /ஹெக்டேர்
- அசார்டியாக்டின் 0.03% 1000மி.லி/ஹெக்டேர்
- பியுப்ரோசன் 25% SC 800 மி.லி /ஹெக்டேர்
- கார்போசல்பான் 25 EC 800-1000 மி.லி /ஹெக்டேர்
- குளோரோடேரினிலிபுருள் 18.5% SC 150 கி/ஹெக்டேர்
- குளோரோடேரினிலிபுருள் 0.4% G 10 கி/ஹெக்டேர்
- டைகுளோரோவாஸ் 76% SC 470 மி.லி/ஹெக்டேர்
- பேனோகார்ப் 50% EC 500-1500 மி.லி/ஹெக்டேர்
- பைப்பரினில் 5 % SC 1000-1500 மி.லி/ஹெக்டேர்
- பைப்பரினில் 0.3% GR 16670-25000 கி /ஹெக்டேர்
- இமடாகுளோபிரிட் 70% WG 30-35 கி.கி /ஹெக்டேர்
- இமடாகுளோபிரிட் 17.8 SL 100-125 மி.லி/ஹெக்டேர்
- பாஸ்போமிடான் 875 மி.லி/ஹெக்டேர்
- ட்ரைஅசோபாஸ் 40% EC 625-1250 மி.லி/ஹெக்டேர்
|
|
|
|