பயிர் பாதுகாப்பு :: நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
கதிர் நாவாய்ப்பூச்சி: லெப்டோகெரரிசா அக்யூட்டா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • பால் பருவத்திலிருக்கும் நெல் மணிகளிலிருந்து சாறு உறிஞ்சப்படும்
  • நெல்மணிகள் விதையற்று பதராக மாறி நிமிர்ந்த பூங்கொத்துக்களைக் கொண்டிருக்கும்.
  • நெல் மணிகளில் பூச்சி உட்கொண்டு துளைகளில் கருப்பு நிறப் புள்ளிகள் காணப்படும்
  • பால் பருவத்தின் போது நெல்வயலில், நாவாய்ப்பூச்சிகளின் வெறுக்கத்தக்க ஒரு மணம் வீசும்.

பூச்சியின் அடையாளம்:

  • முட்டை: முட்டைகள் வட்டமாக பழுப்பு நிற விதை போன்று, 2 மி.மீ நீளம் கொண்டு இரு வரிசைகளில் கூட்டமாக வைக்கப்பட்டிருக்கும். இலைத்தாளின் மேல்பரப்பில் உள்ள இலை நடுநரம்பு பகுதியில் முட்டைகள் இடப்பட்டிருக்கும்.
  • இளம் பூச்சிகள்: முதல் வளர்நிலை பூச்சிகள் மிகவும் சிறியதாக, 2 மி.மீ நீளம் கொண்டு, வெளிறிய பச்சை நிறமாக இருக்கும். பின் அடுத்தடுத்த வளர்ச்சி நிலைகளில் ஆழ் பச்சை (கரும்பச்சை) நிறமாக மாறிவிடும்.
  • முதிர்ப்பூச்சிகள்: முதிர்ச்சி நிலையை அடைந்த பூச்சிகள் பச்சையான மஞ்சள் நிறமாகவும், நீளமாக மெலிந்தும் ½ அங்குலம் நீளமுடன் நாவாய்ப்பூச்சிக்குரிய வெறுக்கத்தக்க ஒரு மணமுடன் இருக்கும்.
பால் பருவத்திலிருக்கும் நெல் மணிகளிலிருந்து சாறு உறிஞ்சப்படகிறது
பாதிக்கப்பட்ட நெல் மணிகள் தானிய மணிகளின் மீது கடித்த காயங்களும் புள்ளிகளும் காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை:
பொருளாதார சேத நிலை அளவு: பூத்தல் பருவத்தின் போது 5 நாவாய்ப்பூச்சிகள்/100 நெற்கதிர்கள் மற்றும் பால்பிடிக்கும் பருவத்திலிருந்து தானியமணி முதிர்ச்சி நிலைப் பருவம் வரை 16 நாவாய்ப்பூச்சிகள்/100 நெற்கதிர்கள்.
  • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கெள்ளியை 25 கி.கி/ஹெக்டேர் என்ற அளவில் இரண்டு முறை அதாவது பூக்கும் பருவம் மற்றும் அதற்கு அடுத்த இரண்டாவது வாரம் தூவவும்
    • குயின்லாபாஸ் 1.5 D
    • மீத்தைல் பார்த்தையான் 2% DP
    • KKM 10 D (KKM என்பது 10% அக்கோரஸ் கேலாமஸ் வேர் பொடி மற்றும் 90% மின்சார உற்பத்தி நிலையத்தில் கிடைக்கும் சாம்பல்)
  • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கெள்ளியை இராண்டு முறை தெளிக்கவும்
    • மாலத்தையான் 50 EC 500 மி.லி /ஹெக்டேர்
    • வேப்பங் கொட்டைச் சாறு 5% 25 கி.கி /ஹெக்டேர்
    • நொச்சி அல்லது இப்போமியா அல்லது பிரஸ்சோபிஸ் இலைச் சாறு 10%
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015