பயிர் பாதுகாப்பு :: நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
ஆனைக் கொம்பன் ஈ: ஆர்சியோலியா ஒரைசா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • புழுக்கள் வளரும் தூர்களை தாக்குகிறது
  • புழுக்கள் தூர்களை துளைத்து உட்சென்று வளரும் பகுதியை உண்கிறது
  • தாக்கப்பட்ட தூர்களில் நெற்கதிர் வராது, மேலும் வளர்ச்சிக்குன்றி காணப்படும்
  • தாக்கப்பட்டத் தூர்கள் வெங்காய இலை போல் அல்லது வெள்ளிதண்டு போல் காட்சியளிக்கும்

பூச்சியின் விபரம்:

  • முட்டை: இந்த ஈயானது நீளமான, உருளை வடிவத்தில், பளப்பளப்பான வெள்ளை அல்லது சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிற முட்டைகளை இலைகளின் அடிப்பகுதியில் தனியாகவோ அல்லது கூட்டமாகவோ (26) இடும்.
  • புழு: புழு 1 மி.மீ நீளமுடன் முன் பகுதியில் கூர்மையாக இருக்கும். இவை இலையுறையின் கீழே ஊர்ந்து சென்று, வளரும் மொட்டுக்குள் நுழைகிறது. அவை உண்ட இடத்தைச் சுற்றி ஒரு முட்டைவடிவ உள்ளிடம் உருவாகும்.
  • கூட்டுப்புழு: கூட்டுப்புழு வெளிவரும் போது அதன் உணர்கொம்புகள் மூலமாக குழலினைச் சுற்றி, வெள்ளித் தண்டின் நுனிப்பகுதிக்கு சென்று, அதனுடைய பின் பகுதி மட்டும் வெளியே தள்ளிக்கொண்டு நிற்கும்.
  • முதிர் பூச்சி: மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில், கொசு போன்று சிறியதாக காணப்படும். ஆண் ஈக்கள் சாம்பல் நிறமாக இருக்கும். இலையிலுள்ள பனித்துளிகளை உட்கொள்ளும்.
தூர்கள் வெங்காய இலை போல் அல்லது வெள்ளிதண்டு போல் காணப்படும் புழு முதிர் பூச்சி

கட்டுப்படுத்தும் முறை:
பொருளாதார சேத நிலை அளவு: 10 சதவிகித வெள்ளித்தண்டுகள் (அ) வெங்காய இலைகள்

  • புழு ஒட்டுண்ணியான பிளாட்டிகேஸ்டர் ஒரைசேவை 1/10 m2 பயன்படுத்தி ஆணைக்கொம்பன் தாக்குதலைத் தவிர்க்கலாம்.
  • முன்கூட்டிய நிலத்தை உழுதல் வேண்டும்
  • அறுவடை செய்த பின் நிலத்தை உடனடியாக உழ வேண்டும்
  • பூச்சி உண்ணக்கூடிய மாற்றுவகைப் பயிர்களை அகற்ற வேண்டும்
  • தழைச்சத்து உரங்களை பரிந்துரை செய்யப்பட்ட அளவு மட்டும் பயன்படுத்த வேண்டும்
  • புற ஊதா விளக்குப் பொறி வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்
  • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கெள்ளியை தெளிக்கவும்
    • பாசலான் 35 EC 1500 மி.லி /ஹெக்டேர்
    • கார்போசல்பான் 25% EC 800-1000 மி.லி /ஹெக்டேர்
    • குளோரோபைரிபாஸ் 20% EC 1250 மி.லி /ஹெக்டேர்
    • பைப்ரினில் 5% EC 1000-1500 மி.லி /ஹெக்டேர்
    • பைப்ரினில் 0.3% GR 16670-25000 மி.லி /ஹெக்டேர்
    • தையமித்தக்சாம் 25% WG 100கி/ஹெக்டேர்
புற ஊதா விளக்குப் பொறி குளோர்பைரிபாஸ் கரைசலில் நாற்றுகளின் வேர்களை நனைத்து நடவும் உயிர் எதிரி - புழு ஒட்டுண்ணி - பிளாட்டிகேஸ்டர் ஒரைசே
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015