தாக்குதலின் அறிகுறிகள்:
- இலையின் நுனியை கீழ்நோக்கி சுருட்டும் அல்லது அதே இலையை இரு பக்கமும் சுருட்டும் அல்லது அடுத்தடுத்த இரு இலைகள் பட்டுப்போன்ற நுால்களால் ஒன்று சேர்க்கப்பட்டு, ஒரு கூடு போன்று உருவாக்கப்பட்டிருக்கும்.
- பின்புறத்திலிருந்து இலைகள் சுருண்டுவிடும்
- புழுக்கள் உள்ளிருந்து, திசுக்களை சுரண்டி உண்ண ஆரம்பிக்கும்.
பூச்சியின் விபரம்:
- முட்டை: வெள்ளை அல்லது பழுப்பான மஞ்சள் நிறத்தில் முத்து போன்று காணப்படும்.
- புழு: பச்சை நிறத்தில் 50மி.மி அளவுடையது தலைப்பகுதியில் சிகப்பு நிற கோடுகள் காணப்படும் மற்றும் சில வகை புழுக்களில் தலைப்பகுதியானது பழுப்பு நிற கோடுகள் (ஆங்கில எமுத்தில் W-வடிவில்) காணப்படும்.
- கூட்டுப்புழு: பழுப்பு நிறம் அல்லது பச்சை நிறத்தில் காணப்படும்.
- ஆந்துப்பூச்சி: ஆந்துப்பூச்சியில் இரண்டு வகைகள் காணப்படும் அந்த இரண்டு வகை ஆந்துப்பூச்சிகளும் லேசான பழுப்பு நிறத்தில்,ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிற புள்ளுடனும் இறகானது காணப்படும், அந்த இரண்டு வகை பூச்சிகளையும் வேறுப்படுத்திக் காட்டும் அடையாமானது இறகில் காணப்படும் புள்ளிகளே ஆகும்.அதில் ஒரு வகை பூச்சியின் மூன் இறகில் ஆங்கில எழுத்தில் C-வடிவில் காணப்படும்.மற்றுறொரு வகை பூச்சியின் முன் இறகில் 4 சிறிய வெள்ளை நிற புள்ளிகளும்,2 பெறிய வெள்ளை நிற புள்ளிகளும் ,பின் இறகானது புள்ளிகள் அற்றும் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறை:
- வயலில் நீரை வடிய செய்துவிட்டு, பின் மாலை வேலைகளில் குளோர்பைரிபாஸ் 20 இ.சி. ஒரு எக்டருக்கு 1250 மிலி என்ற அளவில் தெளிக்க வேண்டும்
|
|
|
இலைகளை கீழ் நோக்கி சுருட்டி, திசுக்களை சுரண்டும் |
இரு இலை ஓரங்களை சேர்த்து மடித்து, உள்ளிருந்து திசக்களை சுரண்டும் |
|