பயிர் பாதுகாப்பு :: நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
இலை சுருட்டுப்புழு : நேப்ஃபாலோகுரோஸிஸ் மெடினாலிஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • இலைகள் நீள் வாக்கில் மடிக்கப்பட்டிருக்கும்
  • புழுக்கள் இலைகளின் பச்சை நிற திசுக்களை சுரண்டுவதால் இலைகள் வெண்மையாக மாறி காய்ந்துவிடும்
  • தீவிர தாக்குதலின்போது முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சியளிக்கும்
  • இலைகள் நீள்வாட்டில் சுருண்டு, புழுக்கள் அதனுள்ளே இருந்துவிடும்

பூச்சியின் விபரம்:

  • முட்டை: தட்டையாக, முட்டை வடிவத்தில், மஞ்சளான வெள்ளை நிறத்தில் காணப்படும்
  • புழு: பச்சையான நிறத்தில் ஒளி கசியும் தன்மை கொண்டு விளங்கும். முன்மார்புக் கேடயம் நுனி நோக்கி நிமிர்ந்தும், பக்கவாட்டில் உருளையாகவும் காணப்படும்.
  • அந்துப்பூச்சி: அந்துப் பூச்சியானது மஞ்சளான பழுப்பு நிற இறக்கைகளைக் கொண்டது. அதில் நிறைய கருப்பு அலை போன்ற கோடுகள் நடுவிலும், இறக்கைகளின் ஓரத்தில் கருப்புநிற பட்டையான கோடுடனும் காணப்படும்.

 

கட்டுப்படுத்தும் முறை:
பொருளாதார சேத நிலை அளவு: தழைப்பருவத்தில் 10 சதவிகிதம் இலைச்சேதம் மற்றும் பூத்தல் பருவத்தில் 5 சதவிகிதம் கண்ணாடி இலைச் சேதமும் ஏற்படும்.

  • டிரைக்கோகிரேம்மா கிலோனிஸ் (முட்டை ஒட்டுண்ணிகளை) பயிர் நடவு செய்து 37, 44, மற்றும் 51 நாட்களில் மொத்தம் மூன்று முறை @ 5 சிசி (1 லட்சம் முட்டை ஒட்டுண்ணிகள்/எக்டர்/முறை) என்ற அளவில் விட வேண்டும்.
  • தேவைக்கு அதிகமாக தொழு உரங்கள் இடுவதை தவிர்க்கவும்வரப்புகளை சீராக்கி அதனை சுத்தமாக வைத்தல் மற்றும் புல் இனக்களைகளை நீக்க வேண்டும்
  • முள்ளுள்ள கொப்பு கொண்டு இலை மடிப்புகளைத் திறக்க வேண்டும்
  • வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவிகிதம் @ 25 கிலோ/எக்டர் (அல்லது) வேப்பெண்ணை 3 சதவிகிதம் ஆகியவற்றை தெளிக்க வேண்டும்.
  • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கெள்ளியை தெளிக்கவும்
    • பாசலான் 35 EC 1500-மி.லி/ஹெக்டேர்
    • குளோரோனபரிபாஸ் 20% EC 1250 லி /ஹெக்டேர்
    • அசிபேப் 75% SP 666-1000 கி/ஹெக்டேர்
    • அசார்டியாக்டின் 0.03% 1000 மி.லி/ஹெக்டேர்
    • கார்போசல்பான் 6% G 16.7 கி.கி/ஹெக்டேர்
    • கார்டேப்ஹைட்ரோகுளோரைடி 50% SP 1000 கி.கி /ஹெக்டேர்
    • குளோரோடேரேனிலிபுருள் 18.5% SC 150 கி.கி/ஹெக்டேர்
    • குளோரோடேரேனிலிபுருள் 0.4% G 10 கி.கி/ஹெக்டேர்
    • டைகுளோரோவாஸ் 76% SC 627 கி.கி/ஹெக்டேர்
    • பைப்ரினில் 80% WG 50-62.5 கி.கி/ஹெக்டேர்
    • புளுபென்டிமைட் 39.35% SC 50 கி/ஹெக்டேர்
    • ட்ரைகுளோரோவாஸ் 76% SC 50 கி/ஹெக்டேர்
    • பாஸ்போமிடான் 40% SL 1250 மி.லி/ஹெக்டேர்
    • புளுபென்டிமைட் 20% WG 125-250 கி/ஹெக்டேர்
    • தையமீத்தாக்கம் 25% WG 100 கி/ஹெக்டேர்
வெள்ளை மற்றும் காய்ந்த இலைகள்
முட்டை புழு முதிர் பூச்சி

டிரைக்கோகிரேம்மா முட்டை ஒட்டுண்ணி அட்டைகளை காலை நேரத்தில் வயலில் கட்டவும் வரப்புகளை சீராக்கி அதனை சுத்தமாக வைத்தல் விளக்குப் பொறிகளை வைத்து அந்து பூச்சிகளைக் கவர்ந்து கொல்ல வேண்டும்
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015