பயிர் பாதுகாப்பு :: நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகள் |
முள் வண்டு / ஹிஸ்பா வண்டு : டைகிளாடிஸ்பா ஆர்மிஜெரா |
தாக்குதலின் அறிகுறிகள்:
- புழுக்கள் இலைகளைத் துளைத்திருப்பதை இலைகளின் மேல் தெளிவாகக் காணலாம்
- இலைகளின் மேற்புறத்தில் பச்சையத்தை சுரண்டி உண்ணுவதால் நடுநரம்புக்கு இணையாக வெள்ளை நிற வரிகள் காணப்படும்
- இலைத் திசுக்களின் ஊடே புழுக்கள் துளைப்பதால், இலை நரம்புகளுக்கு இணையாக ஒழுங்கற்ற கண்ணாடி போன்ற வெள்ளைநிறத் திட்டுக்கள் தோன்றும்.
- புழுக்கள் இலைகளைத் துளைத்து இலையின் நுனிகளில் கொப்புளங்களை ஏற்படுத்தும்.
- சேதம் ஏற்பட்ட இலைகள் வாடி விழுந்து விடும்.
- தீவிரத் தாக்குதலின்போது நெல் வயல் முழுவதும் எரிந்தது போன்று காட்சிதரும்.
பூச்சியின் விபரம்:
- முட்டை: பொதுவாக இலையின் நுனியை நோக்கி இளம் இலைகளின் சிறு பிளவு/வெடிப்புகளுக்குள் முட்டைகள் இடப்பட்டிருக்கும்.
- புழு: புழுக்கள் வெள்ளை கலந்த மஞ்சள் நிறத்தில், தட்டையாகக் காணப்படும். இலைகளை துளைத்து இலைத் திசுக்களை உண்டு, அதனுள்ளேயே கூட்டுப்புழுவாகிறது.
- அந்துப்பூச்சி: வண்டுகள் சற்று சதுரமான வடிவத்தில் கருநீல நிறம் அல்லது கருப்பு நிறமான உடலுடன், உடல் முழுவதும் முள்ளுடன் 1/6" நீளமும், 1/8" அகலத்துடனும் காணப்படும்.
கட்டுப்படுத்தும் முறை:
- பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கெள்ளியை தெளிக்கவும்
- கார்போபியுரான் 3% 50 கி.கி/ஹெக்டேர்
- குளோரோபைரிபாஸ் 20% EC 1250 மி.லி/ஹெக்டேர்
- மாலத்தையான்50%EC 1150 மி.லி/ஹெக்டேர்
- ட்ரைஅசோபாஸ் 40% EC 625-1250 மி.லி/ஹெக்டேர்
|
|
|
புழு |
முதிர் பூச்சி |
|
|
|