மரவள்ளி செதில் பூச்சி: அயோனிடோமைடிலஸ் ஆல்பஸ்
தாக்குதலின் அறிகுறிகள்:
- செடியின் தண்டு பகுதிகளை தாக்கும்
- தாக்கப்பட்ட இலைகள் நிறம்மாறியும், உலர்ந்தும் விடும்
- செடியின் வளர்ச்சி குன்றிவிடும்
பூச்சியின் விபரம்:
- உறுதியான செதில்கள், நீள்வட்டவடிவில் தசைகள் போன்று இருக்கும்
கட்டுப்படுத்தும் முறை:
- பூச்சிகளற்ற (செதில்பூச்சிகள்) கரணைகளை நடவுக்கு தேர்வு செய்ய வேண்டும்.
- தாக்கப்பட்ட தண்டினை அழிக்கவும்.
- வயலில் காக்சோநிலிட் வகை பொறி வண்டுகளின் எண்ணிக்கையை அதிக படுத்த வேண்டும்
- மீதைல் டெமிட்டான் 0.25 சதம் தெளிக்கவும்
|
 |
 |