பயிர் பாதுகாப்பு :: தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள்

ஃபுசேரியம் வாடல் :

அறிகுறிகள்

  • நோயின் முதல் அறிகுறியாக கிளை நரம்புகள் தெளிவாகி இலைகளில் பசுமை சோகை ஏற்படுகிறது.
  • இளம் இலைகள் கருகி சில நாட்களில் இறந்துவிடும். இலைக்காம்பு மற்றும் எல்லா இலைகளும் வாட ஆரம்பிக்கும்.
  • இளம் இலைகளின் கிளை நரம்புகள் வெளியெ தெரிந்து இலைக்காம்பு உதிர ஆரம்பிக்கும். விளை நிலங்களில் கீழ் இலைகள் முதலில் மஞ்சள் நிறமாக மாறும் மற்றும் சிற்றிலைகள் கருகி இறந்துவிடும்.
  • அறிகுறியின் தொடர்ச்சியாக மற்ற இலைகளுக்கும் பரவ ஆரம்பிக்கும். கடைசி நிலையில் வாஸ்குலர் அமைப்பு பழுப்பு நிறமாக மாறுகிறது. தாவர வளர்ச்சி குன்றி பின்பு இறந்துவிடும்.
 
ஆரோக்கியமான தாவரம் பாதிக்கப்பட்ட   தாவரங்கள்

மேலாண்மை

  • பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றி அழித்துவிட வேண்டும்.
  • கார்பென்டிசம் (0.1%) கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை மூழ்கச் செய்ய வேண்டும்.
  • பயிர் சுழற்சி முறையில் சாராத் தாவரங்களை அதாவது தானியங்களைப் பயிரிட வேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016