பயிர் பாதுகாப்பு :: தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள்

பாக்டீரியா இலைப்புள்ளி :

அறிகுறிகள்

  • ஈரமான வானிலை மற்றும் தொடர் மழை நோய் வளர்ச்சிக்கு உகந்தது. அதிக மழைப் பெய்யும் இடங்களில் திடீரென்று இந்நோய் தோன்றுகிறது.
  • பாதிக்கப்பட்ட இலைகள் சிறியதாக, பழுப்பு நிறமாக, நீர் தோய்ந்து, வட்டப் புள்ளியைச் சுற்றிலும் மஞ்சள் நிற வட்டம் தோன்றுகிறது.
  • முதிர்ந்த தாவரங்களில் முதிர்ந்த இலைகளில் தொற்று ஏற்பட்டு இலைகள் உதிர்கின்றன.
  • முக்கிய அறிகுறி பச்சை பழங்களில் தோன்றும்.
  • மத்தியில் உள்ள காயங்கள் ஒழுங்கற்றதாகவும், வெளிர் பழுப்பு மற்றும் கடினமான சிரங்குடைய மேற்பரப்புடன் காணப்படும்.
  • பழுத்த பழங்கள் இந்நோயினால் பாதிக்கப்படுவதில்லை. விதையின் மேற்பரப்பில் பாக்டீரியா காணப்படும். விதையின் மற்ற பகுதிகளிலும் சில நேரம் காணப்படும்.
  • தாவர குப்பையிலிருந்து தானாக தக்காளிச் செடிகளுக்கு பரவுகின்றன.
ஆரோக்கியமான இலை பாதிக்கப்பட்ட இலை

மேலாண்மை

  • நோயற்ற விதை மற்றும் தாவரங்களையே பயன்படுத்த வேண்டும். சாராத் தாவரங்களை பயிர் சுழற்சி மூலம் பயிரிட்டால் சென்ற வருட பயிர் சக்கைகளை தவிர்க்கலாம்.
  • மெர்குரிக் குளோரைடு (1:1000) கொண்டு விதை நேர்த்தி செய்வதன் மூலம் நோயைக் கட்டுப்படுத்தலாம்.
  • நோயைத் திறம்பட கட்டுப்படுத்த தாமிரம் மற்றும் உயிர்ம பூஞ்சாணக் கொல்லியை சேர்த்து 5 முதல் 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும் அல்லது அக்ரிமிசின் – 100 (100ppm) 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்க வேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016