பயிர் பாதுகாப்பு :: தக்காளி பயிரைத் தாக்கும் பூச்சிகள்

இலைப்பேன்: திரிப்ஸ் டபாசி

தாக்குதலின் அறிகுறிகள்:

  • லைகளின் மேற்பரப்பில் வெண்ணிறத்திட்டுகள் காணப்படும்
  • மலர்கள் முதிர்ச்சி அடைவதற்கு முன்பாக விழுந்துவிடும்
  • குருத்து காய்ந்துவிடும்
  • புள்ளி வாடல் வைரஸ் நோயை பரப்புகிறது

பூச்சியின் விபரம்:

  • இளம் குஞ்சு: மஞ்சள் நிறத்தில் இருக்கும்
  • முதிர் பூச்சி: கருமையான, மயிரிழைகளால் ஆன இறகு காணப்படும்

கட்டுப்படுத்தும் முறை:

  • புள்ளி வாடல் நோயால் தாக்கப்பட்ட செடிகளை வேருடன் பிடுங்கி அழிக்கவும்
  • மஞ்சள் ஒட்டு பொறியை ஹெக்டேருக்கு 15 அமைக்கவும்
  • கிரைசோப்பெர்லா கார்ணியா என்னும் இரை விழுங்கி பூச்சியை ஹெக்டேருக்கு 10,000 புழுக்களை விடவேண்டும்.
  • மீத்தைல் டெமட்டான் 25 EC ஹெக்டேருக்கு ஒரு லிட்டர் அல்லது டைமெத்தோயேட் 30 EC ஹெக்டேருக்கு ஒரு லிட்டர் தெளிக்க வேண்டும்

இளம் குஞ்சு

முதிர்பூச்சி
தாக்கப்பட்ட தக்காளி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016