பயிர் பாதுகாப்பு :: தக்காளி பயிரைத் தாக்கும் பூச்சிகள்

ஊசித்துளைப்பான்: ட்யுடா அப்சல்யூட்டா

சேதத்தின் அறிகுறி:

  • இலைகள், தண்டுகள் சுரண்டியும், பழங்கள் ஊசி துவாரங்களுடன் காணப்படும்
பழத்தில் ஊசி துவாரம் அறிகுறிகள்
புழு அந்துப்பூச்சி

மேலாண்மை:

  • பூச்சி தாக்கிய பழங்கள், செடிகளை அகற்றி ஆழக்குழியில் புதைக்கவும்
  • பயிர் சுழற்சியில் கத்தரி, மிளகாய் பயிரிடுவதை தவிர்க்கவும்
  • பூச்சி தாக்காத நாற்றுகளை நடவும்
  • ஏக்கருக்கு 16 இனக்கவர்ச்சி பொறிகள் வைத்து ஆண் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்தழிக்கவும்
  • தேவை ஏற்படின், ஏக்கருக்கு குளோரண்ட்ரனிலிப்ரோல் 18.5 % எஸ்.சி. 60 மி.லி. அல்லது சையாண்ட்ரணிலிப்ரோல் 10% ஓ.டி 60 மி.லி. அல்லது புளுபெண்டமைடு 20% டபிள்யூ.ஜி 60 மி.லி. அல்லது இண்டாக்சோகார்ப் 14.5% எஸ்.சி. 100 மி.லி. அல்லது அசாடிராக்டின் 1 அல்லது 5 சதவீதம் 200 - 300 மி.லி. தெளிக்கவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016