பயிர் பாதுகாப்பு ::அறுவடைப் பின்சார் நோய்கள்: தக்காளி

ஆந்த்தராக்னோஸ்: கொலட்டோட்ரைக்கம் கோக்சைட்ஸ், கொ. க்ளியோஸ்பேரியாட்ஸ், கொ.டெமாட்டியம்

தாக்குதலின் அறிகுறிகள்

  • பழுத்த பழங்களில் அதிகமான இழப்புகளை ஏற்படுத்தும்
  • இந்நோய் பழம் பழுக்கும் பருவத்தில் அதிகமாக வளர்ச்சியடைகிறது
  • புண்கள் வட்டவடிவத்தில் தாழ்த்தப்பட்டு காணப்படும்
  • வித்து உற்பத்தியின் காரணமாக புண்கள், கருப்பு நிற புள்ளிகளுடன் சால்மன் நிறத்தில் காணப்படும்

நோய்க்காரணி அடையாளப்படுத்துதல் :

  • பூஞ்சை :  பூஞ்சண காலணிகள், கருப்பு நிறமிகளுடன் வெள்ளை நிற பூசண இழையுடனும், எண்ணற்ற கருநிற இழை முடிச்சுகளுடனும் காணப்படும்
  • இலை முடிச்சுகள் - முள்ளுடன் கோள வடிவத்தில் காணப்படும்
  • சிதலகம் - நேராக, பிறை வடிவத்தில், முனைகளில் வீரியம் குறைந்து காணப்படும்
  • அப்ரசோரியா – செண்டு வடிவம், பழுப்பு நிறம் மற்றும் பல வடிவங்களில் காணப்படும்
சாதகமான சூழ்நிலை
  • உகந்த வெப்பநிலை 28-32°C
  • பூஞ்சான் காய் பருவத்தில் மறைந்திருந்து, பழம் பழுக்கும் பருவத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது
  • ஒப்பு ஈரப்பதம் 85-100 சதம்
வட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட புண்கள் பெரிதாகிய புண்கள் சிறுசிதலாக்கம் கருப்பு புள்ளி

பரவுதல் மற்றும் உயர் வாழ்தல் :

  • அறுவடைக்குப் பின் பூஞ்சை, மாற்று பயிர்கள், பயிர் சிதைவு மற்றும் சில களைகளில் நிலைத்து வாழும்
  • மாற்று பயிர்கள் - சோலனேசியஸ் தாவர வகை பயிர்கள் (உருளைக் கிழங்கு, கத்தாp, சுரைக்காய் மற்றும் சோயாபீன்
  • பூஞ்சானும் விதை வழி பரவும் தன்மை கொண்டது
  • வித்திகள், மழையினால் பரவக்கூடியது
  • பெரும்பாலும் மண்ணின் மேற்பரப்புக்கு அருகில் இருக்கும் பழங்களில் தொற்று அதிகமாக இருக்கும்
  • மேல்நிலை நீர்ப்பாசன முறையில் ஒப்பு ஈரப்பதம் மற்றும் அதிக நேர இலை ஈரப்பதத்தின் காரணத்;தால் -  ஆந்த்ராக்னோஸ்லின் வளர்ச்சிக்கு சாகதமாக உள்ளது
மேலாண்மை :
  • மாற்று பயிர்கள் அல்லாத பயிர்களை பயிர் சுழற்சிக்கு பயன்படுத்தவும் மற்றும் தவிர்க்க வேண்டிய பயிர்கள் - உருளைக்கிழங்கு, சோயாபீன்ஸ், கத்தாp மற்றும் சுரைக்காய்
  • இலை மற்றும் பழங்களில் அதிக ஈரப்பதத்தினை குறைக்க தாவரங்களுக்கிடையில் காற்று சுழற்சியை மேம்படுத்த வேண்டும்
  • தழைக்கூளம், இலை மற்றும் பழத்தின் மீது மண் தௌpப்பதை தடுக்கிறது
  • பழங்களின் மேல் உள்ள ஈரப்பதத்தினை குறைக்க, மேல்நிலை நீ;ர்ப்பாசன முறையை தவிர்க்க வேண்டும்
  • வெந்நீர் சிகிச்சை – 50°ஊல் 25 நிமிடத்திற்கு வைக்க வேண்டும்
  • இதனைத் தொடர்ந்து சுடான விதைகளை, குளிர்ந்த நீரில் மூழ்க செய்து, பின் காகிதத்தின் மீது காய வைத்து, பிறகு திரம் பொடி கொண்டு தூவ வேண்டும்

Content validator:
Dr. M. Deivamani, Assistant Professor, Horticulture Research Station, Yercaud-636602. 

Source of Images:
http://vegetablemdonline.ppath.cornell.edu/PhotoPages/Tomatoes/Tom_Botrytis/Tom_BotrytisFS2.htm
http://vegetablemdonline.ppath.cornell.edu/DiagnosticKeys/TomFrt/Gray_Tom.htm
http://vegetablemdonline.ppath.cornell.edu/PhotoPages/Tomatoes/Tom_Botrytis/Tom_BotrytisFS3.htm 
http://www.ipm.ucdavis.edu/PMG/r783103211.html


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்பொறுப்புத் துறப்பு  | தொடர்புக்கு 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016