தாக்குதலின் அறிகுறிகள்
- கருநிறப் புள்ளிகள் காணப்படுவது போமா அழுகல் நோயின் தனித்துவம்
- சிறியது, கருநிறமுடையது, பரு போன்ற வெடிப்புகள் கொண்டது.
- சிறுறபுள்ளிகள் யாவும் கரு இல்லா விதை குடவையாகும் (பிக்னீடியா)
- மிதமான வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம்
நோய்க்காரணி அடையாளப்படுத்துதல்
- பூஞ்சை பூஞ்சையிழை, தடுப்புள்ள கிளையுடையது மற்றும் நிறமற்றது.
- பின் கருப்பு நிறத்திற்கு மாறிவிடும்.
- கரு இல்லத விதைக்குடவை – பட்டையூட்டு வெடிப்பு, இருண்ட கோள வடிவம்.
- பிக்னிடிய வித்துக்கள் - நிறமற்றது, கோள வடிவம்
சாதகமான சூழ்நிலை
- மிதமான வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம்
- தக்காளி பழம், 23°C ல் வேகமாக பழுப்பதனால் இந்நோயின் பாதிப்பு மிக விரைவாக ஏற்படுகிறது.
பரவுதல் மற்றும் உயர் வாழ்தல் :
- விதை வழி பரவக்கூடியது
- பாதிக்கப்பட்ட நாற்றக்கள் மூலம் (அ) பாதிக்கப்பட்ட பயிர் குப்பைகளிலிருந்து மழைச்சிதறல்களால் பரவுகிறது
- பழங்களில் - காயங்கள் மூலமாக, தண்டு வடுக்கல் மூலமாக
- நோய்த் தாக்குதல், காய்களை விட கனிகளில் அதிகமாக ஏற்படுகிறது.
மேலாண்மை :
- சொpசான் டஸ்ட்யைக் கொண்டு விதை நேர்த்தி செய்யவும்
- சுத்தமான விதையை பயன்படுத்தவும்
- தாவரங்கள் ஈரமான நிலையில், அறுவடையை தவிர்க்கவும்
- பழங்களை மூட்டைக் கட்டும்போது ஏற்படும் கலப்படத்தை கட்டுப்படுத்த, 0.5% திரவ தார் சோப்பு கொண்ட 5% வெண்கரக் கரைசலை, சலவை ஊரகமாக பயன்படுத்தவும்.
|
 |
பிம்பிள் போன்றகருப்பு வெடிப்புகள் |
 |
பூஞ்சை வித்துக்கள் |
 |
குறுக்கு பிரிவில் பாதிக்கப்பட்ட தக்காளி |
|