மேலாண்மை : |
|
உழவியல் முறைகள் :
- நெற்பயிரில் தண்டு துளைப்பான் தாக்கப்படும் வளர்ச்சி நிலைகளில், துார் அழுகல் மற்றும் வெண்கதிர் நோய் ஏற்படுவதை முன்னரே கண்டறிய வயலை மேற்பார்வையிடுதல் மிகவும் அவசியமாகும்.
- முன் பயிர் அறுவடைக்குப்பின் அதன் துார்களை முறையாக அகற்றி அழிப்பதன் மூலம் அடுத்த பயிரில் தண்டு துளைப்பானின் தொகையை குறைக்க முடிகிறது.
- தண்டு துளைப்பான் எதிர்க்கும் திறன் கொண்ட இரகங்களான ரத்னா, டிகேஎம் 6, ஐஆர் 20, ஐஆர் 40, ஐஆர் 56, ஏடிடீ 47, ஏடிடீ 48, ஏஎஸ்டி 20, ஐஆர் 36, ஏடிடீ 44, பிஒய் 4, ஏடிடீ 46, மது, காஞ்சனா, சுவர்ணபிரபா, கார்த்திகா, தீப்தி, மற்றும் டெல்லஹம்ஸா ஆகிய இரகங்களை பயிரிடவேண்டும்.
- நாற்று நடுவதற்கு முன் அதிலுள்ள முட்டை திரள்களை அகற்றுவதற்காக நாற்றுக்களின் நுனிப்பகுதியை கத்திரிக்க வேண்டும்.
- முட்டைத் திரள்களை சேகரித்து அழிக்க வேண்டும்.
- பயிரின் முன் வளர்ச்சி நிலைகளில், நெருக்கமான நடவு மற்றும் தொடர்ச்சியான நீர் தேக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.
- தாக்கப்பட்ட துார்களை கையால் இழுத்து அகற்றிவிட வேண்டும்.
- நிலமட்டம் வரை பயிரை அறுவடை செய்த பின் உடனடியாக வயலை உழவு செய்து பயிர்த் துார்களை அகற்ற வேண்டும். இதனால் அடுத்த பயிரில் தண்டு துளைப்பானின் தொகையை குறைக்க முடியும்.
|
|
|
 |
 |
அறுவடைக்கு பின் தூர் கட்டைகளை உழுதுவிடவும் |
தரை மட்டத்திற்கு அருகில் பயிரை அறுவடை செய்யவும் |
 |
 |
ஏடீடி 47 - எதிர்ப்பு திறன் கொண்ட இரகம் |
ஐஆர் 36 - எதிர்ப்பு திறன் கொண்ட இரகம |
|
இரசாயன முறைகள் :
- பொருளாதார சேத அளவு : 2 முட்டை திரள்கள்/மீ (அ) தழைப் பருவத்தில் 10 சதவிகிதம் துார் அழுகல் நோய் (அ) பூத்தல் பருவத்தில் 2 சதவிகிதம் வெண்கதிர் நோய்.
- தண்டு துளைப்பானின் இயற்கையான எதிரிகள் இருக்குமாயின், இரசாயன முறை இடுதலை சற்று தாமதப்படுத்துதல் அல்லது பகிர்ந்து அளித்தல் வேண்டும்.
- புதிதாய் பொரிக்கப்பட்ட புழுக்களை அழிக்க 2 முறைகள் ‘குயினால்பாஸ்’ (அ) “பாஸ்போமிடான்” @ 1000 மிலி/எக்டர் என்ற அளவில் 7 நாட்கள் இடைவெளியில் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும்.
- தண்டு துளைப்பானின் பொருளாதார சேத நிலை அளவைப் பொருத்து கீழ்வரும் ஏதேனும் ஒன்றை தெளிக்க வேண்டும் :
மோனோக்ரோட்டோபாஸ் 36 எஸ்எல் 1000 மிலி/எக்டர் (அ) எண்டோசல்பான் 35 இசி 1000 மிலி/எக்டர் (அ) குயினால்பாஸ் 25 இசி 1000 மிலி/எக்டர் (அ) பாஸ்போமிடான் 40 எஸ்எல் 600 மிலி/எக்டர் (அ) ப்ரோஃபெனோபாஸ் 50 இசி 1000 மிலி/எக்டர்
|
|
|
 |
 |
பாஸ்போமிடான் தெளிக்கவும் |
ப்ரோஃபெனோபாஸ் தெளிக்கவும் |
 |
 |
குயினைல்பாஸ் தெளிக்கவும் |
பூச்சிக்கொல்லி தெளித்தல் |
|
உயிரியல் முறைகள்:
- முட்டை ஒட்டுண்ணியான, “டிரைக்கோகிராம்மா ஜப்போனிகம்” ஒட்டுண்ணியை நாற்று நடவு செய்து 28 நாட்களிலிருந்து வார இடைவெளிகளில் மொத்தம் 3 முறைகள் @ 5 சிசி 1 லட்சம் முட்டை ஒட்டுண்ணிகள்/எக்டர்/1முறை அளிப்பு) என்ற அளவில் அளிக்க வேண்டும். தொடர்ந்து நடவு செய்த பின் 35 மற்றும் 42 வது நாட்களில் ‘டிரைக்கோகிராம்மா ஜப்போனிகம்’ விடுவிக்க வேண்டும்.
- ‘பேசில்லஸ் துருஞ்சியன்சிஸ் வார் குர்ஸ்டகி’ @ 2.5 கிலோ/எக்டர் என்ற அளவில் அளிப்பதன் மூலம் தண்டு துளைப்பானின் முட்டையிடுவதைக் குறைக்க முடிகிறது.
- முட்டை ஒட்டுண்ணி அட்டைகளை காலை நேரத்தில் வயலில் கட்டவும். இலையின் அடிப்பகுதியில் வெளிப்பக்கமாக முட்டைகள் இருக்கும்படியாக ஒட்டுண்ணி அட்டைகளை கட்டிவிடவும்.
- முட்டை ஒட்டுண்ணி அட்டைகளை வயலில் கட்டுவதற்கு மூன்று நாட்கள் முன்பிருந்து கட்டிய பின் ஏழு நாட்கள் வரை இரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிப்பதை தவிர்க்க வேண்டும்.
|
|
|
 |
 |
பேசில்லஸ் துரியன்ஜிஸ் தெளிக்கவும் |
முட்டை ஒட்டுண்ணி |
 |
 |
டிரைக்கோகிராமா முட்டை அட்டை |
டிரைக்கோகிராமா முட்டை அட்டை |
|
இயற்கை எதிரிகள் மற்றும் கொன்றுண்ணிகளைப் பாதுகாத்தல் :
இயற்கை எதிரிகள :
- டெட்ராஸ்டிக்கஸ் ஸ்கோயெனோபீ - குளவி
- டிலோமோமெளஸ் ரோவானி - குளவி
- ஸ்டினோபிரகான் நைஸ்வில்லீ - பிரக்கோனிடே
- கொட்டீஸியா ஃபிலேவிபெஸ் - பிரக்கோனிடே
- அக்ரியோக்னிமா பிக்மே - தட்டான் பூச்சி
கொன்றுண்ணிகள்:
- லைக்கோஸா சூடோஅன்னுலேட்டா - சிலந்தி கொன்றுண்ணி
- மெட்டியோக் விட்டாட்டிகோலிஸ் - பாச்சை
|
 |
 |
இயற்கை எதிரி - கோடிசியா கிளேவிபெஸ் |
இயற்கை எதிரி - மெட்டியோக் விட்டாட்டிகோலிஸ |
 |
|
கொன்றுண்ணி- லைக்கோஸா சூடோஅன்னுலேட்டா |
|
|
பொறி முறைகள் :
- 5 எக்டருக்கு 1 விளக்குப் பொறி வைத்து அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அதனை கொல்ல வேண்டும்.
- பூச்சி கொன்றுண்ணிப் பறவைகளை ஊக்குவிக்க, பறவை நிற்பதற்கான பறவை இருக்கையை வயலில் வைக்க வேண்டும்.
- முறையான காலக்கட்டுப்பாடு முறையை மேற்கொள்வதற்கு இனக்கவர்ச்சிப் பொறி வைத்து (@ 10-12/எக்டர்) அதன்மூலம் கண்காணிக்க வேண்டும்.
- முறையான கட்டுப்பாடு முறையை மேற்கொள்வதற்கு இனக்கவர்ச்சிப் பொறி வைத்து (@ 10-12/எக்டர்) அதன்மூலம் கண்காணிக்க வேண்டும். மேலும் 15-20 நாட்கள் இடைவெளியில் இனக்கவர்ச்சிப் பொருளை மாற்ற வேண்டும்.
|
|
|
 |
 |
இனக்கவர்ச்சி பொறி |
பறவை அமரும் பரண் அமைக்கவும் |
மேலே செல்க |