மேலாண்மை: |
|
உழவியல் முறைகள் :
- அறுவடைக்கு பின்னர் நிலத்தில் நீரை தேக்கி வைத்தல், வரப்புகளை சீர் செய்தல், வரப்புகள்/பாத்திகளை சுத்தம் செய்வதால் முதிர்வெட்டுக்கிளிகளை இரவு நேரத்தில் நேரடியாக இலைப்பரப்பிலிருந்து அகற்றலாம்.
- வரப்புகளை சீர் செய்தல் மற்றும் வயலை உழவு செய்வதால் முட்டைகள் மண்ணின் மேற்பரப்பிற்கு வரும். அவற்றை பறவைகள் பொறுக்கிக் உண்ணும்.
|
 |
 |
வாத்துகளை வயலில் விடவும் |
நாற்றங்காலில் நீரை தேக்குவதால் மறைந்திருக்கும் புழுக்களை வெளிக்கொண்டு வரலாம் |
|
|
இரசாயன முறைகள் :
- பியூட்டா ஹெக்ஸா குளோரைடு (5-10%) அல்லது மிதைல் பாரத்தியான் 2 % @ 25-30 கிலோ/எக்டர் என்ற அளவில் பயிர்களின் மேல் துாவ வேண்டும்.
- மாலத்தியான் 5% @ 20 கிலோ/எக்டர் என்ற அளவில் பயிர்களின் மேல் தூவ வேண்டும்.
- பூச்சிக்கொல்லிகளை இலைவழித் தெளிப்பாக அளிப்பதன் மூலமாகவும் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்தலாம்.
|
 |
 |
மாலத்தியான் தூவவும் |
பி.எச்.சி. தூவவும் |
|
|
உயிரியல் முறைகள் :
- சிறு கொம்புடைய வெட்டுக்கிளிகளின் முட்டைகளின் மீது குளவிகள் ஒட்டுண்ணியாகச் செயல்பட்டு அழிக்கின்றன. ஈ வகை மற்றும் கரையான்கள் வெட்டுக்கிளிகளின் முட்டைகளை இரையாக உட்கொள்கிறது.
- வெட்டுக்கிளியின் இளங்குஞ்சுகள் மற்றும் முதிர்பூச்சிகள் இரண்டையும் பல்வேறு எறும்பு சிற்றின வகைகள் உட்கொள்கின்றன.
- பறவைகள், வெளவால், வயல் எலிகள், சுண்டெலி, காட்டுப் பன்றிகள், நாய்கள், மரவட்டை உயிரிகள், மீன்கள், நீர்-நில வாழ்விகள், ஊர்வன மற்றும் குரங்குகள் வெட்டுக்கிளிகளை இரையாக உட்கொள்கின்றன.
|
 |
 |
முட்டை ஒட்டுண்ணி - டிலோமோனஸ் ரீமஸ் |
படைப்புழுவிலிருந்து ஒட்டுண்ணி புழு வெளிவரும் |
 |
|
கூட்டுப்புழு ஒட்டுண்ணி - நெட்டிலியா சிற்றினம் |
|
மேலே செல்க |