|  | பண்ணை இயந்திரங்கள்
 
 
 
            
              | நவீன நேரடி நெல் விதைக்கும் கருவி |  |  
              | 
                
                  | செயல் | : | சீரான விதைப்பிற்கும், ஒரு சதுர மீட்டரில் பயிர் எண்ணிக்கையை பாதுகாத்தலும். |  
                  | விபரங்கள் | : |    |  
                  | இயந்திர சக்தி ஆற்றலின் தேவை | : | மனித ஆற்றலால் இயங்கப்படுபவை |  
                  | மொத்த அளவு | : | 2000 x 1500 x 640 மிமீ |  
                  | எடை | : | 10 கிலோ |  
                  | செயல் எல்லை | : | 1.1  (எக்டர்/நாள்) |  
                  | பொதுவான தகவல்கள்        :
 
 விதை உருளை, முக்கிய தண்டு, நிலத்தடிச் சக்கரம், மிதவைகள், சால் அமைக்கும் பாகம், மற்றும் கைப்பிடி ஆகியவற்றைக் கொண்ட அமைப்பு.  விதை உருளைக் கருவி மிகை வளைவுரு வடிவமாக (முனை முறிக்கப்பட்ட (கூம்பு வடிவம்) 200 மிமீ வட்ட குறுக்களவும் 12 மிமீ தட்டையான கூர்முனை உலோகம் 25 மிமீ நீளம் கொண்டும், சுழற்சி அச்சுக்கு இணையாக அமைந்திருக்கும்.  கூம்பின் சரிவானப் பகுதி, அளவித்துளைகளுக்குள் விதைகள் எளிதாக விழுவதற்கு உதவுகின்றது.  விதை அளவுத் துளைகள் 10 மிமீ வட்டட குறுக்களவுகளாக மொத்தம் 9 எண்ணிக்கைகள் உருளையின் சுற்றளவு வழியாக அமைக்கப்பட்டுள்ளது.  இவை வரிசை-வரிசை இடைவெளியாக 200 மிமீ அளவு கொண்டு அதனின் இரு முனைகளிலும் உள்ளது.   இரு பக்கங்களிலும் மூழ்குதலைத் தவிர்ப்பதற்கு இரண்டு மிதவைகள் உள்ளன.  இதனால் மொத்த இயந்திர அமைப்பை எளிதாக இழுக்கவும் உதவுகின்றது.
 
 
 |  
                  | அமைப்பின் மதிப்பு (தோராயமாக) | : | ரூ 4800/- |  
                  | சிறப்பம்சங்கள் | : | 
                    சீரான விதை விதைப்பு மற்றும் பயிர் எண்ணிக்கைவிதையளவு குறைப்பு மற்றும் பயிர் அடர்த்தி குறைத்தலின் செலவு குறைதல்.குத்துக்களில் விதைகள் சரியாகப் போடப்படுதல்.  மேலும் தொடர்ச்சியான துளையிடுலைத் தவிர்க்கிறது.  |  |  |  
              | 
 |  
              |  | மேலே செல்க |  
 
            
              |  | நெல்- தக்கைப்பூண்டு விதைகள் சேர்த்து விதைக்கும் கருவி |  
              |  | 
                
                  | செயல் | : | இவை நெல் விதைகளை 3 வரிசையிலும் தக்கைப்பூண்டு விதைகளை 3 வரிசைகளிலும் ஒரே மாதிரியாக விதைக்கிறது. |  
                  | விபரங்கள் | : |  |  
                  | இயந்திர சக்தி ஆற்றலின் தேவை | : | மனித ஆற்றலால் இயங்கப்படுபவை |  
                  | மொத்த  அளவு | : | 1650 x 1600 x 690 மிமீ |  
                  | எடை | : | 15 கிலோ |  
                  | செயல் எல்லை | : | 0.8 எக்டர்/நாள் |  
                  | பொதுவான தகவல்கள்  :
 
    விதைக்குங்கருவியில் மொத்தம் இரண்டு உருளை, ஒரு தரைச்சக்கரம் (உருளை)  மற்றும் ஒரு கைப்பிடி ஆகியவை உள்ளன.  நெல் விதையளவை 72-75 கிலோ/எக்டர் அளவாகக் குறைக்கிறது.  விதை விதைப்பான், முன்னரே முளைவிட்ட நெல் விதைகள், மற்றும் தக்கைப்பூண்டு விதைகளை மாற்று வரிசைகளில் சேற்றுழவிட்ட மண்ணில் ஒரே நேரத்தில் விதைக்கிறது.  இந்த எந்திர விதைப்பானின் நன்மையானது, பசுந்தாள் எருப்பயிரின் விதைப்பையும்,  சேர்த்து விதைப்பதால் தனியாக பயிரிடத் தேவையில்லை.
 
 |  
                  | அமைப்பின் விலை (தோராயமாக) | : | ரூ 6,000/- |  
                  | சிறப்பம்சங்கள் | : | 
                    விதை விதைப்பு மற்றும் பயிர் எண்ணிக்கை  சீராக இருக்கும்.விதையளவு குறைப்பு மற்றும் பயிர் அடர்த்தி குறைப்பதற்காகும் செலவு குறைகிறது குத்துக்களில் விதைகள் சரியாகப் போடப்படுதல் மேலும் தொடர்ச்சியான துளையிடுதலை தவிர்க்கிறது.  பசுந்தாள் உரப்பயிரினால் போட்டிக்குரிய களைகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது.  |  |  
              | 
 |  
              |  | மேலே செல்க |  
 
            
              | நெல் நாற்று நடும் கருவி |  |  
              |  |  
              | 
                
                  | செயல் | : | பாய் வகை நெல் நாற்றுக்களை நட உதவுகிறது.  அனைத்து நடவு வகை நெல் இரகங்களுக்கும் ஏற்றது. |  
                  | விபரங்கள் | : |  |  
                  | வகை | : | மனித ஆற்றலால் இயங்கப்படுபவை |  
                  | இயந்திர சக்தி ஆற்றலின் தேவை | : | ஒரு இயக்கி மற்றும் பாய் நாற்றுக்களை எடுத்துச் செல்வதற்கு ஒரு வேலை ஆள். |  
                  | மொத்த அளவு | : | 1230 x 1250 x 835 மிமீ |  
                  | எடை | : | 17 கிலோ |  
                  | செயல் ஆற்றல் | : | 0.25 கிலோ/நாள் |  
                  | பொதுவான தகவல்கள்
 இந்த இயந்திரமானது, ஒரு நாற்றுக்களை வைக்கும் தட்டு, கவடுகள், கைப்பிடி மற்றும் பல பகுதிகளை கொண்டுள்ளது.  கைப்பிடியை (அழுத்துவதன்) இயக்குவதன் மூலம் கவடுகள்  நாற்றுக்களை எடுத்து 6 வரிசைகளில் நடவு செய்யும்.  ஒவ்வொரு முறை கைப்பிடியை இயக்குவதன் மூலம், நாற்றுக்கள் இருக்கும் தட்டு ஓரத்தை நோக்கிச் செல்லும்.  இதனால் கவடுகள் நாற்றுக்களை சீராக எடுத்துச் செல்ல முடிகிறது.  கைப்பிடியைத் துளைக்கும் போது, அமர்ந்திருக்கும் இயக்கி, இயந்திரத்தை குறிப்பிட்ட இடைவெளியில் சற்று இழுக்க வேண்டும்.  வரிசை இடைவெளி 200 மிமீ.
 |  
                  | இயந்திரத்தின் விலை | : | ரூ.7500/- |  
                  | சிறப்பம்சங்கள் | : | 
                    
                      | ஒரு (முறையில்) நேரத்தில் 6 வரிசைகளை நடவு செய்துவிடும். |  |  |  |  
              | 
 |  
              |  | மேலே செல்க |  
 
            
              |  | நெல் விதையுடன் சேர்த்து உரமிடும் கருவி: |  
              |  | 
                
                  | செயல் | : | நேரடி நெல் விதைப்பு மற்றும் ஒரே சமயத்தில் உரமளித்தல் |  
                  | தனிக்குறிப்பீடு | : |  |  
                  | வகை | : | ஏற்றப்பட்ட கருவி |  
                  | இயந்திர சக்தி தேவை | : | 35-45 (குதிரைத்திறன்) டிராக்டர் |  
                  | செயல் ஆற்றல் | : | 3 எக்டர்/நாள் |  
                  | பொதுவான தகவல்கள் | : |  |  
                  | இயந்திரத்தின் விலை 
(தோராயமாக) | : | ரூ.45,000/- |  
                  | சிறப்பு அம்சங்கள்:
 
                      விதையளவு மற்றும் உர அளவு ஆகியவை குறைக்கிறது.35 குதிரைத்திரன் கொண்ட டிராக்டரால் இயக்கப்படுகிறதுதேவையான அளவு உரத்தை வேர் மண்டலத்தில் அளிக்கிறது.எனவே சிறந்த பயிர் வளர்ச்சி மற்றும் அதிக மகசூல் கிடைக்கிறது.செலவு குறைப்பு  65 சதவிகிதம்வேலையாட்கள் குறைப்பு: 84 சதவிகிதம் (உடல் உழைப்பு குறைப்பு)செயல் ஆற்றலின் விலை: ரூ.800 /         ha |  |  
              | 
 |  
              |  | மேலே செல்க |  
 
            
              | நெல் வரிசையில் களையெடுக்கும் உருளைக்கருவி |  |  
              | 
                
                  | செயல் | : | நெற்பயிரின் வரிசைகளுக்குக்கிடையே களை எடுத்தல் |  
                  | வகை | : | மனித ஆற்றலால் இயங்கப்படுபவை |  
                  | சுழலும் பகுதியின் எண்ணிக்கை | : | இரண்டு |  
                  | இயக்கிகளின் எண்ணிக்கை | : | ஒன்று |  
                  | மொத்த அளவு | : | 37 செ.மீ x 1.4 மீ |  
                  | எடை | : | 5-6 கிலோ |  
                  | பொதுவான தகவல்கள் :     நெல் களையெடுக்கும் கருவியில் இரண்டு கூம்பு போன்ற சுழழும் பகுதிகள் அமைந்திருக்கும்.  இவை, எதிர்திசை அமைவில் ஒன்றின் பின் ஒன்றாகச் சுழலும் பகுதியில் ஏற்றப்பட்டுள்ளது.  மென்மையான பற்கள் (ரம்பப்பல்) போன்று கூர்முனைத் தகடுகள் . சுழழும் பகுதியின் மேல் மாற்று திசையில் அமைக்கப்பட்டிருக்கும்.  மேலும் சுழழும் பகுதிகள் முன்னும் பின்னுமாக, மேற்புற மண்ணின் 3 செ.மீ அளவில் சுழல்வதால், களைச்செடிகள் மண்ணுக்குள் புதைக்கப்படுகிறது.  மேலும், இக்கருவியானது எந்த ஒரு இழுத்தல், தள்ளுதல் செயல்கள் இன்றி ஒருமுறை நேராக முன்நோக்கிச் செலுத்துவதன் மூலமே களைச்செடிகளை அழிக்கின்றது.
 
 |  
                  | கருவியின் விலை  (ஏறக்குறைய மதிப்பு) | : | ரூ.1500/- |  
                  | சிறப்பம்சங்கள் | : | 
                    ஒரு தனி மனிதரால் எளிதாகச் செயல்படுத்த முடிகிறது.சேற்றுழவு மேற்கொண்ட மண்ணில் இந்த களைப்பான் மூழ்காது.வயலில் கருவியின் செயல் ஆற்றல் 0.18 எக்டர்/நாள் ஆகும்.  |  |  |  
              | 
 |  
              |  | மேலே செல்க |  
 
            
              |  | இரு வரிசை விரல் போன்ற நெல்  சுழற்களைப்பான் |  
              |  | 
                
                  | செயல் | : | நெல் வரிசைப்பயிர்களுக்கிடையே களையெடுத்தல் |  
                  | வகை | : | மனித ஆற்றலால் இயங்கப்படுபவை |  
                  | இயந்திர சக்தி/ஆற்றல் தேவை | : | - |  
                  | செயல் ஆற்றல் | : | 0.35 எக்டர்/நாள் |  
                  | பொதுவான தகவல்கள் | : |  |  
                  | கருவியின் விலை (ஏறக்குறைய மதிப்பு) | : | ரூ 900/- |  
                  | சிறப்பு அம்சங்கள்
 
                    20 செ.மீ மற்றும் 25 செ.மீ அளவுகளாக வரிசை இடைவெளியை மாற்றி அமைத்தல்.ஒருவரே எளிதாக கருவியைத் தொடர்ச்சியாக இயக்க முடியும்.கருவியை முன்னும் பின்னும் இழுப்பதன் மூலமாக களைச் செடிகளை மண்ணில் புதைத்து, மண்ணுக்கு காற்றோட்டம் அளிக்கிறது.செலவு குறைப்பு: 80 சதவிகிதம்வேலை ஆட்கள் குறைப்பு: 60 சதவிகிதம்கருவி இயங்கும் செலவு: ரூ.250/எக்டர் |  |  
              | 
 |  
              |  | மேலே செல்க |  
 
            
              | மின் கலனால் இயங்கும், எடுத்துச் செல்லக்கூடிய நன்செய் நில களையெடுக்குங்கருவி |  |  
              | 
                
                  | செயல் | : | திருந்திய நெல் சாகுபடி வயலில் களையெடுக்கப் பயன்படுத்துவது |  
                  | தனிக் குறிப்பீடு | : |  |  
                  | வகை | : | மனித ஆற்றலால் இயங்கப்படுபவை. |  
                  | எந்திர ஆற்றலின் தேவை | : |  |  
                  | செயல் ஆற்றல் | : | 0.2-0.3 எக்டர்/நாள் |  
                  | பொதுவான தகவல்கள் | : |  |  
                  | கருவியின் விலை | : | ரூ.8000/- |  
                  | சிறப்பு அம்சங்கள் | : | 
                    நெற்பயிர் வரிசைக்கிடையே பயன்படுத்தும் களையெடுக்குங்கருவியை (உருளைக் களைப்பான்) விட இக்கருவியை எளிதாக இயக்க முடிகிறது.எவ்வித கடினமும் இன்றி எளிதாக இயக்க முடிகிறது. களையெடுத்தலின் செயல்திறன் : 95 சதவிகிதம் கருவி இயங்கும் செலவு: ரூ.625/எக்டர்  |  |  |  
              | 
 |  
              |  | மேலே செல்க |  
 
            
              |  | தான் இயங்கும், செங்குத்தாக ஏற்றிச்செல்லும் அறுவடை எந்திரம் |  
              |  | 
                
                  | செயல் | : | நெற்பயிர் அறுவடை செய்தல் |  
                  | மொத்த அளவு (நீளம் x அகலம் x உயரம்) | : | 2200 x 950 x 1100 மிமீ |  
                  | செயல் ஆற்றல் | : | 0.125 எக்டர்/1 மணி நேரம் (60 நிமிடங்கள்) |  
                  | பொதுவான தகவல்கள்
 
 செங்குத்தான ஏற்றிச்செல்லும்  அறுவடை எந்திரம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தால் உருவாக்கப்பட்டது.  இவ்வியந்திரத்தின் எடை மிகவும்  குறைவாக இருப்பதால் ஒரு வயலிலிருந்து மற்றொரு வயலுக்குக் கொண்டு செல்ல எளிதாக உள்ளது.  இதனை, இயக்குவதால் களைப்பு (சோர்வு) ஏற்படாது.  சிறு விவசாயிகளும் வாங்கக் கூடிய அளவில் விலையும் குறைவாக உள்ளது.  மற்ற நெல் அறுவடை எந்திரங்கள், கூட்டு அறுவடை இயந்திரம் மற்றும் கை அறுவடை ஆகியவற்றோடு ஒப்பிடும்போது இவை மிகவும் பொருளதார அடக்க விலையாகவே உள்ளது.
 
 |  
                  | கருவியின் விலை (ஏறக்குறைய மதிப்பு) | : | ரூ.60,000/- |  |  
              | 
 |  
              |  | மேலே செல்க |  
 
            
              | நெல் அறுவடை இயந்திரம் |  |  
              | 
                
                  | செயல் | : | சாயாத நெற்பயிர் இரகங்களை  அறுவடை செய்வதற்கும், அதனைத் துாற்றுவதற்கும் பயன்படுகிறது.  இது தானாகவே இயங்கும் அமைப்பு.  மேலும் அதன் செயல் எல்லை அகலம் 0.75  மீ ஆகும் |  
                  | விபரங்கள் | : |  |  
                  | வகை | : | தானியங்கி வகை |  
                  | இயந்திர ஆற்றலின் தேவை | : | 3 குதிரைத்திறன் (hp) மண்ணெண்ணெய் இயந்திரம்/இயக்கி, அறுவடை செய்தபின் வெட்டப்பட்ட பயிர்ச் செடிகளை சேகரித்து கட்டுவதற்காக, 2 பெண் வேலையாட்கள். |  
                  | மொத்த அளவு | : | 2200 x 850 x 1170 மிமீ |  
                  | செயல் ஆற்றல் | : | 1 எக்டர்/நாள் |  
                  | பொதுவிபரங்கள்
 
     இவ்வியந்திரத்தில் பல்சக்கரப்பெட்டி, சக்கரங்கள், கைப்பிடி, கதிர்வெட்டும் அமைப்பு, நட்சத்திர சக்கரங்கள் மற்றும் கதிர் சேகரிக்கும் தொகுதி ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன.  வயலைச் சுற்றி நான்கு பக்கங்களும் கையால் (மனித ஆற்றல்) 0.5 மீ அகலம் கொண்டு அறுவடை செய்ய வேண்டும்.  பின் அறுவடை செய்தவற்றை வயலிலிருந்து அகற்றி இயந்திர செயல்பாட்டிற்காக இடம் அமைத்துத் தர வேண்டும்.  வயலின் முன் பகுதியில், ஒரு மூலையில் மட்டும் முதலில் 2 x 1.5 மீட்டர் அளவுப் பரப்பை கையால் அறுவடை செய்து, இயந்திரத்தை வயலில் நிற்க வைக்க வேண்டும். அறுவடை செய்த பயிரை அறுவடை இயந்திரத்திற்கு வலதுபுறம் வைப்பதால் இயந்திரம் எப்பொழுதும் இடது புறமாகவே திருப்பப்பட வேண்டும்.   
 
 |  
                  | இயந்திரத்தின் விலை  (ஏறக்குறைய மதிப்பு) | : | ரூ. 1,00,000/- |  
                  | சிறப்பு அம்சங்கள் | : | 
                    எரிபொருள் நுகர்வு - 1 லிட்டர்/எக்டர் வெட்டப்படுதலின் உயரம் -  50 மிமீ                                      வேலையாட்கள்                               - 1 இயக்கி மற்றும்  2 பெண் வேலையாட்கள் (அறுவடை செய்ததில் வெட்டப்பட்ட பயிர்களை சேகரித்து கட்டு அமைக்க) |  |  |  
              | 
 |  
              |  | மேலே செல்க |  
 
            
              |  | நெற்பயிருக்கான சிறு கூட்டு அறுவடை இயந்திரம் |  
              |  | 
                
                  | செயல் | : | கூட்டு செயல்களான அறுவடை செய்தல், கதிரடித்தல் மற்றும் கதிர்  துாற்றுதல் ஆகியவற்றை செயல்படுத்துகிறது. |  
                  | விபரங்கள் | : |  |  
                  | வகை | : | மனித ஆற்றலால் இயங்கப்படுபவை |  
                  | செயல் ஆற்றல் | : | 1 எக்டர்/நாள் |  
                  | இயந்திரத்தின் விலை (ஏறக்குறைய மதிப்பு) | : | ரூ.3,00,000/- |  
                  | கருவி இயக்கத்திற்கான செலவு | : | ரூ 1300/எக்டர் |  
                  | சிறப்பு அம்சங்கள் | : | 
                    சிறு விவசாயிகள் மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு ஏற்றது.  உள் புக முடியாத வயல்களுக்கு கூட எளிதாகக் கொண்டு செல்ல முடியும்.செலவு குறைப்பு (சேமிப்பு): 80 சதவிகிதம்வேலையாட்கள் குறைப்பு (சேமிப்பு) : 91 சதவிகிதம் |  |  
              | 
 |  
              |  | மேலே செல்க |  
 
            
              | மனித ஆற்றலினால் இயங்கும் உரமிடும் கருவி |  |  
              | 
                
                  | செயல் | : | குறுணை வடிவ உரங்களான யூரியா, டை அமோனியம் பாஸ்பேட் போன்ற உரங்களை வயலில்  சீராக அளிக்கிறது. |  
                  | வகை | : | மனித ஆற்றலால் இயங்குபவை |  
                  | ஆற்றல் மூலம் |  | 1 நபர் |  
                  | கொள்கலம் அடிப்பகுதி வடிவம் | : | கூம்பு வடிவம் |  
                  | நீளம் (மிமீ) | : | 280 |  
                  | அகலம் (மிமீ) | : | 410 -415 |  
                  | உயரம் (மிமீ) | : | 441 -450 |  
                  | கொள்கலம் கொள்திறன் குறுக்களவு  (கிலோ) | : | 12-15 |  
                  | அளவுத் துளையின் வடிவம் | : | வட்டம் |  
                  | பரப்பும் சட்டி சுழற்சியின்  குறுக்களவு (மி.மீ) | : | 225 -273 |  
                  | கொள்கலம் அடிப்பகுதியிலிருந்து செங்குத்தான இடைவெளி | : | 24-44 மி.மீ |  
                  | துடுப்புகளின் எண்ணிக்கை | : | 8 |  
                  | எடை (கிலோ) | : | 3.8 -10 |  
                  | பொதுவான தகவல்கள்
 
    இக்கருவியில், நெல் கொள்கலம் மெலிந்த அடிப்பகுதியுடன் காணப்படும். இதில் பக்க சரிவாக்கு 46 அளவாக இருக்கும்.  உருளையான சட்டி போன்ற பாகத்தில் X பகுப்புகள் செங்குத்தான அச்சுடன் (தண்டுடன்) உரக்கொள்கலத்திற்கு கீழே பொருத்தப்பட்டிருக்கும்.  மேலும் பற்சக்கரம் அமைப்பு மூலம் கைப்பிடியால் இவை சுழலப்படுகிறது.  கைப்பிடி மற்றும் பரப்புதல் சட்டி இரண்டுக்கும் இடையே உள்ள பல்சக்கர விகிதம் 1:8:4 ஆகும்.  அளவிடப்பட்ட உரங்கள் மாற்றி அமைக்கும் வெளிப்பகுதி வழியாக சட்டியில் விழுகின்றது.  பின் மைய விலக்கு விசையினால் உரங்களை சீராக பரப்புகின்றது.  இயந்திரத்தை அதன் மேற்பகுதி (பட்டை போன்று) யின் மேல் ஏற்றப்பட்டு முன்நோக்கி (2.0 கி.மீ/1 மணி நேரம்) வேகத்தில் இயக்க வேண்டும். |  |  |  
              | 
 |  
              |  | மேலே செல்க |  
 
          
            |  | நெல் துாற்றும் இயந்திரம் |  
            | 
 | 
              
                | செயல் | : | துாற்றுதல் மூலமாக நெல்லை சுத்தம் செய்தல் |  
                | வகை | : | எந்திர சக்தியால் இயங்குபவை (தொடர்ச்சியானவை) |  
                | மொத்த அளவு | : | 1210 மிமீ x 960 மிமீ x 1,430 மிமீ |  
                | சோதனை முடிவுகள் |  |  |  
                | ஏற்ற பயிர்கள் | : | நெற்பயிர் |  
                | செயல் ஆற்றல் | : | 7.5    q/h |  
                | இயந்திர ஆற்றல் தேவை | : | 1 குதிரை திறன் மின் இயக்கம் |  
                | வேலையாட்கள் தேவை | : | 2 |  
                | துாற்றுதலின் செயல்திறன் | : | 97 சதவிகிதம் |  
                | இயந்திரத்தின் மதிப்பு (விலை) | : | ரூ.7000/- |  |  
            | சிறப்பு அம்சங்கள் :
 
 
                 வேறு முறைகளால் அல்லது நெல் கதிரடிக்கும் இயந்திரத்தால் முன்னரே கதிரடித்த நெல்லினை துாற்றும் இயந்திரம் மூலம் சுத்தம் செய்கின்றன.  இதன் மேல்பகுதியில் உணவுக் கொள்கலம் இருப்பதால், கதிரடித்த நெல், உமி மற்றும் வைக்கோல் பாகங்களை கொள்கலம் எடுத்துக் கொள்கிறது.  அடிப்பகுதியில் அமைந்திருக்கும் காற்றுத்துருத்தி, காற்றுாட்டத்தை வழங்கி, நெல் வைக்கோல், உமி மற்றும் மற்ற தேவையற்ற பொருட்களைப் பிரிக்கின்றது.  துகள்கள் உமி மற்றும் வைக்கோல் அனைத்தும் வெளிவாயில் வழியாக வெளிவருகின்றது.  எனவே, சுத்தம் செய்த நெல்மணிகள் மற்றொரு வழியாக வெளியே எடுத்துக்கொள்ளப்படுகிறது.  |  
            | 
 |  
            |  | மேலே செல்க |  
 
          
            | நெல் புழுங்க வைத்தல் அமைப்பு |  |  
            | 
              
                | செயல் | : | நெல்லை சீராக வேக வைத்தல் |  
                | விபரங்கள் |  |  |  
                | மொத்த அளவு  (ஆழம்  x  உயரம்) (மிமீ) | : | 650 x  900 |  
                | செயல் ஆற்றல் | : | 125 கிலோ/பிரிவு (தொகுதி) |  
                | தேவையான இயந்திர செயல்திறன் | : | 5 கிலோ விறகுக்கட்டை/பிரிவு |  
                | பொதுவான தகவல்கள்
 
     நெல் புழுங்க வைத்தல் உருளை, 20 காஜ் தடிப்புடன் கூடிய துத்தநாகம் பூசிய இரும்புத் தகடால் செய்யப்பட்டவை.  ஒரு மூடியால் மூடப்பட்டிக்கும்.  இந்த உருளை மூன்று சரி பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.  இதில், மேல்பகுதியிலுள்ள மூன்றில் இரு பாக அமைப்புகளில் புழுங்க வைத்துலுக்கான நெல்லினைக் கொண்டிருக்கும்.  கீழ்பகுதியிலுள்ள மூன்றாவது பாகத்தில் தண்ணீர் இருக்கும்.  இவை நெல் வேக வைத்தலுக்கான நீர் ஆவியை அளிக்கிறது.  துளையிடப்பட்ட சாய்ந்தத் தகடு, துளையிடப்பட்ட குழாய்களுடன் இருக்கும்.  இவை புழுங்க வைத்தல் அறையிலிருந்து நீராவி அறையைப் பிரிக்கிறது.  பக்கவாட்டு துளையிட்ட குழாய்கள் முன் (முதன்மை) நீராவிக் குழாயுடன் பொருத்தப்பட்டிருப்பது, மொத்த புழுங்க வைத்தல் (நெல் வேக வைத்தல்) அறையினை நிறைய எண்ணிக்கையிலான சிறு சிறு அறைகளாகப் பிரித்து, சீரான மற்றும் ஒரே நேரத்தில் நெல் புழுங்க வைத்தல் ஆகிய செயல்களுக்கு உதவுகிறது.  துளையிடப்பட்ட சரிவுத்தரை புழுங்க வைத்த நெல்லை தானாகவே இறக்குகிறது.  உருளையில் இருக்கும் தண்ணீர், விறகுக்கட்டை அல்லது மற்ற வேளாண் கழிவுப் பொருளை எரித்தலின் மூலம் சூடாக்கப்படுகிறது.  நெல் வேக வைத்தல் முடிந்தபிறகு, மீதமுள்ள சுடுநீரை அடுத்த பிரிவு (தொகுதி) நெல்லுக்குப் பயன்படுத்திக் கொள்கிறது. 
 
 |  
                | கருவியின் மதிப்பு (ஏறக்குறைய மதிப்பு) | : | ரூ.4500/- |  
                | இயக்குவதற்கான செலவு | : | ரூ.7/மணி நேரம் |  
                | சிறப்பு அம்சங்கள் | : | 
                  சீரான புழுங்க வைத்தல் மற்றும் அதிக அரிசி மீட்பு.ஊற வைக்கப்பட்ட முதல் பிரிவு நெல்லை வேக வைப்பதற்கு 45 நிமிடங்கள் மற்றும் பின் வரும் தொகுதிகளை வேக வைத்தலுக்கு 25 நிமிடங்கள் போதுமானது. நெல் புழுங்க வைத்தல் (வேக வைத்தல்) இல்லாத நேரத்தில் இவ்வமைப்பை சேமிப்பும் குதிராகப் பயன்படுத்திக் கொள்ளலாம். |  |  |  
            | 
 |  
            |  | மேலே செல்க |  
 
          
            |  | தமிழ்நாடு வேளாண்மைப் பல்லைக்கழகத்தால் கண்டுபிடிக்கப்பட்ட பூச்சிப் பொறி |  
            |  | 
              
                | செயல் | : | சேமிப்புத் தானிய பூச்சிகள்,இதன் உள்ளே உள்ள சிறு துளைகளின் வழியே கீழ்நோக்கிச் சென்று, அடியில் வைத்திருக்கும் குழியில் விழுந்துவிடுகின்றன. |  
                | மொத்த அளவுகள்  (நீளம் x அகலம் x உயரம்) 
 | : | 27 மிமீ குறுக்களவு மற்றும் 150 மிமீ நீளம் |  
                | செயல் ஆற்றல் | : | சேமிப்புக்குதிராக 25-50 கிலோ கொள் அளவு கொண்டதாக செயல்படுகிறது. |  
                | பொதுவான தகவல்கள்
 
       சேமிக்கப்பட்ட பொருட்களிலுள்ள பூச்சிகளின் சிறப்பு அம்சங்கள், காற்று நோக்கி ஈர்ப்பு, காற்றூட்ட பகுதியை நோக்கி நகரும் போக்கு, மாலை மற்றும் விடியல் போது பூச்சிகளின் செயல்பாடு போன்றவைகளை பொறி வடிவமைக்க பயன்படுத்தி வருகின்றனர். சேமிப்புத் தானிய பூச்சிகளான சிவப்பு மாவு வண்டு, இரம்பப் பல் உடைய தானிய வண்டு, அரிசி வண்டு, நெல் அந்துப்பூச்சி, மஞ்சள் வண்டு, கிடங்கு வண்டு, பயிறு வண்டு, நிலக்கடலை வண்டு, தட்டை நெல் வண்டுகள் போன்ற பூச்சிகள் கூட்டமாக வாழ்பவை.  இப்பூச்சிகள் பொறியிலிருக்கும் சிறு துளைகளின் வழியே உள்ளே சென்று, கீழ்நோக்கிச் சென்று, அடியில் வைத்திருக்கும் குழியில் விழுந்துவிடுகின்றன. 
 
 |  
                | பூச்சிப்பொறியின் விலை  (ஏறக்குறைய மதிப்பு) | : | ரூ.75/- |  
                | சிறப்பு அம்சங்கள் | : | 
                  சேமிப்புக் குதிருக்கு மட்டும் ஏற்றதாக உள்ளது.30-45 செ.மீ குறுக்களவு மற்றும் 25 கிலோ கொள்அளவு உடைய குதிரில் 2 அல்லது 3 பொறிகளை 15-20 செ.மீ ஆழத்தில் வைப்பதால் மிகுந்த நன்மை கிடைக்கிறது. இம்முறையான பூச்சி பிடித்தலில், எவ்வித பூச்சிக் கொல்லி மருந்துகளும் பயன்படுத்தப்படுவதில்லை இதனை பயன்படுத்துவதும், பராமரிப்பதும் மிகவும் எளிதானது |  |  
            | 
 |  
            |  | மேலே செல்க |  |