தோட்டக்கலை :: மலரியல் பயிர்கள் :: கிளாடியோலஸ்
 

கோல்டன் ராட்

   
இரகங்கள்:

பல்லார்டு, கோல்டன் கேட், கோல்டன் விங், மான்டே டி'ஓரோ, மான்டே சோலோ, பீட்டர் பான், ஸ்ரேஹ்லே கரோன், சூப்பர் மற்றும் தாரா கோல்ட்.

மண் மற்றும் தட்பவெப்பநிலை:

களிமண் மற்றும் சிவப்பு வண்டல் மண்ணுடன் சரியான வடிகால் மணல் உகந்ததாகும். பல்வேறு காலநிலைகளில் பயிரிடப்பபடுகிறது. குளிர் காலநிலையில்  உயர் தரமான கொய் மலர்கள் கிடைக்கும்.

பருவம்:

பயிர் ஆண்டு முழுவதும் பயிரிடப்படுகிறது.
 

இனப்பெருக்கம் மற்றும் நடவு:

பக்கக் கிளைகள் அல்லது நாற்றுகள் மூலம் இனப்பொருக்கம் செய்யப்படுகிறது. மண்ணை நன்கு ஆழமாக, பதப்படும் வரை உழ வேண்டும். பிறகு, தளர்வான படுக்கைகள் தயாரிக்க வேண்டும். பிறகு நாற்றுகள் 45 X 45 செ.மீ இடைவெளியில் நடப்படுகிறது.

நீர்ப்பாசனம்:

மண்ணை ஈரமாக வைத்துக்கொள்ள பொதுவாக மூன்று நாட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும். அதிக தண்டு வளர்ச்சிக்கு இவை உதவும்.

உரமிடுதல்:

எக்டருக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்து முறையே 140:175:150 கிகி அளிக்க வேண்டும். இதனுடன் எக்டருக்கு 5 கிகி தொழுவுரம் அடியுரமாக அளிக்க வேண்டும். பாதியளவு அறுவடைக்குப் பிறகு அளிக்க வேண்டும்.  

பின்செய் நேர்த்தி:

தேவைப்படும்பொழுது கைக்களை எடுக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

பூச்சிகள்:
நாவாய்ப்பூச்சி : மாலத்தியான் 1 மிலி / லி  தெளிக்கவும்.

நோய்கள்

சாம்பல் நோய் : நனையும் கந்தகம்  2 கி / லி அல்லது அசோசிஸ்ராபின் 1 மி / லி தெளிக்கவும்.

இலை புள்ளி: காப்பர் ஆக்ஸி குளோரைடு 3கி / லி அல்லது  ஹெக்ஸகோனோசோல்  1 மிலி /லி அல்லது மேன்கோஷெப்  2கி /லி  தெளிக்கவும்.

வேர் அழுகல்: 1கி /லி கார்பன்டசிம் கொண்டு மண் நனைத்தல் வேண்டும்.

அறுவடை:

முதல் அறுவடை: நடவு செய்த 75 நாட்களில் அறுவடை செய்யலாம்.
அறுவடை நிலை: 25%மலர்கள் திறந்திருக்கும் போது.
பயிர்க் காலம்: 2 ஆண்டுகள்.

பூக்கும் மற்றும் அறுவடை பருவம்:

முதல் அறுவடை நடவு செய்து 75 நாள்களுக்குப் பிறகு மற்றும் தொடா்ந்து 30 நாட்களுக்கு தினமும் அறுவடை செய்யலாம். இந்த நடைமுறை 2 வருடங்களுக்கு தொடர்ந்து செய்தல் வேண்டும்.

மகசூல்:

சராசரி மகசூல் எக்டருக்கு 3 லட்சம் தண்டுகள் /பயிர் கிடைக்கும்.


Source
1.http://www.extension.iastate.edu/NR/rdonlyres/3F9AFBDA