தோட்டக்கலை :: மலரியல் பயிர்கள் :: கிளாடியோலஸ்
 

   
வகைகள்
காமினி, பூர்ணிமா, ஸாஸான்க், வெயலட் குஷன், பூலே கணேஷ் வெள்ளை, பூலே கணேஷ் பிங்க், பூலே கணேஷ் வெயலட், பூலே கணேஷ் பர்பில்.

காலநிலை
குளர்ந்த வானிலை, பகல் வெப்பநிலை 20-300 செ, இரவு 15-170 செ மற்றும் ஈரப்பதம் 50-60% விரும்பப்படுகிறது. பிரகாசமான சூரிய ஒளி வளர்ச்சியின் போது மற்றும் பூத்தலின்போது தேவைப்படுகிறது.

மண்
சூரிய ஒளியுடைய நல்ல வடிகால் வசதியுடைய 6.0 முதல் 7.0 கார அமிலத் தன்மை கொண்ட  சிவப்பு வண்டல் மண்ணில் நன்கு வளரும்.

 

பருவம்
வருடம் முழுவதும் பயிரிடலாம். மிதமான வெப்பநிலை (பெங்களூர் போன்று) நன்கு வளரும்.

இனப்பெருக்கம் மற்றும் நடவு

விதைகள் மூலம் இனப்பெருக்கம் : எக்டருக்கு 2.5 – 3.0 கிகி விதை தேவைப்படும். 120x60x10 செ.மீ அளவுள்ள படுக்கைகள் அமைக்கப்பட்டு 30-45 நாள் வயதுடைய நாற்றுகள் நடவு செய்யப்படுகின்றன.

ஊட்டச்சத்து
நிலத்தை தயார் செய்யும்பொழுது தொழு உரம் எக்டருக்கு 10-15 டன் அளிக்க வேண்டும். பரிந்துரைக்கப்படும் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து 180:60:60. இவற்றில் 90:60:60 அடியுரமாக அளிக்க வேண்டும் மற்றும் தழைச்சத்து எக்டருக்கு 90 கிகி மேலுரமாக நடவு செய்த 40 நாளில் அளிக்க வேண்டும்.

நிலம் தயாரித்தல் மற்றும் விதைத்தல்
நிலத்தை நன்கு உழுது படுக்கைகள் அமைக்க வேண்டும். விதைகள் தூவி விதைக்கலாம் அல்லது வரிசையாக 20x15 செ.மீ இடைவெளியில் விதைக்கலாம்.

பாசனம்
நான்கு முதல் ஏழு நாட்களுக்கு ஒரு முறை மண்ணின் ஈரப்பதத்தை கருத்தில் கொண்டு பாசனம் செய்ய வேண்டும்.

முனை முறித்தல்
பக்கவாட்டுத் துளிர்களைத் தூண்ட நடவு செய்த 30 நாட்களுக்குப் பிறகு நுனிகளைக் கிள்ளிவிட வேண்டும்.

உர மேலாண்மை
தொழுவுரம் எக்டருக்கு 5 டன் மற்றும் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து 70:175:75 அடியுரமாக அளிக்கலாம்.

களை மேலாண்மை
இரண்டு முறை கைக்களை எடுக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

பூச்சிகள்
அரைக்காவடிப் புழு: குயினல்பாஸ் 1.0 மிலி/லி அல்லது கார்பரில் 1கி/லி தெளிக்க வேண்டும்.

இலை துளைப்பான்: மேனோகுரோடோபாஸ் 0.5 மிலி/லி அல்லது இமிட்டாகுளோபிரிட் 0.5மிலி/லி தெளிக்கவும்.

நோய்கள்

வேரழுகல் : காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2.5 கி /லி மண்ணில் அளிக்க வேண்டும்.

வாடுதல் (Fusarium sp.): கார்பன்டாசிம் 1 கி/ லி மண்ணில் அளிக்கவும்

அறுவடை

கொய் மலர்கள் : மலர்களை காம்புடன் அல்லது முழுச் செடியையும் அறுவடை செய்ய வேண்டும்.
உதிரிப் பூக்கள் : பூக்கள் தனித்தனியாக சின்ன காம்புடன் அறுவடை செய்யப்படுகிறது.

மகசூல் : எக்டருக்கு 18 முதல் 20 டன்.