தோட்டக்கலை :: பழப்பயிர்கள் :: பேரீ

இரகங்கள் : நாட்டு பேரீ, கீஃபர், நியூ பேரீ, வில்லியம் மற்றும் ஜார்கோ நெலி.

மண் மற்றும் தட்பவெப்பநிலை

நல்ல வடிகால் வசதியுடைய, செம்மண் கலந்து களிமண் பயிரிட ஏற்றது. மண்ணில் அங்ககப் பொருட்கள் அதிகம் இருந்தால் நன்றாக வளரும். மண்ணின் கார அமிலத்தன்மை 5.8 முதல் 6.2 வரை இருக்கவேண்டும். கடல் மட்டத்திலிருந்து 1200 மீட்டர் உயரம் வரை பயிரிடலாம்.

பருவம் : ஜீன் முதல் டிசம்பர் வரை

விதையும் விதைப்பும்

பயிர்ப்பெருக்கம்

ஒட்டு கட்டிய செடிகள் மற்றும் வேர் பிடித்த குச்சிகள்

இடைவெளி

குழிகளின் நீளம், அகலம் மற்றும் ஆழம் முறையே 60 செ.மீ x 60 செ.மீ x 60 செ.மீ குழிகளுக்கிடையே உள்ள இடைவெளி 5 x 5 மீட்டர் அல்லது 6 x 6 மீட்டர்  இருக்கவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

காய்க்கும் மரங்களுக்கு ஆண்டொன்றிற்கு 25 கிலோ தொழு உரம், 500 கிராம் தழைச்சத்து, 1 கிலோ சாம்பல் மற்றும் மணிச்சத்து அளிக்கவேண்டும்.


பயிர்

இடவேண்டிய சத்துக்கள்(கிலோ/ ஒரு மரத்திற்கு)

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிலோ/ ஒரு மரத்திற்கு)

 

தழை

மணி

சாம்பல்

10:26:26

யூரியா

பேரீ

0.50

1.00

1.00

4.00

0.22

கவாத்து செய்தல்

காய்க்கும் மரங்களுக்கும் பழங்கள் அறுவடை செய்தபின் ஒவ்வொரு வருடமும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் கவாத்து செய்தல் மிகவும் அவசியம். மரங்கள் ஓரளவு வளர்ந்தவுடன் நடுக்கிளையின் நுனியை வெட்டி, பக்க கிளைகளின் வளர்ச்சியை அதிகப்படுத்த வேண்டும். வயது முதிர்ந்து மரங்களின் வரும் பக்கக் கிளைகளில் இளந்தளிர் ஒடடு மூலம் தேவையான தாய்க்குச்சிகளை ஒட்டு கட்டி அதிக மகசூல் பெறலாம்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

பேரீயை அதிக பூச்சிகளோ நோய்களோ தாக்காது. எனினும் நோய்த் தடுக்கும் விதமாக, கவாத்து செய்தபின் காப்பர் பூஞ்சாணக் கொல்லி அல்லது மீத்தைல் டெமட்டான் ஒருமுறை தெளிப்பது நல்லது.

அறுவடை

குறுகிய கால இரகங்கள் மே - ஜீன் அறுவடைக்கு வரும். நீண்ட கால இரகங்கள் ஜீலை – அக்டோபர் மாதங்களில் அறுவடைக்கு வரும்.

மகசூல்

நாட்டு பேரீ - 100  முதல் 120 கிலோ மரம் ஒன்றிற்கு / வருடத்திற்கு
கீஃபர் மற்றும் நியூ பேரீ - 70 முதல் 80 கிலோ மரம் ஒன்றிற்கு / வருடத்திற்கு
வில்லியம் மற்றும் ஜார்கோநெலி - 30 முதல் 40 கிலோ மரம் ஒன்றிற்கு / வருடத்திற்கு.