தோட்டக்கலை :: நிழ எழிலூட்டுதல் :: தோட்ட அமைப்பு

பூந்தோட்டக்கலையின் அடிப்படை மற்றும் அமைப்புகள்
இந்தியாவில் பொதுவாக இதுவரை பூந்தோட்டக்கலையின் பயன்பாடு அவ்வளவாக முக்கியத்துவம் பெறவில்லை.  ஆனால் நகர்புற பூங்காக்கள் மற்றும் அழகுத் தோட்டங்கள் பெரிய நகரங்களிலிலுள்ள மக்களின் பொழுது போக்கு மற்றும் அழகுணர்வை ரசிப்பதற்காகவும் அமைக்கப்பட்டன. நாடெங்கிலும் அமைக்கப்படும் பூந்தோட்டங்கள் மற்றும் நகர்ப்புற பூங்காக்கள் பொதுவாக மனிதர்களின் மகிழ்ச்சியையும் அழகுணர்ச்சியையும் பெருக்குவதோடு சுற்றுச்சூழழில் ஏற்படும் மாசு சீர்கேட்டையும் கட்டுப்படுத்தி ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. அது தவிர கால்பந்து, கிரிக்கெட், ஹாக்கி போன்ற விளையாட்டு மைதானங்களை ஒட்டிய பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது.
ஒரு நாட்டின் வளமானது அந்நாட்டு மக்களின் உடல்நலத்தைப் பொறுத்தே அமைகிறது. இவ்வாறு அமைக்கப்படும் அழகுணர்வு பூந்தோட்டங்கள் மற்றும் எழிலூட்டும் தோட்டங்கள் மக்கள் மனதில் ஒரு ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்தி நாட்டினுடைய வளத்தினை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Garden Features Garden Features

Garden Features Garden Features

பூந்தோட்டக்கலையின் அடிப்படை கொள்கைகள்
பிண்ணனி (Background)
சுவர்கள் , நெடுமரங்கள் , குத்துச்செடி வேலிகள் போன்ற பிண்ணனிகள் பூந்தோட்டத்தின் முக்கிய அம்சங்களைப் பாதிக்காத வகையில் நடுநிலை வகிக்க வேண்டும்.

Garden Features

முரண்பாடு
பூந்தோட்டத்தின் வடிவமைப்பு அதன் ஒருமித்த போக்கை அகற்றும் வகையில் வெவ்வேறு வடிவங்களிலும் , வண்ணங்களிலும் அமைக்கப்பட வேண்டும்.

Garden Features

திறந்த வெளி மையம்
பூந்தோட்டத்தின் மையப் பகுதி திறந்த வெளியாக இருப்பதே சிறந்தது. இதனை
புல்வெளி அமைப்பதன் மூலம் செயல்படுத்தலாம்.

Garden Features

மறுமதிப்பு
சில அமைப்புகளை திரும்பத்திரும்ப நிறுவதால் பூந்தோட்டத்தின் இயற்கையான இணைப்பையும் சமநிலையையும் ஒருமைப்பாட்டையும் மேம்படுத்தலாம். இதில் உருவ அமைப்பை மட்டுமே திரும்பத்திரும்ப நிறுவவேண்டுமே தவிர வண்ணங்கள் மற்றும் செடியின் தன்மையில் வேறுபாடு இருக்க வேண்டும்.

Garden Features

மனமகிழ்வு
ஒழுங்கான வரிசைக்கிரமும், பல்வேறு பூந்தோட்ட அமைப்புகளின் சரிவிகித கலப்பும் மனதிற்கு மகிழ்ச்சியூட்டும் வகையில் அமைக்க வேண்டும்.

Garden Features

எளிமை
எளிய முறையில் அமைக்கப்படும் பாகங்கள் பூந்தோட்டத்தின் ஒருங்கிணைப்பிற்கு பெரிதும் உதவும். எளிமையான அமைப்பிற்கு ஒரே மாதிரியான செடிகளை குறிப்பிட்ட இடத்தில் கொத்தாக நடவேண்டும் பாத்தியின் ஓரங்களில் பாம்பு போல் இல்லாமல் நேராகவோ அல்லது சற்றே வளைந்தோ இருந்தால் எளிமை பிரதிபலிக்கும்.

Garden Features

மையப்புள்ளி
ஒவ்வொரு திரைப்படத்திலும் உச்சகட்டம். இருப்பது போல் ஒவ்வொரு தோட்டத்திலும் ஒரு இடம் மட்டும் பளிச்சென்று தெரியும் படியும் மனதில் பதியும் படியும் அமைக்க வேண்டும். அத்தகைய இடத்தை போக்கல் பாயிண்ட் (அ) மண்டல மையம் என்பர். சமநிலைத் தோட்டத்தில் மத்திய நேர்கோட்டு கடைசியில் போக்கல் பாயிண்ட் அமைக்க வேண்டும். சிலை, பறவைகள் , குளிக்கும் தொட்டி, அலங்கார வளைவு, நீர் ஊற்று , நீர் நிலைத் தோட்டம் போன்றவைகளைப் போக்கல் பாயிண்ட்டாக  அமைக்கலாம்.

Garden Features

சமநிலை
தோட்டத்தின் மத்திய கோட்டிற்கு இருபுறமும் ஒரே வகை மரங்களையோ அல்லது செடிகளையோ நடுவதன் மூலம் சமநிலை கிடைக்கிறது. இதனை வெவ்வேறு வகை மரங்களையும் செடிகளையும் நட்டு பார்வைக்கு சமநிலையில் தோன்றுவதைப் போல் அமைக்கலாம். முதல்வகை சமமான பூமியில் அமைக்கப்படும் தோட்டங்களுக்கும் இரண்டாவது வகை சற்று சரிவான பூமியில் அமைக்கப்படும் தோட்டங்களுக்கும் பொருந்தும்.

Garden Features

இயற்கையான இணைப்பு
இதன் அடிப்படைக் கொள்கைகளை பின்பற்றுவதன் மூலம் தோட்டத்தின் பல பாகங்களும் தொடர்ச்சியாக அமையும் மரப்பாத்திகளை நடப்பட்ட அலங்கார குத்துச் செடிகளை வீட்டின் பக்கவாட்டிலும் மற்றும் பின்பக்கம் வரையிலும் நடுவதன் மூலம் இயற்கையான இணைப்பு ஏற்படுகிறது. இத்தகைய ஏற்பாட்டால் வீட்டின் முன்புறமும் பின்புறமும் இணைக்கப்படுகிறது. தோட்டத்தில் ஒரு இடத்தில் அமைந்த வடிவத்தை திரும்பவும் மற்றோரு இடத்தில் அமைப்பதன் மூலம் இயற்கையான இணைப்பு உண்டாகிறது.

Garden Features

அளவும் சரிவிகிதமும்
கட்டிடத்தை சுற்றிலும் நட்ட மரங்களும் செடிகளும் அதன் முழு வளர்ச்சியடைந்ததும் கட்டிட அளவோடு ஒத்திருக்க வேண்டும். இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட செடிகள் , மரங்கள் முதலானவை அங்கு நடமாடும் மனிதர்களுக்கு அனுகூலமாக இருக்கவேண்டும். உதாரணமாக சிறுவர்கள் விளையாடும் இடத்தில் செடிகளும் மரங்களும் சிறியதாகவே இருக்க வேண்டும். இங்குள்ள செடிகள் சுற்றுப்புற சூழலுக்கேற்ப அமைய வேண்டும் பெரிய இலைகளைக் கொண்ட செடிகளையும் , மரங்களையும் சிறிய தோட்டத்தில் நடக்கூடாது.

Garden Features

ஒருமைப்பாடு
ஒரு பூந்தோட்டத்தை அமைக்க தேவையான அமைப்புகளும் தாவரங்களும் வெவ்வேறாக இருந்த போதிலும் அவற்றினிடையே ஒரு ஒற்றுமை இருக்கவேண்டும். இந்த ஒற்றுமை பூந்தோட்டத்தின் அழகை மென்மேலும் மெருகூட்டும். இந்த ஒற்றுமையில் சிறு வேற்றுமை இருந்தாலும் கூட பூந்தோட்டத்தின் தன்மையையே மாற்றிவிடும்.

Garden Features

உயிரோட்டம்
மனிதனுக்கு சுவாவம் போல் பூந்தோட்டத்திற்கு உயிரோட்டம் அவசியம். பூந்தோட்டத்தின் பாகங்கள் எல்லாமே அசைவின்றி அமைந்தால் மனித இயல்பை குரூரமானதாக்கும். மரங்களின் தலையசைவையும் , கொடிகளின் நளினமும், கண்கவர் மலர்களின் அணிவகுப்பும் மேகக் கூட்டங்களும் , வானம்பாடிகளும் , வண்ணத்துப்பூச்சிகளும் பொங்கி வழியும் தண்ணீரும் பூந்தோட்டத்தின் உயிரோட்டங்களாகும்.

Garden Features

ஆகாயத்தோற்றம்
ஒரு பூந்தோட்டத்தை அமைக்க திட்டமிடும் போது ஆகாயத்தோற்றத்தை கருத்தில் கொள்ள வேண்டும். மலைச் சிகரங்கள் , பிரம்மாண்ட விருட்சங்கள் புராதண கட்டிடங்கள் , கோவில் கோபுரங்கள் போன்றவற்றைப் பிண்ணனியாகக் கொண்டு தோட்டத்தைத் திட்டமிட்டால்  பூந்தோட்டத்தை மேலும் எழிலூட்டலாம்.

Garden Features