தோட்டக்கலை :: நிழ எழிலூட்டுதல் :: தாவர அங்கங்கள்

தாவர அங்கங்கள்
பாதை ஓர் அலங்காரச் செடிகள்
பூங்கா மற்றும் மலரியல் எழிலூட்டும் தோட்டங்களின் பாதையின் இரு ஓரங்களிலும் பாதையின் நேர் வளைவு, திருப்பங்களை உயிரோட்டமுள்ளதாக அமைப்பதற்கு பாதை ஓர் அலங்காரச் செடிகள் நடப்படுகின்றன. சிறுபாத்திகள், எல்லைப்பகுதி புல்தரை ஆகியவற்றின் ஓரங்களிலும் இதுபோன்ற செடிகள் நடப்படுகின்றன. இதுபோன்ற செடிகள் அழகிய இலைகள், கவர்ச்சியாக உள்ள சிறு, குறு செடிகள் , மலர்களை உடைய சிறுசெடிகளை ஓரங்களில் நடவுக்குப் பயன் படுத்தலாம். ஜஹ்டீசியா, காப்ஸ், டையான்தஸ், இக்சோரா போன்ற பூக்கும் குறுஞ் செடிகளும், டுராண்டா, பெடிலான்தஸ், பீநாரி, பொன்னாங்கன்னி போன்ற பல்வேறு இலை அழகுச் செடிகளும் பயன்படுத்தலாம்.

குத்துச் செடிகள்
எழிலூட்டும் தோட்டங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியை தன்னிலைப்படுத்தி சேர்ப்பதற்காக சற்றே உயரமாக வளரும் அழகிய இலையைக் கொண்டுள்ள செடிகள் நெருக்கமாகவும் நேர் வரிசையிலும் நடப்படுகின்றன. இத்தகைய செடிகள் நெருக்கமாகவும் அடர்த்தியாகவும் வளரும் இயல்புடையவையாக இருப்பது அவசியம் செடியின் அடிமட்டத்திலிருந்து மேல்பகுதிவரை பசுமையான அடர்த்தியான இலையைக் கொண்டிருக்க வேண்டும். இத்தகைய தாவரங்களை கவாத்து செய்தால் நேர்த்தியாக காட்சியளிக்கும் தன்மை பெற்றிருப்பது அவசியம்.
இலை அலங்கார குத்துச் செடி வேலிகள்
அகாலிபா போன்ற மிதமான உயரமுள்ள செடிகள் அதிகம் மறைப்புச் செடிகளாக வளர்க்கப்படுகின்றன. இவ்வகை செடியின் இலைகள் பச்சை, சிவப்பு மற்றும் வேறுபட்ட வண்ணங்களில் உள்ளன. பீநாரி (க்ளீரோடென்ரான் இனெர்மி) செடிகள் பெரும்பாலும் பாதை மற்றும் சாலை ஓரங்களிலும் வெளிப்புற எல்லையிலும் நடப்படுகின்றன. இத்தகைய செடிகளைக் கால்நடைகள் உண்பதில்லை. குறைந்த உயரம் மற்றும் நடுத்தரமான உயரத்தில் இச்செடியை செய்து பராமரிக்கலாம்.
மிகவும் அழகிய இலையையுடைய குறுஞ்செடியான டுராண்டா செடிகள் தரைமட்டத்திற்கு சற்றே அதிகமாக வளரும் தன்மை பெற்றது. டுராண்டா செடிகள் நீர் குறைவான இடங்களில் வளரும் தன்மை பெற்றது.
மருதாணி, காட்டுக் கருவேப்பிலை போன்ற செடிகள் உயரமான வடிவில் கவாத்து செய்வதற்கு ஏற்றது. இவற்றின் இலை சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல அழகு சேர்க்கும் தன்மை பெற்றது.
பூக்கும் குத்துச்செடி வேலிகள்
பெரும்பாலான எழிலூட்டும் இடங்களில் பூக்களை உடைய மறைப்புச் செடிகள் அதிகம் விரும்பப்படுகின்றன. இதற்கு காகிதப்பூ (போகன்வில்லா) ஒரு உதாரணம் ‘லூயி வதினா’ போன்ற போன்வில்லா இரகங்கள் அடர்த்தியான பூங்கொத்துகளில் பல வண்ணங்களில் பூக்களைப் பெற்றுள்ளது.
ஹெமிலியாஇ ப்யூசியா போன்ற பூஞ்செடிகள் சிவப்பு , ஆரஞ்சு வண்ணங்களில் பூத்து சூழ்நிலையை அழகுபடுத்துகின்றன. சற்றே உயரமாக வளரும் செம்பருத்தி, லன்டோனா, மாதுளை டெக்காமோ போன்ற செடிகள் நம்நாட்டில் அதிகம் மறைப்புச் செடிகளாக வளர்க்கப்படுகின்றன. இவற்றின் பூக்கள் பல வண்ணங்களில் உள்ளதால் நிலையான மறைப்புச் செடிகளாக வளர்க்கப்படுகின்றன.
பெருஞ்செடிகள்
எழிலூட்டும் பூங்கா, தோட்டங்களில் 50 செ.மீ – 2 மீட்டா உயரம் வரை வளரும் செடிகள் நீண்ட கால அழகுத்  தோற்றத்திற்காக  பெருஞ்செடிகள் நடப்படுகின்றன. இத்தகைய பெருஞ்செடிகள் சற்றே கடினதோற்றத்தில் அழகிய இலை மற்றும் பூக்களைப் பெற்றுள்ளன. சிறிய வீடுகள் மற்றும் தோட்டத்திற்கு மிகவும் ஏற்றவை. வீடுகளின் முன்பகுதியில் பெரும்பாலான பூக்கின்ற தன்மையையுடைய செடிகள் வளர்க்கப்படுகின்றன. சவுக்கு, லட்சக்கொட்டைக் கீரை போன்ற இலை அழகுப் பெருஞ்செடிகள் மற்றும் செம்பருத்தி, டெக்கோமா, இச்சோரா போன்ற பூ அழகுப் பெருஞ்செடிகளும் வளர்க்கப்படுகின்றன. இத்தகைய செடிகள் பூந்தொட்டிகளிலும் வளர்க்க ஏற்றவை.

Plant Components Plant Components Plant Components
Plant Components Plant Components

பெருஞ் செடிகளின் வகைகள்

 1. மிக அழகிய பூக்களையுடைய பெருஞ்செடிகள் (செம்பருத்தி, இச்சோரா முசாண்டா , நைட்குயின்)
 2. நறுமனத்தைப் பரப்பும்  பெருஞ்செடிகள் (மல்லி, முல்லை ரோஜா , நந்தியாவட்டை, பவளமல்லி)
 3. இலை அழகுப் பெருஞ்செடிகள் (குரோட்டன்ஸ், எரான்திமம், கிராப்டோ பில்லம்)

சூரிய ஒளியின் நிலைக்கேற்ற வகை

 1. அதிக அளவு சூரிய ஒளியை விரும்பும் செடிகள் (செம்பருத்தி, காகிதப்பூ)
 2. மிதமான சூரிய ஒளியை விரும்பும் செடிகள் (எரான்திமம், லட்சக்கொட்டைக் கீரை)
 3. நிழலில் வளரும் செடிகள் (ட்ரெசினா)

சில முக்கியப் பெருஞ்செடிகள்
அகாலிபா
அழகிய இலை அலங்காரச் செடி  ஆகும். பூக்கள் நேர் மேல் நோக்கியோ அல்லது கீழ் நோக்கியோ வளரும் தன்மையுடையது.
டிசம்பர் கனகாம்பரம்
அதிக உயரம் வளராத ஒரு மலர் வகை பெருஞ்செடி. செடிகள் நவம்பர் – ஜனவரி மாதத்தில் பூக்கின்றன.
காகிதப்பூ
உயரமாக வளரும் ஒரு கொடி வகைத் தாவரம், முள் உள்ள இக்கொடிகளை ஐந்து நட்சத்திர வடிவிலான பூக்களை உடையது. வறட்சியான  சூழ்நிலையில் வளர்வதற்கேற்றது.
பவுட்டர் பப்
சற்றே குட்டையான இச்செடிகளின் கிளைகள் அகன்றதாகவும் பரந்ததாகவும் இருக்கும் பூக்கள் அடர்சிவப்பு நிறத்தில் ஙபவுடர் ப்ப் ஐ போன்று இருக்கும். வருடந்தோறும் பூக்கும் திறன் கொண்டது.
நைட் குயின்
நலிவான கிளைகளை உடைய செடிகள் இரவில் மலர்ந்து வாசனை தரக்கூடியது. தண்டு மூலமாகப் பயிர்ப்பெருக்கம்.

Plant Components

குரோட்டன்ஸ்
மிதமான உயரத்தில் பல  இலை வடிவம், வண்ணங்களில் வளரும் தன்மையுள்ளது.
வண்டு கொல்லிகள் (கேசியா அலேட்டா)

Plant Components

உயரமாக வளரும், அதிகம் கிளைக்காத செடி, பூக்கள் அடர் மஞ்சள்  நிறத்திலும் நீளமாக இறக்கை வடிவிலான காய்கள் இச்செடியின் அழகுக்குக் காரணமானவை.
டுராண்டா
உயரமாக வளரும் முள்ளுடைய செடி வகையாகும். இலைகள் மிக அழகிய கண்ணைக் கவரும் நிறத்திலும், பூக்கள் ஊதா நிறத்திலும் உள்ளவை. காய்கள் மஞ்சள் நிறத்திலும், செடிகளில் முள்ளுடையதாகவும் இருப்பதால் வேண்டிய மட்டத்தில் கவாத்து செய்ய ஏற்றது.
எரான்திமம்
நிழலுள்ள இடங்களில் வளர்க்க ஏற்றது. கவர்ச்சியான இலை  மற்றும் பூக்களைப் பெற்றுள்ளது. தண்டு மூலம் பயிர்பெருக்கம்.

Plant Components

கிராப்டோபில்லம்
இலை அழகுச் செடியான இத்தாவரம் நிழலுள்ள இடங்களில் வளர்க்க ஏற்றது.
செம்பருத்தி
உயரமாக வளரும் செம்பருத்தி செடிகள் வருடந்தோறும் பசுமையான இலைகளையும் அழகிய வண்ணங்களில் பூக்களையும் தரவல்லது. ஓரடுக்கு பலஅடுக்கு நேர்த்தியில்  கவர்ச்சியான இதழ்களை உடையது.
இட்லிப்பூ
வருடந்தோறும் பூக்கின்ற தன்மையுடையது. சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில்
பூக்கும், தண்டு மூலம் பயிர்பெருக்கம்.
மல்லிகை , முல்லை
வருடத்தில் 5-6 மாதங்கள் பூக்கும் தன்மையுடையது.  தண்டு மூலம் பயிர்பெருக்கம்.
லன்டானா
அதிக முட்கள் உள்ள இச்செடி மிகவும் அடர்த்தியாக வளரும் மஞ்சள் , சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் பூக்கின்றன.

Plant Components

பவளமல்லி
உயரமாக வளரும் இச்செடியானது கீழ்நோக்கி கிளைத்து பூக்கும் தன்மையுடையது. பூக்கள் இரவு நேரத்தில் விரிவடைந்து நறுமணத்தைப் பரப்பும்.

பென்டாஸ்
வெள்ளை சிவப்பு மற்றும் அடர் சிவப்பு நிறங்களில் பூக்கும் ஒரு நீண்ட கால அலங்காரச் செடி ஆகும்.

பிளம்பாகோ
குட்டையாக வளரும் இத்தாவரம் ஊதாநிறத்தில் பூக்கும்

லட்சக் கொட்டைக் கீரை
உயரமாக வளர்ந்து இளம்பச்சை மற்றும் மஞ்சள் கலந்து பச்சை நிறத்தில் இலைகள் அழகாக காணப்படும்.

நந்தியாவட்டை
ஓரடுக்கு மற்றும் நெருக்கமான இதழ்களுடைய நந்தியாவட்டை ஒரு அழகிய குட்டை வகை தாவரம்.

நித்ய கல்யாணி
அதிகம் கிளைத்து வருடந்தோறும் வெள்ளை சிவப்பு நிறங்களில் பூக்கும் ஒரு பொதுவான தாவரம்.

கொடி வகைகள்
சுவர், வளைவு, வேலி ஓரங்களில் வளர்ப்பதற்கு ஏற்ற கொடி வகைகள் , பூங்கா தோட்டங்களில் அதிகம் பயன்படுத்தப் படுகிறது. கொடி வகைகளைப் பல வகையாகப் பிரிக்கலாம்.

 1. வருடாந்திரக் கொடி வகை (சங்குப்பூ, பட்டாணி, ஐப்போமியா)
 2. மறைவு வகைக் கொடிகள்( ஆண்டி கோனான், பாஸிபுளோரா, துன்பர்ஜயா, பீநாரி)
 3. தாழ்வான சுவர் வகை கொடிகள் (லோனிசெரா, டெக்கோமா, ஜக்மோன்சியா)
 4. வளைவுக்கேற்ற கொடிகள் (பைரோலஸ்டிஜியா, பெட்ரியா, பீநாரி, காகிதப்பூ, மல்லி, முல்லை)
 5. நிழலில் வளர்ப்பதற்கேற்ற கொடிகள் (ஆடுதின்னாப்பாளை, ரங்கூன் கொடி, பீநாரி)
 6. இலை அழகுக் கொடி (ப்பிள்ளோடென்ரான், மான்ஸ்டீரியா)
 7. தொட்டியில் வளரும் கொடிகள் (அடினோகெளிமா, சங்குப்பூ)

 

முக்கிய கொடிகளின் குறிப்புகள்
அடினோகேளிமா (பூண்டு கொடி)
பசுமையான இலைகளைக் கொண்ட வெண்மை கலந்த சிவப்பு நிறத்தில் பூக்கும் ஒரு கொடி அக்டோபர் – பிப்ரவரி மாதங்களில் பூக்கும். விண்பதியம் மூலம் பயிர்ப் பெருக்கம்.

ஆண்டி கோனான் லெப்டோப்பஸ் இரயில் பூ

கிழங்கு வகை கொடியாகும், பூக்கள் சிவப்பு நிறமாகவும் தேனீக்களை கவரும் கொடியாகும்.

அலமாண்டா

மெல்லிய கிளைகளை உடையது. பூக்கள் மஞ்சள் நிறத்தில் மழைக்காலங்களில் பூக்கும் தன்மை உடையது

அஸ்பராகஸ் ப்ளுமோசஸ்

சிறகு போன்ற இலையுடைய கொடி வகையாகும். விதை மூலம் பயிர்பெருக்கம்.
பிக்னோனியா வெனுஸ்டா
இலையுதிர் கொடி வகை ஆகும். பூக்கள் அடர் ஆரஞ்சு நிறத்தில் தொங்கிய வண்ணமிருக்கும். மெதுவாக வளரும் கொடிகள். பதியன் மூலம் பயிர்பெருக்கம்.

சங்குப்பூ
விதை மூலம் பயிர்பெருக்கம்,தொட்டியில் வளர்க்க ஏற்றவை. வெள்ளை மற்றும் ஊதா நிறப்பூக்கள்

செங்காந்தள் மலர்
நலிவான கிளைகளையுடைய கொடி வகை ஆகும். பூக்கள் பிரிந்த நிலையில் அழகிய சிவப்பு மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

ஹோம்ஸ்க்கியான்டியா

வளைவாகப்படரும் கொடி குளிர்காலங்களில் பச்சை சிவப்பு நிற பூக்களைத் தரும்.

ரயில்வே கொடி (ஐப்போமியா)
ஊதா நிறப்பூக்களை உடையது. நீண்ட காலத்திற்கு பூக்கும் தன்மையுடையது.

ஜாக்மோன்ஷியா
வயலட் நிறத்தில் பூக்கள் மிகவும் அடர்த்தியாக பூக்கும் தன்மை பெற்றது. சற்றே நிழலில் உள்ள இடங்களுக்கேற்றது.

தாட்பூட் பழக்கொடி

பெரிய இலைகளுடன் அடர்த்தியாக வளரும் கொடியினை பந்தல் , வேலி முதலிய இடங்களில் படரவிட்டு வளர்க்கலாம். வெள்ளை நிறத்தில் கவர்ச்சியான பெரிய பூக்கள் தோன்றும்.

ஆஸ்திரேலிய பைன் ஆப்பிள் (மான்ஸ்டீரியா)
பெரிய மரங்களில் படரவிட ஏற்ற கொடி. இலைகள் பெரியதாக அழகாக இருக்கும். தொட்டிகளில் நட்டு வீட்டின் உட்புற அலங்காரத்திற்கும் உபயோகப்படுத்தலாம்.

பெட்ரியா
கொடி அடர்த்தியாக வளரும். மலர்கள் நீல நிறத்தில் கொத்து கொத்தாக இருக்கும். பிப்ரவரி – நவம்பர் வரை பூக்கும்.

வெர்னோனியா
நிழல் பந்தல்கள் , அலங்கார குடைகள் , நடைபாதை பந்தல்கள் ஆகியவற்றில் படரவிட்டு நல்ல நிழல் பெறலாம்.

அலங்கார மரங்கள்
மரங்கள் சூழ்ந்த இடத்தை சோலை என்பர். சோலையின் அழகை எல்லோரும் விரும்புவார்கள். பொதுவாக மரங்களை மலர் மரங்கள், நிழல் மரங்கள், இலை அழகு மரங்கள் என பிரிக்கலாம்.

ஏதாவது ஒரு காரண காரியத்தோடுதான் மரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தகுந்த இடத்தில் நடப்படுகின்றன. மரங்களை தேர்ந்தெடுப்பது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அவைகளை நடுவதற்கான இடத்தை தேர்வு செய்வது. பெரும்பாலும் கட்டிடங்களுக்கு அழகூட்டும் மரங்களை நடுவதற்கு முன் அவைகளின் உபயோகங்களுக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து நடவேண்டும். இயற்கைத் தோட்டம் அமைக்கும் போது மரங்களின் பங்கு அதிகம். அத்தகைய மரங்களின் உபயோகம் மற்றும் அவைகளின் பங்கு பற்றி இனி பார்ப்போம்.

நிழல்

நிழல மட்டும் தேவைப்படும் இடங்களில் கட்டிடத்திலிருந்து ஐந்து மீட்டர் இடைவெளி விட்டு மரங்கள் நட வேண்டும். நிழல் மரங்களின் வடிவங்களைப் பொருத்து நிழல் கொடுக்கும் தன்மை அமையும். நல்ல நிழல் பெற கிளைகள் நீளமாகவும் நாற்புறங்களிலும் வட்ட வடிவமாக படர்ந்து வளரும் மரங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் நிழல் மரங்கழள அதன் வடிவங்களைப் பொருத்து

 1. கொணல் மாணலாக வளரும் மரம்
 2. கோழி முட்டை வடிவமுள்ள மரம்
 3. உருண்டை வடிவமுள்ள மரம்
 4. தொங்கும் கிளைகளுடன் கூடிய மரம்
 5. குடை வடிவமுள்ள மரம்
 6. கூம்பு வடிவமுள்ள மரம்
 7. நேராக மேல் நோக்கி வளரும் மரம்

எனப் பிரிக்கலாம்.

வடிவமைப்பு

கட்டிடங்களுக்கு பிரேம் போட்டது போன்ற ஒரு வடிவமுள்ள மரங்கள் நடப்படுகின்றன. இதற்கான மரங்களை கட்டிடத்தின் முன்பக்க ஓலங்களில் சிறிது தூரம் விட்டும் கட்டிடத்தின் பக்கவாட்டிலும் நட வேண்டும். கட்டிடத்தின் முன்புறம் நடப்படும் மரங்கள் அவற்றை இரண்டாக பிரித்துக்காட்டத வண்ணம் இருக்க வேண்டும்.

பின்புற காட்சி
பின்புற காட்சிக்காக நடப்படும் மரங்கள் வளர்ந்து முதிர்ந்ததும் அவைகளின் கிளைகள் கட்டத்தில்  கூரைக்கு மேலபக இருக்க வேண்டும் இம்மரங்களின் இலைகள் கூரையின் தேற்றத்தை எடுப்பாக காட்டும். கட்டிடத்தின் முன்பக்கமிருந்து பார்க்கும் போது இத்தகைய மரங்களினால் ஒரு பின்புற காட்சி அமைப்பு கிட்டும்.

மறைவு

வேண்டாத இடங்களை பளிச்சென்று கண்களுக்கு தெரியா வண்ணம் மறைப்பதற்கு மரங்கள் உதவுகின்றன. இதற்காக மரங்களை கூட்டமாக நடும்போது மரங்களின் பலவித வடிவங்களும் , இலை , மலர் ஆகியவைகளின் வண்ணங்களும் கண்களுக்கு புலப்படாமல் செய்து விடுகின்றன.

காற்று தடுப்பு
உயரமாக , அடர்த்தியாக வளரக்கூடிய இலையுதிர்க்காத மரங்களை பல வரிசைகளில் அடர்த்தியாக நடும்போது காற்றின் வேகம் குறைக்கப்படுகிறது. மேலும் காற்றில் வரும் தூசுகளையும் தடுக்கிறது.

தனி உருவகம்

கண்கவர் மலப்களுடன் (அ) விகோதமான கிளைகளுடக் கூடிய (அ) சிறிய ஊசி இலைகளுடன்  கூடிய மரங்களை தனி ஒரு மரமாக நட்டால் அந்த இடத்திற்கு ஒரு அழுத்தம் கிடைக்கிறது புல் தரையின் ஓரம் , கட்டிடத்தின் முன் பக்க ஓரம் , மதில் ஓரம் நடப்படும் இத்தகைய மரங்கள் கவர்ச்சியுடன் மிளிரும்.

ஒருமை

            எங்கும் எப்போதும் கட்டிடங்களையே பார்த்து பார்த்து சலித்த கண்களுக்கு அவைகளோடு பசுமையான மரங்களையும் செடிகளையும் காணும்போது அந்த சலிப்பு நீங்கி புத்துணர்ச்சி ஏற்படகிறது.

மரங்கள் நடும் முறை

அநேக மரங்கள் விதைகள் மூலமும் சில மரங்கள் போத்துக்ள நட்டும் இன்னும் சில மரங்கள் பதியன்கள் மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. மரககன்றுகளை நன்கு தயார்  செய்யப்பட்ட ( 1 x 1 x 1 மீ) குழிகளில் மேல் மண்ணுடன் சம அளவு மக்கிய மாட்டு உரம் கலந்து நிரப்பி தண்ணீர் விட்டடு பின்பு மரக்கன்றுகளை நட வேண்டும். மரங்கள் வளரும் தன்மையைப்பொருத்து தக்க இடைவெளி விட்டு நட வேண்டும். மரங்கள் வளரும் போது தரையிலிருந்து 2 மீட்டர் உயரம் வரை பக்க கிளைகள் இல்லாமல் ஒரே அடி மரத்துடன் இருக்குமாறு வளர்க்க வேண்டும்.

மரங்களின் வகைகள்
அலங்கார மரங்களை மலர் மரங்கள் , நிழல் மரங்கள் , இலை அழகு மரங்கள் என 3 பிரிவுகளாகப்பிரிக்கலாம்.

மலர் மரங்கள்

பேய் மரம்
இனிய மணமுடைய வெண்மை நிற மலர்கள் கொத்து கொத்தாக பூக்கும் காய்கள் 30 -50 செ.மீ நீளம் கொத்தாகத் தொங்கும் விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

மந்தாரை
இலைகள் ஒட்டகத்தின் கால் தடத்தைப் போன்ற வடிவில் இருக்கும் மலர்கள் இளஞ்சிவப்பு , வெள்ளை , வெள்ளை மலர்களில் சிவப்பு கோடுகள் , மஞ்சள் ஆகிய நிறங்களில் உள்ளன. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

பத்திரி

            தொங்கும் கிழைகளில் பளபளக்கும் இலைகளைக் கொண்ட மரம் . வெண்மை நிறத்திலும் இளஞ்சிவப்பு நிறத்திலும் பூக்கள் தோன்றும். மார்ச் – ஏப்ரல் மாதங்களில் கொத்துக் கொத்தாக பூக்கும். விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

பொரச மரம் (காட்டுத் தீ)
இலைகள் முழுவதும் உதிர்ந்த பிறகு பூக்கள் தோன்றும். ஆரஞ்சு – சிவப்பு நிறத்தில் காணப்படும். காய்கள் ஒரே விதையுடையவை. விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
பாட்டில் பிரஷ் மரம்
இம்மரத்தின் மலர்கள் பாட்டில்கள் கழுவுவதற்கு உபயோகப்படுத்தும் பிரஷ் போன்று இருப்பதால் இதற்கு இப்பெயர் வந்தது. ஏப்ரல் அல்லது ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் பூக்கும் பூக்கள் சிவப்பு சிறத்தில் இருக்கும். பதியங்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

சரக்கொன்றை
சித்திரைக்கன்னி என்று மற்றொரு பெயரும் உண்டு. பிப்ரவரி – மே மாதங்களில் இடைவெளி இல்லாமல் ஒரே மஞ்சள் நிற பூக்கள் சரஞ்சரமாக தொங்கும் இம்மரம் விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

கல்யாண முருங்கை

மார்ச் – ஏப்ரல் மாதங்களில் இலைகள் அனைத்தையும் உதிர்த்துவிட்டு சிவப்பு மலர்க்கொத்துகளை தாங்கி நிற்கும் . பெரிய போத்துகளை நடுவதன் மூலம்  இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

ஜெகரான்டா
அழகான சிறிய இலைகளைக் கொண்ட இம்மரம் இலைகளை உதிர்த்தவுடன் மார்ச் – மே மாதங்களில் நீண்ட நீல நிற மலர் கொத்துகளைத் தாங்கி நிற்கும். விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

நிழல் மரங்கள்
(உம்) குன்றுமணி மரம், வாகை, வேம்பு, இலுப்பை, டிவிடிவி, ஈட்டி, தூங்கு மூஞ்சி, நாவல் , ஆலமரம், அரச மரம், புங்க மரம் , மகாகனி, புளிய மரம், தேக்கு, மருத மரம.

இலை அழகு மரங்கள்

(உம்)  கிறிஸ்துமஸ் மரம், தூஜா, பெரனி மரம்,  புளுமேரியா, அழகு ரப்பர்,  கறிப்பலா, சவுக்கு மரம், தைல மரம், சில்வர் ஓக், நெட்டி லிங்கம் , பாதாம் மரம்.

அலங்கார குத்து செடிகள்
குத்து செடிகள் மரங்களைவிட சிறியதாக இருக்கும். அவற்றை தனியாக நடுவதை விட கூட்டமாக நடுவதே நல்லது. குத்து செடிகளிலும் மலர் அழகுச் செடிகள் மற்றும் இலை அழகுச் செடிகள் உள்ளன. அலங்கார குத்து செடிகளை வேலியாக அல்லது தடுப்பு சுவராகப் பயன்படுத்தலாம்.

இலை அழகு குத்துச் செடிகள்
(உம்) அகாலிபா, குரோட்டன்ஸ் , டுராண்டா, இராண்திமம், கிராப்டோபில்லம், காட்டாமணக்கு, லட்சக்கோட்டை போன்றவையாகும்.

மலர் அழகுச் செடிகள்
பார்லேரியா, பாகினியா, காகிதப்பூ, சிசால்பினியா, சேஸ்ட்ராம், கேசியா, டோம்பியா, யுபோர்பியா, ஹேமிலியா, செம்பருத்தி , மல்லிகை , முல்லை, ஜாதஜ , லண்டார்ணா, மருதாணி, முசாண்டா, அரளி, பவள மல்லி, பெண்டாஸ், பிளம்பாபோ, டேக்கோமா போன்றவைகள் ஆகும்.

குத்துச் செடிகள் நடும்முறை
குத்துச் செடிகள் தரையில் நடுவதற்கு முன் நிலத்தில் குழிகள் எடுக்க வேண்டும் குழிகளின் அளவு 1 ½  x 1 ½ x 1 ½    அடி நீளம் , அகலம் , ஆழம் ஆகும். குழிகளில் மக்கிய தொழு உரம் , செம்மண் , மணல்  மற்றும் மேல் மண் ஆகியவற்றை சமமான அளவுகளில் இட வேண்டும். பின் மழைக்காலங்களில் , பாலிதீன் பைகளில் நன்கு வளர்ந்த அலங்கார குத்து செடிகளை பராமரிக்கலாம். செடிகள் துளிர் விட்டு நன்கு வளரும் போது பூச்சி , நோய்கள் ஏதாவது தென்பட்டால் அவற்றை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். செடிகள் ஓரளவு வளர்ந்த பிறகு செடிகளைச் சுற்றி உரம் இட்டு மண் அணைத்து நீர் பாய்ச்ச வேண்டும்.

அலங்கார வேலிச் செடிகள்
வேலிச் செடிகள் நடுவதற்கு 60 செ.மீ அகலம் 90 செ.மீ ஆழமுள்ள நீளமான குழி வெட்ட வேண்டும். பின்னர் குழியில் மக்கிய மாட்டு எரு அல்லது மக்கிய இலைகளுடன் மண்ணையும் கலந்து நிரப்ப வேண்டும். மழைக்காலத்தில் விதைகளை அல்லது போத்துகளை 2 அல்லது 3 வரிசைகளில் நட்டு அடாத்தியான வேலி அமைக்கலாம். விதைகள் முளைக்காமலோ அல்லது போத்துகள் துளிர்க்காமலோ இடைவெளி ஏற்பட்டால் உடனே அதை நிரப்ப தினக் கவனம் செலுத்த வேண்டும்.  நட்ட 6 மாத காலம் வரை வாரம் ஒரு முறையும் பிறகு தண்ணீர் பாய்ச்ச தேவையில்லை. வேலிச் செடிகளை சதுரமான வடிவில் அமையுமாறு வெட்டி விட வேண்டும். மேல் பாகம் அடிப்பாகத்தை விட அகலமாக இருக்க கூடாது. வேலிச் செடிகளை வேண்டிய உயரம் வரை வளர விட்டு பின்பு வெட்டி விடுவதைக் காட்டிலும் முதலில் 30 செ.மீ உயரத்தில் வெட்டி விட வேண்டும். சில காலம் வளர விட்டு இரண்டாவது தடவை 45 செ.மீ உயரத்தில் வெட்டி விட வேண்டும். இவ்வாறு சிறிது சிறிதாக உயரத்தை கூட்டி வேண்டிய உயரம் வரை கொண்டு வந்தால் வேலி அடர்த்தியாக இருக்கும்.

(உம்) அகாலிபா,  காகிதப்பூ, கிளிரோடென்ரான், டுரான்டா, குப்ரசஸ், செம்பருத்தி, ஹேமிலியா, மெனியா, சவுக்கு, அரேலியா, மருதாணி போன்றவைகள் ஆகும்.

வருடாந்திர மலர்ச் செடிகள்
பெரும்பாலான வருடாந்திர மலர்ச் செடிகள் நாற்றுகள் நட்டு வளர்க்கப்படுகின்றன. சில வகைகளில் பக்கக் கன்றுகள் , வேர்ச்செடிகள் முதலியன நட்டும் வளர்க்கப்படுகின்றன. அகன்ற ஆழமில்லாத தொட்டிகளில் அல்லது நாற்றங்கால் பாத்திகளில் விதை விதைத்து குறிப்பிட்ட நாட்கள் கழித்து, பிடுங்கி நடப்படுகின்றன. மிகவும் நுண்ணிய விதைகளுடன் 4 மடங்கு மணல் சேர்த்து விதைக்க வேண்டும். விதைத்த பிறகு பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். விதைகள் முளைத்து வர ஆரம்பித்ததும் கன்றுகளை களைத்து விட வேண்டும். விதைத்து மாதம் கழித்து அதாவது கன்றுகள் 6 – 8 இலைகளுடன் காணப்படும் சமயத்தில் பிடுங்கி நட வேண்டும். நடும் போது நட வேண்டிய பாத்திகளில் தண்ணீர் பாய்ச்சி , ஈரமாக இருக்கும் போது சிறிய குச்சி மூலம் தகுந்த இடைவெளியில் துவாரம் உண்டாக்கி கன்றுகளை அத்துவாரங்களில் நட்டு சுற்றிலும் மண்ணை அமுக்கி விட வேண்டும். நட்டவுடன் பூவாளி மூலம் நீர் தெளிக்க வேண்டும். சில செடிகளுக்கு நட்டவுடன் நிழல் கொடுக்க வேண்டும். இதற்காக பெரிய இலைகளை உபயோகப்படுத்தலாம். பாத்திகளில் 15 நாட்களுக்கு ஒரு முறை களை வெட்ட வேண்டும். செடிகளில் முதல் மொட்டு தோன்றியவுடன் , பாத்திகளில் மக்கிய எரு இட்டு மண்ணைக் கொத்தி விட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

அனைத்து பருவ காலங்களுக்கும் ஏற்ற வருடாந்திர மலர்ச் செடிகள்

ஆஸ்டர் , சிவந்தி , டயாந்தஸ் ஜெர்பிரா , பேன்சி , சால்வியா, கோல்டன் ராடு, வெர்பினா , சுடுகாட்டு மல்லி

குளிரான மலைப் பிரதேசத் தோட்டங்களுக்கு ஏற்ற வருடாந்திர மலர்ச் செடிகள்

ஆலிசர், சினாப்டிரகான், ஆப்ரிக்கன் டெய்சி, காலண்டுலா,  சைனா ஆஸ்டர், லாஷ்பர் , ஹெலிகிரைசம், ஸ்டேட்டிஸ், லூப்பின், மைமுலஸ்,  ஈவினிங் விரைம், ரோஸ், லேடிஸ் லேஸ் ஆகியன.

மழைக் காலங்களுக்கு ஏற்ற வருடாந்திர மலர்ச் செடிகள்
காஸ் மாஸ் , செங்கீரை , பால்சம், டைதோனியா, சினியா

குளிர் காலங்களுக்கு ஏற்ற வருடாந்திர மலர்ச் செடிகள்
கேரியாப்சிஸ், கைலார்டியா, பெட்டுன்யா, பிளாஷ், செண்டு மல்லி

கோடைகாலத்திற்கு ஏற்ற வருடாந்திர மலர்ச் செடிகள்

வாடாமல்லி , ஹாலிஹாக், டேபிள் ரோஸ்,  கோழிக் கொண்டை

 

அலங்காரக் கொடிகள்
வளர்க்கும் முறை

குழிவெட்டி (1 x 1 x 1மீ) குழியில் மண்ணுடன் சம அளவு மக்கிய எரு கலந்து நிரப்பி குளிர தண்ணீர் விட வேண்டும். கொடிகள் பெரும்பாலும் பதியங்கள் , தண்டுகள் அல்லது விதைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகின்றன. இவற்றில் ஏதாவது ஒன்றினை நட்டு தண்ணீர் ஊற்ற வேண்டும். கொடி படர்ந்து வளர்வதற்கான பற்றுக் கோல் மற்றும் இதர சூழ்நிலைகளை செடி நட்டவுடனேயே அமைத்து விட வேண்டும். வளர்ந்து வரும் கொடிகளை அவ்வப்போது நீக்கி வந்தால் கொடி கவர்ச்சியுடன் வளரும்.

அலங்காரக் கொடிகளின் வகைகள்
அலமாண்டா, ஆண்டிகோனான், அரிஸ்டோலோகியா, மனோரஞ்சிதம், ஆஸ்பராகஸ், பிக்னோனியா, காகிதப்பூ, பெரண்டை, கிளி மாட்டிஸ் சங்கு புஷ்பம், பைகஸ் ஐவி 

வீட்டினுள் வளர்க்க ஏற்ற இடங்களும் அழகு செடிகளும்
பொதுவாகவே வீட்டைச்சுற்றி அலங்கார செடிகள் மற்றும் இயற்கைப் பொருட்களான கற்கள், நீர்ச் செடிகள் முதலியவற்றை உபயோகித்து அழகுபடுத்துவதன் மூலம் வீட்டின் அமைப்புக்கு ஒரு இயற்கையோடு இணைந்த சூழலை ஏற்படுத்த முடியும். இது போன்றே வீட்டில் உட்பகுதியிலும் பலதரப்பட்ட செடிகளை வளர்ப்பதன் மூலம்  வீட்டின் உட்பகுதியை நன்கு அழகுறச் செய்யலாம். இவை இயற்கையோடு இணைந்த சுற்றுப்புற சூழலையும், மன அமைதி மற்றும் புத்துணர்வை நமக்கு தருகிறது.

நாம் வீட்டின் உள்ளே என்று சொன்னவுடன் எவ்வாறு செடிகளை ஒளிபடாமல் வளர்க்க முடியும் என்ற சந்தேகம் பலருக்கு எழலாம். வீட்டின் உட்பகுதியை ஆராய்ந்தால் செடிகள் வரவேற்பறை , குடும்ப அங்கத்தினர் மற்றும் நண்பர்கள், விருந்தினருடன் கலந்துரையாடும் பகுதி, கலைப் பொருட்கள் பாதுகாத்து வைக்கும் அலங்கார மேடை மற்றும் அடுக்குகள் சுற்றிலும் ஜன்னல் ஓரங்கள்  போன்றவை வீட்டினுள் அலங்காரம் செய்வதற்கு மிக ஏற்ற இடங்களாக தென்படுகின்றன. இனி ஒவ்வொரு இடமாக எவ்வாறு செடிகளைக் கொண்டு அலங்கரிப்பது என்பதை விரிவாகப் பார்ப்போம்.

நம் வீட்டில் வரவேற்பரை மற்றும் கலை மற்றும்  பரிசுப் பொருடகள் பாதுகாத்து பார்வைக்கு வைக்கும் கண்ணாடி சுவர் அலமாரிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் , உணவருந்தும் மேசை போன்ற பகுதிகளில் நன்கு வளர்ந்த அலங்கார இலைகள் கொண்ட செடிகளை வைத்து அழகுபடுத்தலாம். இவ்வாறு வைக்கப்படும் செடிகளின் எண்ணிக்கை நாம் வைக்கும் நாம் வைக்கும் அறையில் நீள அகல மற்றும் செடிகளின் அமைப்பை ஒத்து மாறுபடும். இங்கு வைக்கும் செடிகள் அவைதம் அமைப்பில் பெரியதாக இருப்பதால் அவற்றிற்கு தண்ணீர் ஊற்றும் போது உபரி கசியும் நீர் தரையில் வழிந்து தரையை சேதம் செய்யா வண்ணம் இருக்க தனித்தனி தட்டுகள் வைத்திட வேண்டும். இவ்வாறு வைக்கப்படும் செடிகள் சூரிய ஒளி கிடைக்க வாய்ப்பே இல்லாமல் தட்டுகள் வைத்திட வேண்டும். இவ்வாறு வைக்கப்படும் செடிகள் வீட்டுத்திண்ணையில் வைத்திட வேண்டும். நல்ல வெப்பநிலையில் சூரிய ஒளி படும்படி வைக்கக்கூடாது. இவை அறையினுள்ளே இருப்பதால் இவற்றில் இலைகளின் தூசி படிய வாய்ப்புள்ளமையால் சிறு தெளிப்பான் கொண்டு 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தப்படுத்துவதன் மூலம் செடிகள் நன்கு இயற்கை எழிலுடன் தோன்றச் செய்யயலாம்.

இது தவிர வீடுகளில் திண்ணை மற்றும் போர்டிகோ வீட்டு அறைக்கு நுழைவாயில் போன்ற இடங்கள் முதலியவற்றையும் செடிகள் கொண்டு நன்கு அழகுறச் செய்யயலாம். போர்டிகோ வீட்டு மற்றும் வீட்டு நுழைவாயில் போன்ற இடங்களில் நல்ல சூரிய ஒளி படும்படி இருப்பதால் நாம் வெளித்தோட்டத்தில் வைக்கும் செடிகளையே தொட்டிகளில் வளர்த்து அவற்றை அவை தாம் கொண்டுள்ள அழகு இலைத் தன்மை, பூத்தன்மை மற்றும் பல நிற வேறுபாடு கொண்ட இலைகள் ஆகியவற்றிற்கு தக்கபடி தொட்டியை முன்னும் பின்னும் மாற்றி அமைப்பதன் மூலம் நன்கு அழகுபடுத்தலாம்.

            சன்னல்  பகுதியில் வெளியே சன்சேடு போன்ற பகுதி வரை வளர்ந்து அவற்றின் மேலிருந்து சன்னலை சார்ந்து தொங்கும் வண்ணம் கொடிகளை தரையில் நட்டு வளரச் செய்யலாம். சில தாவர வகைகள் சுவற்றில் ஒட்டி வளரும் தன்மை கொண்டது. சுவரொட்டி என்ற செடி தன்னுடைய தண்டுகளிலிருந்து வரும் சிறிய வேர்களைக் கொண்டு சுவற்றில் ஒட்டிக் கொள்ளும். இவற்றில் சிறுசிறு இலைகள் இருப்பதால் இது சுவற்றில் ஒட்டி படர்ந்து சுவரே வெளியில் தெரியா வண்ணம் அழகிய இலை கொண்டு மூடி எடுப்பான தோற்றத்தைத் தந்திடும்.

போர்டிகோ பகுதியில் தொங்கும் தொட்டிகள் பொருத்திக் கொள்ள ஏதுவாக இரும்பு வளையங்கள் பல வரிசையாக கட்டிடம் கட்டும்போதே பொருத்தி இருக்கும் இவற்றில் தொங்கும் தொட்டிளில்  பல அழகுச் செடிகளை வைத்து தொங்கிவிடுவதன் மூலம் அழகுறச் செய்யலாம். இவ்வாறு வீட்டின் முகப்பில் செடிகளைக் கொண்டு மிகவும் அழகுறச் செய்யலாம். சில வீடுகளின் நுழைவுக்கு முன்பு சிறுபந்தல் போன்ற அமைப்பை அமைத்து அதன் மேல் நம் விருப்பத்திற்கு ஏற்ப மலர்க்கொடிகளை படரவிடுவதன் மூலம் போர்டிகோவில் ஒருபுறம் கான்கிரீட் தொட்டிகள் கட்டுமானத்திலேயே அமைந்திருப்பதைக் காணலாம். இது போன்ற தொட்டிகள் இரு புறங்களிலும் வரிசையாகவோ அல்லது பக்கத்திற்கு ஒன்றிரண்டாகவோ வைத்திருப்பார்கள். இவற்றில் பல அழகுச் செடிகள் அவற்றின் தன்மைக்கு ஏற்றவாறு அழகு இலைகள் கொண்ட செடிகள் , இலை நிற வேறுபாடு கொண்டவை. பூக்கும் தன்மை கொண்ட செடிகள் போன்றவற்றை தனியாகவோ மற்ற செடிகளுடன் கலந்தோ நடுவதன் மூலம் இவ்வகையான போர்டிகோவை நன்கு அழகுறச் செய்யலாம். போர்டிகோவில் பக்கவாட்டில் பூக்கும் அல்லது அழகு இலையுடன் கூடிய படர் கொடிகளை படரவிட்டு போர்டிகோவின் மேலிருந்து தொங்கும் வண்ணம் வளரவிட்டு அவற்றை வெட்டி விட்டு அழகுடன் மிளிரச் செய்யலாம்.

இது தவிர வீட்டின் முன் வாயில் போர்டிகோவின் முன்பகுதி , போர்டிகோ பகுதி போன்ற இடங்கள் தொட்டிகளில் வளர்க்கப்பட்டு பெரிய, சிறிய செடிகளை தனித் தொட்டிச் செடியாகவோ அல்லது கூட்டாகவோ வைத்து நல்ல எடுப்பான தோற்றத்தை ஏற்படுத்தலாம்.
இவ்வாறு பலவகைகளில் செடிகளை வீட்டினுள் வளர்க்கும் போது அவற்றின் சீரான வளர்ச்சிக்கு நல்ல பராமரிப்புத் தேவை. அவை:

 1. தண்ணீர் தேவையை தேவையான அளவுக்கு 2 நாட்களுக்கு ஒருமுறை அளித்திட வேண்டும்.
 2. செடிகளின் வளர்ச்சி மிதமிஞ்சிவிட்டால் அவற்றை வெட்டி வளர்ச்சியை சீர்படுத்துதல்.
 3. தொட்டியின்  மேல் பகுதி மண் அரை அடி அளவுக்கு எடுத்து புது மண்ணைக் கொண்டு நிரப்புதல் 6 மாதத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டும்.
 4. செடிகளில் படியும் தூசு முதலியவற்றை வாரம் ஒரு முறை தெளிப்பதன் மூலம் தண்ணீர் தெளித்து சுத்தப்படுத்த வேண்டும்.
 5. பூச்சி , பூஞ்சான நோய் தாக்குதல் இருந்தால் தக்க தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாம் வைக்கும் அறை போன்றவற்றில் சூரிய ஒளி படுவதற்கு வாய்ப்பே இல்லாமையால் அவற்றை 20 நாட்களுக்கு ஒரு முறை அல்லது மாதம்  ஒரு முறை சூரிய ஒளி படும்படி திண்ணை அல்லது போர்டிகோ போன்ற பகுதியில் வைக்க வேண்டும். இது தவிர இந்த இடங்களில் வைக்கும் செடிகளை இடத்தை மாற்றி வைப்பதன் மூலம் முகப்பு பாகம் மற்றும் போர்டிகோ பகுதியில் வைத்துள்ள செடிகளை 2 மாதத்திற்கு ஒரு முறை வீட்டிற்குள்ளே கொண்டு வருதல் போன்ற மாற்றத்தை கையாளலாம்.

 
இது போன்ற பராமரிப்பின் மூலம் செடிகள் நல்ல நிலையில் நீண்ட நாள் நம் வீட்டு அலங்கரிப்புக்கு பயன்படுத்தலாம்.

இப்போது இந்த வகையான வீட்டில் வளர்க்கப்படும். அழகுச் செடிகளைத் தெரிந்து கொள்வோம். பொதுவாக இவ்வகைச் செடிகளுக்கு சூரிய ஒளி அதிகம் தேவைப்படாது.

வீட்டில் முன் பகுதி போர்டிகோ பகுதியில் வைக்கும் செடிகள்

பனை மர வகைகள் பலவித இலை அமைப்பு கொண்டவைகளான பிட்சார்டிய, திரிநாஷ், குரோட்டன் வகைகள், எராந்திமம், கிராப்டோபியம், அக்ஸோநீமா, ஆஸ்பராக்ஸ், கலர் கீரை, கோலியஸ், டைபன்பேக்கியா, டிரசீனா, பைலியா, பெரலி வகைகள்  மற்றும் ரப்பர் செடி வகைகள்.

பூக்கள் கொண்ட செடிகள்
காசித்தும்பை, பெட்டூனியா, குள்ள மெரிகோல்ட், ஹெலிக் கோனியம் மற்றும் சாமந்தி