தோட்டக்கலை :: நிழ எழிலூட்டுதல் :: கூரை தோட்டங்கள்

கூரை தோட்டங்கள்

கூரை தோட்டம் - புகைப்படத் தொகுப்பு
கூரை தோட்டம் பற்றிய கேள்வி பதில்கள்
அறிமுகம்:
பசுமைக் கூரைகள் நகர்புற சூழலில் பொருளாதார மற்றும் பல நன்மைகள் வழங்குகின்றன. இவைகளில் வெப்ப விளைவு மட்டுப்படுதல், தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு இயற்கை வாழிடங்கள் வழங்குதல், தூசு, பனிப்புகை மற்றும் சத்தம் அளவு குறைப்பு, புயல் வெள்ள மேலாண்மை, நீர் மேலாண்மை மற்றும் நீர் தரம் மற்றும் குறைந்த ஆற்றல் பயன்பாடு ஆகியவை அடங்கும். பசுமைக் கூரைகள் வாழ்க்கை தரத்தை உயர்த்துகின்றது.

பல்வேறு நோக்கத்திற்கான கூரைத் தோட்டங்கள்

பொதுக் கட்டிடங்கள் வீடு – கூரைத் தோட்டம்

உணவகங்களின் கூரைகளில் குடியிருப்புகளில் புத்துணர்வு ரீதியான கூரைத் தோட்டங்கள்

விரிவான பச்சை கூரைகள்

வகைகள் :
பசுமைக் கூரைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

  • விரிவான கூரை / பசுமைக் கூரைகள்
  • தீவிர கூரை (கூரை தோட்டம்)
விரிவான கூரை / பசுமைக் கூரைகள் தீவிர கூரை (கூரை தோட்டம்)

இந்த வகைப்பாடு ஆழத்தை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்படுகிறது. ஆழம் 15 செ.மீக்கு குறைவாக இருந்தால் அது விரிவான பசுமைக் கூரை, ஆழம் 15 செ.மீக்கு அதிகமாக இருந்தால் அது தீவிர கூரை தோட்டமாகும்.

பண்புகள்

விரிவான கூரை

தீவிர கூரை

வளர்ந்து வரும் நடுத்தர ஆழம் 150 மிமீ அல்லது அதற்கும் குறைவாக 150 மிமீக்கும் அதிகமாக
கிடைக்கக்கூடியவை எளிதில் கிடைக்கும் அரிதாக கிடைக்கும்
முழு நிறைவான எடை குறைவு 48.8-170கிகி/மீ2 அதிகம் 244-1500 கிகி/மீ2
பலவிதமான தாவரங்கள் குறைவு சிறப்பாக
செலவு குறைவு அதிகம்
பாதுகாத்தல் நடுத்தரம் அதிகம்

கூரை தோட்டங்கள் நிறுவுதல் :

  • கூரைத் தோட்டத்தின் அடுக்குகள்
  • நீர் காப்பு
  • வடிகாலமைப்பு அடுக்கு
  • வளரும் ஊடகங்கள்
  • தாவர தேர்வு
  • நீர்பாசனம்

கூரைத் தோட்டத்தின் அடுக்குகள்:

கூரைத் தோட்டத்தில் நீர் காப்பு, வடிகால் அமைப்புகள், துணி அடுக்கு, சிறந்த மண், சிறந்த கூரை அமைப்பு மற்றும் அடிக்கடி மாறிவரும் சூழ்நிலையை தாங்கி வளரும் தாவரத்தை தேர்வு செய்தல் ஆகியவை அடங்கும்.



நிறுவுதல் :

1. கூரையின் மேல் நீர்புகாமல் தடுப்பு
2. கான்கிரீட்டிற்குள் நீர் ஊடுறுவதை தடுக்கும் அடுக்கு
3. வடிகால் செல்களை நிறுவுதல்
4. வடிகால் செல்களை நிறுவிய பின்பு
5. வடிப்பான் அடுக்கு நிறுவுதல்
6. வினை விதை பொருட்களை தாளில் கொட்டி பரப்புதல்
7. வடிவமைத்தல் மற்றும் பயிரிடுதல்
8. தாவரங்கள் வளர்ந்த பிறகு நடுதல்

தட்டு அமைப்பு (விரிவான பச்சை கூரைகள்):


நீர் உட்புகுவதை தடுக்கும் தடுப்பு:

நீர் உட்புகுவதை தடுத்தல் இதில் முக்கிய பகுதியாகும்.  கட்டிடத்தின் வடிவமைப்பு தண்ணீர் காப்பு வடிவடைப்பு கொண்டு நிறுவுதல் வேண்டும். நீர் கடத்தாத சவ்வு பலவகைகளில் உள்ளது. சில சவ்வுகள் வேர் தடையாகவும் செயல்படுகின்றன.

வடிகாலமைப்பு அடுக்கு:

இந்த வடிகாலமைப்பின் நோக்கம் அதிகப்படியான நீர் கூரையில் தேங்காமல் வழிந்தோடுகிறது மற்றும் தாவரத்திற்கு போதுமான ஈரப்பதத்தை தக்க வைத்து அதிகப்படியான நீர் வெளியேறுவதால் தாவரம் பாதிக்கப்படுவதில்லை. வடிகாலமைப்பு அடுக்கு கட்டிடத்தின் வடிகால் அமைப்புடன் இணைக்கப்படுகிறது.வடிகால் அமைப்பு நிரந்தரமாக முழு கூரைக்கும் அமைக்கப்படுகிறது. இவை சூற்றுச்சூழலுக்கு ஏற்ப அமைக்கப்படுகிறது.
    • வடிகால் அமைப்பின் அளவு
    • தண்ணீர் வைத்திருக்கும் அடுக்கு
    • வளரும் ஊடகம்

வடிகட்டி தாள்:

தேவையான நீரை வைத்துக்கொண்டு அதிகப்படியானவற்றை வெளியேற்றுகிறது.

வளரும் ஊடகம் :

வளரும் ஊடகத்தை தேர்ந்தெடுத்தல் பசுமைக் கூரைகளின் நீண்ட மற்றும் குறுகிய கால வெற்றிக்கு முக்கியமானதாகும். பின்வரும் காரணிகள் வளரும் ஊடகங்களைத் தேர்ந்தெடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
  • சுமை தாங்கும் திறன்
  • சாய்வு
  • காலநிலை
  • வடிகாலமைப்பு
  • தாவர இனங்கள்


பசுமைத் தோட்டத்தில் இயற்கை முலக்கூறு கனிமங்கள் மணல், களிமண், படிகக்கல், சரளை முதலியவை ஆகும். செயற்கை அல்லது தாது மூலக்கூறுகள் பெர்லைட், வெர்மிகுளேட்  ஆகியவை கூரை தோடத்தில் பயன்படுகின்றன. அங்கக பொருட்களான புல் கரி தூள் கரி, குப்பை ஆகியவையும் சேர்க்கப்படுகின்றன. மண்ணில் கார அமிலத் தன்மை 5.5-8 ஆக இருக்க வேண்டும். காற்று உள்ளடக்கம் மற்றும் நீர் சேமிப்புத் திறன் முறையே 20% மற்றும் 45% இருக்க வேண்டும்.

தாவர இனங்கள் தேர்வு:

தாவர இனங்கள் தேர்வு கீழ்வருவனவற்றை உள்ளடக்கியது.

  • பராமரிப்பு முதலீடு மற்றும் வளங்கள்
  • அழகியல்
  • காலநிலை மற்றும் வானிலை
  • கட்டமைப்பு பளு தாங்கி
  • கூரை வகை
  • தாவர வளர்ச்சி விகிதம் மற்றும் ஊட்டச்சத்து தேவை
  • வழங்குதல் மற்றும் இருப்பு

கூரைத் தோட்டத்தில் புல்வெளி புதர்கள், புதர்காடு மற்றும் மலர்கள் வளர்க்கலாம். மரங்கள் 50 செ.மீ ஆழம் கொண்ட வளரும் ஊடகங்களில் வளர்க்கலாம்.
கூரைத் தோட்டத்தில் பின்வரும் காரணிகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

  • சில குறிப்பிட்ட வகைகள், குறிப்பாக பசுமைமாறா மற்றும் அடர்த்தி குறைவான தாவரங்கள்
  • புதர்கள் மற்றும் புதர்காடுகள் காற்றை தாங்கி வளருபவையாக இருக்க வேண்டும்.
  • சில தாவரங்கள் உணர்வு நுட்பம் கொண்டவை மற்றும் வெப்பம் சார்ந்தவையாக இருக்கும்

குறைந்த சதைப்பற்று வளர்ச்சி சீடம்ஸ் (Sedums), ஆப்டீனியா கார்டிஃபோலியா (Aptinia cordifolia), போர்டுலுகா (Portuluca), க்ரேசுலா (Crassula spp)
நீடித்திருக்கின்ற ஆல்டர்னென்தேரா (Alternenthera), சாமந்தி (Marigold)
தரையில் படரும் ஸெ்ட்கிரியாசி புர்புரியா (Setcreasea purpurea), வெடிலியா (Wedelia), கார்ட்ஸ் (gourds)
அதிக சதைபற்றுள்ள ஆலோ (Aloe), ஜாடே பயிர் (Jade plant)
புற்கள் ஜாய்சியா –கொரியன் புல் (Zoysia –korean grass), பர்முடா புல் (Bermuda grass), அலங்கார புற்கள் (Ornamental grasses)
மூலிகைகள் மற்றும் காய்கறிகள் ரோஸ்மேரி, அனைத்து கீரை வகைகள்
மரங்கள் (தீவிர கூரை தோட்டங்கள்) புளுமேரியா அல்பா (Plumeria alba), மாதுளை (Pomegranate),எலுமிச்சை மரங்கள் (Citrus trees), பனை (Palms)

நீர்ப்பாசனம்:

கூரைத் தோட்டத்திற்கு அடிக்கடி நீர்ப்பாய்ச்சுதல் வேண்டும். இவை குழாய், தெளிப்பான், சொட்டு நீர் குழாய் அல்லது மேல்நிலை பாசனம் அல்லது தானியங்கி தண்ணீர் அமைப்பின் மூலம் நீர்ப்பாய்ச்சலாம்.

நன்மைகள்:

  • கலைநயத்துடன் காணப்படும்
  • வெப்பம் குளிர் காற்றிற்கு இயற்கை பாதுகாப்பு அரனாகவும், கட்டிடத்தின் ஆற்றல் சேமிப்பானகவும் உள்ளது.
  • கார்பன்டை ஆக்ஸைடு அளவைக் குறைத்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கிறது மற்றும் காற்றின் தரம் கூடுகிறது.
  • வெப்ப காப்பு மற்றும் ஆற்றல் திறன் அதிகரிக்கிறது
  • பாதகமான வெப்பநிலையிலிருந்து கட்டிடத்தை பாதுகாக்கிறது. எனவே கட்டிடங்களின் வாழ்நாள் அதிகரிக்கிறது
  • நகர்ப்புற வெப்ப விளைவை மட்டுப்டுத்துகிறது
  • மழைநீரை சேகரிக்கிறது எனவே வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்குகிறது.

ஆதாரம் :
மலரியல் மற்றும் நில எழிலூட்டும் துறை
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயமுத்தூர் – 3.

Last Update : January 2016