தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: தென்னை

தாவரவியல்

வேர்

  • தென்னையின் வேர் சல்லி வேராகும். இவை அடி மரத்திலிருந்து தொடர்ந்து உருவாகும். இதில் ஆணி வேர் மற்றும் வேர்முடிகள் கிடையாது. ஆனால் மிக அதிக அளவு சிறு வேர்களைக் கொண்ட முதன்மை வேர்கள் காணப்படும்.
  • அடிமரத்திலிருந்து வளரும் இதன் முக்கிய வேர்கள் கிடை மட்டத்தில் வளரக் கூடியவை. இந்த வேர்கள் பெரும்பாலும் மேல்மட்ட மண்ணில் காணப்படும். இதன் முக்கிய கிளை வேர்கள் மிக ஆழத்திற்கு செல்லக் கூடியவை.
  • தென்னையின் வேரில் கேம்பியம் திசு கிடையாது. சமச்சீரான இந்த முதன்மை வேரின் விட்டம் சுமார் ஒரு மீட்டராகும். இந்த வேரின்நுனிகள் மிக வேகமாக வளரக் கூடியவை. இவை துடிப்பான உறுஞ்சு வேர்களாகும். மிக மெல்லிய செல்சுவரை உடைய எபிடெர்மிஸ் செல்கள் ஓர் அடுக்கில் காணப்படும். இவை வளர வளர கடினமாகவும் ஊடுருவும் தன்மையற்றும் காணப்படுகிறது.
  • முதிர்ந்த வேரில் உள்ள எபிடெர்மிஸ் பகுதி சிதைந்து சிவப்பு நிறமுள்ள ஹைப்போடெர்மிஸ் பகுதியை தருகிறது.
root   root
தென்னை வேர் அமைப்பு

தண்டு

  • இதன் தண்டு அடிமரம் என அழைக்கப்படும். இது பக்க கிளைகளற்ற உருண்டை (அ) உருளை வடிவ பருத்த தடிமனான நீளமான தண்டு ஆகும்.
  • தென்னை ஓலையின் அடிப்பகுதி  தண்டுப் பகுதியுடன் இணைந்து காணப்படும்.
  • இந்த வடுக்களின் எண்ணிக்கை மூலம் தென்னை மரத்தின் வயதை நாம் அறிய முடியும். ஒரு மரத்தில் சுமார் 12-14 வடுக்கள் இருப்பின் இந்த மரத்தின் வயது சுமார் ஒரு வருடம் என கணக்கிடப்படுகிறது.
  • முதல் ஒரு சில வருடங்களில் வளர்ச்சி அதிகமாக இருக்கும். இதனால் தண்டுப் பகுதி தடிமனாக மாறிவிடும்.
  • வயது முதிர்ந்த மரத்தில் ஒரு சில வருடங்களுக்கு தண்டின் சுற்றளவு மாறுதலில்லாமல் ஒரே மாதிரியாக இருக்கும் போது வளர்ச்சி குறைந்து காணப்படும்.
  • இந்த தண்டின் உச்சியில் தென்னங்குலைகள் மற்றும் தென்னை இலைகள் கீரிடம் போன்று கூட்டமாக இருக்கும்.
Transverse_Section_of_Coconut_Stem.png
தென்னை தண்டின் குறுக்கமைப்பு

முதிர்ந்த தென்னை தண்டின் அடர்த்தி

தென்னை தண்டின் பயன்பாடு

இலை

  • தென்னை ஓலைகள் தண்டின் உச்சியில் கீரிடம் போன்று கூட்டமாக காணப்படும்.
  • இளம் இலைகள் மரத்தின் உச்சியில் நடுப்பகுதியில் கூர்மையாக காணப்படும். அனைத்து ஓலைகளும் சேர்ந்து (அல்லது) ஒருங்கிணைந்து காணப்படும்.
  • இந்த ஓலைக்கீற்று (அ) தென்னங்கீற்று முழுமையாக வளர்வதற்கு சுமார் ஐந்து மாதங்களாகும்.
  • இந்த மரத்தில் பதினைந்து முழுவதும் விரிந்த மட்டைகளும் 15 வெவ்வேறு வளர்ச்சிப் பருவத்திலுள்ள இளம் மட்டைகளும் காணப்படும்.
  • இந்த இலையானது நிறைய சிற்றிலைகளைக் கொண்டிருக்கும். இந்த சிற்றிலைகள் நடுநரம்பு அல்லது காம்புடன் சாய்வாக இணைந்து காணப்படும்.
  • ஒவ்வொரு சிற்றிலை (அ) ஓலைகள் ஒரு வலிமை வாய்ந்த (அ) பலமான நடுநரம்பையும் குறுகலான இலைப்பரப்பு மற்றும் இணையான இலை மடிப்பையும் கொண்டிருக்கும்.
  • இலைக்காம்பு தட்டையாக அல்லது மட்டமாகவும் மிகப்பருமனாகவும் அகலமாகவும் காணப்படும். நார்களையுடைய உறையானது அடிப்பகுதியில் மரத்தைச் சுற்றிலும் காணப்படும்.

leaf
தென்னை இலை

பூங்கொத்து (அ) பூங்குலைகள்

  • இந்த பூங்கொத்து (அ) பூங்குலைகள் உற்பத்தியாகி பாளையாக வளர்வதற்கு சுமார் 34 மாதங்கள் ஆகும். மடற்பூங்கொத்தானது தடிமனாகவும் நிமிர்ந்தும் காணப்படும். தடிமனான பூம் பாளையானது இந்த மடற்பூங்கொத்தை சுற்றி காணப்படும். பூங்குலைகள் முதிர்ந்த நிலையில் பூம்பாளை வெடித்து விடும்.
  • பூங்குலைகளின் தண்டு (அ) அச்சானது பக்கக்கிளைகளையுடையது. இந்த தண்டில் காம்பற்ற ஆண் மற்றும் பெண் பூக்கள் ஒரே மரத்தில் காணப்படும்.
  • ஆண் பூக்கள் மிகச் சிறியவை. இந்த பூக்கள் மிக அதிகமாகவும் நெருக்கமாகவும் பூங்குலைகளின் பக்க கிளைகளில் காணப்படும்.
  • இதில் ஆறு அல்லி மற்றும் புல்லி வட்டம் என வேறுபடுத்த இயலாத இதழ்கள் இரண்டு அடுக்கில் காணப்படும். இதல் வெளிஅடுக்கு சிறியதாகவும் உள் அடுக்கு பெரியதாகவும் காணப்படும்.
  • இப்பூம்பாளையின் அடிப்பாகத்தில் பெண் பூக்களைத் தொடர்ந்து மேல் பாகத்தில் ஆண்பூக்கள் காணப்படும் (அ) அமைந்திருக்கும்.
  • இந்த உருண்டையான (அ) கோள்வடிவ அமைப்பு மொட்டு என்றழைக்கப்படுகிறது.
  • ஒரே மாதிரியான கன அளவு மற்றும் உருவம் கொண்ட இந்த ஆறு  அல்லி மற்றும் புல்லி வட்டம் என வேறுபடுத்த இயலாத இதழ்கள் இரண்டு அடுக்கு இதழமைவாக அமைந்திருக்கும். இந்த இதழ்கள் குழிந்த நிலையில் வெண்மையாகக் காணப்படும்.
  • சூழ்முடியானது  சூலகத்தின் அடிப்பகுதியில் காணப்படும்.
Inflorescence
தென்னை பூங்கொத்து
Coconut Flower Inside View
தென்னை பூ
flower
ஆண் மற்றும் பெண் பூ
flower
தென்னை பூ  (தனியாக)

தேங்காய்

  • குட்டை இரகங்களில் மகரந்தச் சேர்க்கை மற்றும் கருத்தரிப்பிற்கு பின்னர் கருத்தரித்த பெண் பூவானது முதிர்ந்த தேங்காயாக மாறுவதற்கு சுமார் 12 மாத காலம் அல்லது ஒரு வருட காலம் ஆகிறது. குலைகளின் எண்ணிக்கை மற்றும் காய் பிடிப்பு தன்மையை பொறுத்து மகசூலை கணக்கிட முடியும்.
  • தேங்காய்  ஒரு கொட்டை இனச் சதைச்சாறு கொண்ட பழம். இதில் மூன்று பாகங்களையும் ஒரே ஒரு விதையையும் கொண்டது. இதன் வெளிப்பகுதி உமி அல்லது உரிமட்டை எனப்படும்.
  • தேங்காய் ஒரு மூன்று சூழக இலை கொண்ட சூலகம் ஆகும். கனி உறையின் வெளியடுக்கைச் சற்றி நார்கள் காணப்படும். இது உமி அல்லது உரிமட்டை என்றழைக்கப்படுகிறது. இது இளம் நிலையில் பசுமையாகவும் முதிர்ந்த உடன் வறண்டு பழுப்பு நிறத்தில் காணப்படும்.
  • இதன் உள்ளோடு அல்லது உள்சுவர் கடினமாகக் காணப்படும். இதுவே சிரட்டையை  உருவாக்கும்.
  • இந்த உள்ளோட்டின் உள்பகுதியில் கரு சூழ் தசை அல்லது முளை சூழ்தசை குழி வடிவில் காணப்படும். இந்த குழிப்பகுதியில் இளநீர் காணப்படும். இதுவே தேங்காய்ப்பால் என்றழைக்கப்படுகிறது. விதை உறை மிக மெல்லியதாகும். அதனுள் காணப்படும் வெள்ளை நிறப்பகுதி கொப்பரைத் தேங்காய் ஆகும். இந்த கொப்பரையும் இளநீரும் சேர்ந்து கரு சூழ்தசை (அ) முளை சூழ்தசை என்றழைக்கப்படுகிறது.
  • ஆரம்ப காலத்தில் இளநீர் இனிப்பாகவும் கொப்பரை மிக மெல்லியதாகவும் காணப்படும். இது வழுக்கை என்றழைக்கப்படுகிறது. நாளடைவில் அது முதிர்ந்து சதைப்பற்று கூடி அதிக எண்ணெய் அளவு கொண்ட தடிமனான கரு சூழ்தசை (அ) முழுசூழ் தசையாக மாறுகிறது.
  • இந்த கரு சூழ்தசை (அ) கருப்பில் சுக்ரோஸ், பிரக்டோஸ், கேலக்டோஸ், குளுக்கோஸ் மற்றம் ராபினோஸ் ஆகியவை உள்ளன.
  • 9-10 மாதங்களான முதிர்ந்த தேங்காயில் ஈரப்பதத்தின் அளவு குறைந்து எண்ணெய்யின் அளவு அதிகரிக்கிறது.
  • இந்த திரவநிலையில் உள்ள கரு சூழ்தசையில் சைட்டோகைனின் எனப்படும் ஹர்மோன் அதிக அளவு காணப்படும். இது திசு வளர்ப்பில் ஒரு சிறிய செல்லில் இருந்து ஒரு முழுத் தாவரத்தை உருவாக்க, வளர் ஊக்கியாக பயன்படுகிறது. இந்த செல்லில் இருந்தே முளைக்கரு உருவாகும்.
fruit
முதிராத தேங்காய்
young coconut
இளம் தேங்காய்
tender coconut
இளநீர் 
mature coconut
முதிந்த தேங்காய்கள்
raw
தேங்காய்

 

 


தென்னையில் பசுந்தாள் உரம் இடுதல்

Last Update : December 2014