தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: தென்னை

வறட்சி மேலாண்மை மற்றும் மண் நீர்வள பாதுகாப்பு

அ.தென்னை மட்டைகள் ஓலைகள் தென்னை நார்க்கழிவு கொண்டு மூடாக்கு போடுதல்

குறிப்பாக கோடைக்காலங்களில் 1.8 மீட்டர் ஆரம் கொண்ட வட்டப்பாத்திகளில் குவிவட்டப்பகுதி மேல் நோக்கியவாறு 100 தென்னை மட்டைகளை அல்லது 15 காய்ந்த தென்னை ஓலைகளை அல்லது 10 செ.மீ உயரத்திற்கு தென்னை நார்க்கழிவு பரப்பி மண் நீர் வளத்தைப் பாதுகாக்கலாம்.

ஆ. தேங்காய் மட்டைகள் அல்லது தென்னை நார்க்கழிவு புதைத்தல்

தேங்காய் மட்டைகளை குழிந்த பகுதி மேல் நோக்கிய வண்ணம் வட்டப்பாத்தகளிலோ அல்லது இரு தென்னை வரிசைகளுக்கு இடைவெளிகளிலோ புதைத்து வறட்சிகளைத் தாங்க ஏற்பாடு செய்யலாம். 100 தேங்காய் மட்டைகள் நார்ப்பகுதி மேல் நோக்கி இருக்குமாறு அல்லது 25 கிலோ தென்னை நார்க்கழிவை 1.5 மீட்டர் ஆரம் தூரத்தில் 30 செ.மீ அகலமும். 60 செ.மீ ஆழமும்  கொண்ட குழகளில் இடவேண்டும். இந்த மட்டைகளை தென்னை மரத்திலிருந்து 3 மீட்டர் தள்ளி நீண்ட குழிகளில் 150 செ.மீ (5 அடி) அகலத்தில் இந்த மட்டைகளை போட்டு மூடி வைக்கலாம். இதன் மூலம் பருவ மழைக்காலத்தில் கிடைக்கும் நீரை சேமிக்கமுடியும்.


Update : December 2014