தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: தென்னை

அறுவடை

  • 12 மாதங்களான நன்கு முற்றிய தேங்காயனது 30 முதல் 45 நாட்களுக்கு ஒருமுறை விதைக்காகவும் கொப்பரைத் தேங்காய்க்காகவும் அறுவடை செய்யப்படுகிறது.
  • வீட்டு உபயோகத்திற்கு தேவையான தேங்காய்களை செங்குத்தாக வைக்க வேண்டும்.  இளநீருக்கு 7-8 மாதத்தில் அறுவடை செய்யலாம்.  தேங்காயானது மரம் ஏறியோ (அ) மரம் ஏறும் கருவி மூலமோ பறிக்கப்படுகிறது
  • 11 மாதங்களான தேங்காயிலிருந்து கிடைக்கும் நாரானது தரம் வாய்ந்ததாகும்.  இதுவே தென்னை நார் எடுப்பதற்கு மிகவும் ஏற்றதாகும்.
  • உயரமான மரங்களில் இருந்து விதைக்காக தேர்ந்தெடுக்கப்படும் கொப்பரை தேங்காய்கள் 2-3 மாதங்கள் விதைப்பதற்கு முன் குவித்து வைக்கப்படுகிறது.  குட்டையான அல்லது வீரிய ஒட்டு இரகங்களிலிருந்து எடுக்கப்படும் விதைத் தேங்காய்கள் அறுவடை செய்ததிலிருந்து 10-15 நாட்கள் குவித்து வைக்கப்படுகிறது.
  • ஒவ்வொரு மாதமும் பாளையிடும் தென்னையில் சராசரியாக 8 அறுவடை செய்யப்படும்.

 


தேங்காய் அறுவடை சாதனங்கள் – பாரம்பரிய முறைகள்

தென்னை அறுவடை

அறுவடை செய்த தேங்காய்களை சேகரித்தல்

மரம் ஏறும் கருவி

மரம் ஏறும் கருவி மூலம் அறுவடை

 


தேங்காய் உமி நீக்கி
 

Update : December 2014