தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: தென்னை

ஊடுபயிர் சாகுபடி

தென்னந்தோப்பில் சாகுபடி செய்ய ஊடு பயிரைத் தேர்வு செய்யும் போது அந்தப்புகுதி தட்பவெப்பநிலை, மண் மற்றும் அந்த விளைப்பொருளுக்கு ஏற்ற சந்தை ஆகியவற்றை கருத்தில் கொள்ளவேண்டும். மேலும் தென்னை மரங்களின் இலைகளின் சுற்றளவு, இடைவெளி மற்றும் வயதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

அ. ஏழு ஆண்டுகளுக்கு குறைந்த வயதுடை மரங்கள்

அந்தந்த பருவநிலை, மரத்தின் பரப்பளவு  மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ப ஐந்தாண்டுகள் வரை. ஒரு பருவப் பயிர்களான நிலக்கடலை, எள், சூரியகாந்தி, மரவள்ளி, மஞ்சள் மற்றும் வாழை ஆகியவற்றை பயிர் செய்யலாம். கரும்பு மற்றும் நெல் போன்ற பயிர்கள் சாகுபடி செய்வதைத் தவிர்க்கவேண்டும்.

ஆ. 7-20 ஆண்டுகள் வயதுள்ள தோப்புகள்

இந்தக் காலக்கட்டத்தில் பசுந்தாள் உரம் மற்றும் தீவனப்பயிர்களை (நேப்பியர் மற்றும் கினியா புல்) பயிர் செய்யலாம்.

இ. 20 ஆண்டுகளுக்கு மேலான வயதுடைய மரங்கள் உள்ள தோப்புகளில்

கீழ்க்காணும் பயிர்களை சாகுபடி செய்யலாம். (ஊடுபயிர் செய்ய தோப்புக்குள் வரும் சூரிய ஒளி 50 சதவிகிதத்திற்கு மேல் இருக்கவேண்டும்)

  1. ஒரு பருவப்பயிர் : நிலக்கடலை, வெண்டை, மஞ்சள், மரவள்ளி, சர்க்கரைவள்ளி கிழங்கு, சிறு கிழங்கு, சேனைக் கிழங்கு, இஞ்சி மற்றும் அன்னாசி ஆகியவற்றை சாகுபடி செய்யலாம்.
  2. இருபருவப் பயிர் : வாழையில் பூவன் மற்றும் மொந்தன் இரகங்கள் ஏற்றவைகளாகும்.
  3. பல ஆண்டு பயிர்கள் : கோகோ, மிளகு (பன்னியூர் 1, பன்னியூர் 2, பன்னியூர் 5 அல்லது கரிமுண்டா), ஜாதிக்காய் மற்றும் வனிலா.

இதில் கோகோ, ஜாதிக்காய் மற்றும் வனிலா ஆகியவை பொள்ளாச்சி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு ஏற்றவை. வனிலா பயிரிட, நோய் தாக்குதல் இல்லாத நடவு தண்டைப் பயன்படுத்தவேண்டும். மேலும் நட்டபின் நோய் தாக்குதல் பாதுகாக்கவேண்டும்.

பல பயிர் அமைப்பு

  1. தென்னை + வாழை + சிறுகிழங்கு + வெண்டை ஆகியவை கிழக்குப் பகுதிகளுக்கு ஏற்றவை.
  2. தென்னையுடன் வாழை, மிளகு, கோகோ, ஜாதிக்காய் மற்றும் வனிலா ஆகியவற்றை மேற்குப் பகுதிகளில் பயிரிடலாம்.

மேலே கூறிய பயிரமைப்புளில் ஒவ்வொரு பயிருக்கும் சிபாரிசு உரம் மற்றும் நிர்பாபசனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்.


வாழை ஊடுபயிர்

மஞ்சள் ஊடுபயிர்

பாக்கு ஊடுபயிர்

வெங்காயம் மற்றும் மஞ்சள் ஊடுபயிர்

மக்காச்சோள ஊடுபயிர்

சோள ஊடுபயிர்
   
  மரவள்ளி ஊடுபயிர்  

Update : December 2014