தோட்டக்கலை :: மலைத்தோட்டப் பயிர்கள் :: தென்னை

நடவு இடைவெளி

25 அடிக்கு 25 அடி (7.5 x 7.5 மீட்டர்) என்ற கணக்கில் நடவு செய்யலாம். இதனால் ஒரு எக்டர் நிலப்பரப்பில் தென்னங்கன்றுகள் நடலாம். ஓரக்கால்களில் நடவு செய்ய 20 அடி இடைவெளி போதுமானதாகும்.

நடவு முறை

3 அடி நீள, அகல, ஆழ குழிகள் தோண்ட வேண்டும். அந்தக் குழியை 2 அடி உயரத்திற்கு (60 செ.மீ) மக்கிய தொழு உரம் செம்மண் மற்றும்  மணல் ஆகியவ்றறை சமமாகக் கலந்து நிரப்பவேண்டும். வெளித்தோன்றும் வேர்கள் அனைத்தும் நீக்கப்பட்ட தென்னங்கன்றுகளை குழயின் நடுவே மண் கலவையை எடுத்துவிட்டு நடவு செய்யவேண்டும். நாற்றையும் அதனுடன் கூடிய தேங்காயையும் மண் அமைன்பு செய்து சுற்றிலும் அழுத்திவிடவேண்டும். நட்ட கன்றுகளுக்கு பின்னிய தென்னை ஓலை அல்லது பணை ஓலை கொண்டு நிழல் அமைத்துத் தரவேண்டும். தென்னங்கன்றுகளைச் சுற்றி சேரும் மண்ணை அடிக்கடி அப்புறப்படுத்த வேண்டும். வருடா வருடம் வட்டப்பாத்தியை அகலப்படுத்தவேண்டும்.


நடவுக்கு தயாரான நாற்று


நடப்பட்ட நாற்று

நடவுக்கு குழி உருவாக்குதல்
     


நடப்பட்ட நாற்றிக்கு நிழலூட்டுதல்


சந்து நிரப்புதல்

Last Updated : April 2015