தோட்டக்கலை :: காய்கறிப் பயிர்கள் :: பெல்லாரி வெங்காயம்

இரகங்கள் : பெல்லாரி சிகப்பு,  பூசா சிவப்பு, என்பி 53, அர்கா நிகேதன், அர்கா கல்யாண், அர்கா பிரகதி, அக்ரி பவுண்ஃட் வெளிர் சிகப்பு, அக்ரி பவுண்ஃப் அடர் மற்றும் அர்கா பிந்து.

அக்ரி பவுண்ஃட் வெளிர் சிகப்பு
அக்ரி பவுண்ஃப் அடர்

மண் மற்றும் தட்பவெப்பநிலை: மணல் கலந்து அல்லது வண்டல் மண் கலந்து இருமண் பாட்டு நிலத்தில் நன்கு வளரும். அதிக வெப்பம் மற்றும் அதிக குளிர் இல்லாத மிதமான தட்பவெப்பநிலை மிகவும் ஏற்றது. மண்ணின் கார அமிலத்தன்மை 5.8-6.5 இருத்தல்வேண்டும்.

பருவம் : மே - ஜூன்

விதையும் விதைப்பும்

விதை அளவு : எக்டருக்கு 10 கிலோ விதைகள், விதைகளை விதைப்பதற்கு முன்பு 1 கிலோ விதைக்கு 100 கிராம் அசோஸ்பைரில்லாம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்து, நிழலில் 30 நிமிடம் உலரவைத்து பின்பு விதைக்கவேண்டும்.

நாற்றாங்கால் தயாரித்தல் : ஒரு எக்டர் நடவு செய்ய சுமார் 5 செண்ட் நாற்றாங்கால் தேவை. நிலத்தை நன்கு கொத்தி, 1 சதுர மீட்டருக்கு 1 கிலோ  என்ற அளவில் விஏஎம் என்ற நன்மை செய்யும் பூசணக் கலவையை இடவேண்டும். நாற்றாங்காலுக்கு செண்டிற்கு ஒரு கிலோ என்ற அளவில் டிஏபி இட்டால் நல்ல வாளிப்பான நாற்றுக்கள் கிடைக்கும். நாற்றாய்காலில் விதைகளை அடர்த்தியாக விதைக்காமல், பரவலாக விதைகளை விதைக்கவேண்டும். அப்போது தான் நாற்றுக்கள் பொரியாமல், செழுமையாக 40-45 நாட்களிலிலேயே தயாராகிவிடும்.

நிலம் தயாரித்தல்

நிலத்தை ஒன்று அல்லது இரண்டு முறை உழவு செய்யவேண்டும். அதிகமாக உழவு செய்தால் வெங்காயம் மண்ணினுள் இறங்கிவிடும்.

ஒருங்கிணைந்த ஊட்டசத்து மேலாண்மை

கடைசி உழவின்போது எக்டருக்கு 25 டன் மக்கிய தொழுஉரம், 50 கிலோ துத்தநாக சல்பேட் ஆகியவற்றை இட்டுக்கலந்து விடவேண்டும். பின்பு தேவையான அளவில் பாத்திகள் அமைத்திடவேண்டும். நடவு  செய்யும் முன்னர் ஒரு எக்டருக்கு 50 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து 150 கிலோஈ சாம்பல் சத்து, 75 கிலோ கொடுக்கக்கூடிய இராசயன உரங்களை இடவேண்டும்.

மேலுரமிடுதல் : நாற்று நட்ட 30 நாட்கள் கழித்து மேலுரமாக தழைச்சத்து 60 கிலோ கொடுக்கக்கூடிய இராசயன உரங்களை இடவேண்டும்.

பயிர்

 

ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள்(கிலோ)

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிலோ)

 

 

தழை

மணி

சாம்பல்

10:26:26

யூரியா

பொட்டாஷ்

பெல்லாரி வெங்காயம்

நடவு செய்யும் முன்னர்

50

150

75

289

46

469

 

நட்ட 30 நாட்கள் கழித்து

60

0

0

0

130

0

உரப்பாசனம்
ஊட்டச்சத்தின் அளவு தழை, மணி மற்றும் சாம்பல் சத்து முறையே எக்டருக்கு 60:60:30 கிகிஆகும். இதில் 75% மணிச்சத்தை (45 கிகி மணிச்சத்து 281 கிகி சூப்பர் பாஸ்பேட்டில் உள்ளது) அடியுரமாக அளிக்க வேண்டும். மீதமுள்ள தழை, மணி மற்றும் சாம்பல் சத்து 60:15:30 கிகி  உரப்பாசனமாக அளிக்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் நீர்ப்பாய்ச்ச வேண்டும். அதனுடன் கரையும் உரப்பாசனம் அளிக்க வேண்டும். அளவைப் பிரித்து பயிரின் ஆயுட்காலம் முழுவதும் 3 நாட்களுக்கு ஒரு முறை உரப்பாசனமாக அளிக்க வேண்டும். அளவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


பருவம்
காலம் (நாட்களில்) உரப்பாசன அளவு மொத்த உரப்பாசனம் (கிகி/எக்டர்)
1 10 19:19:19
யூரியா
15.9
6.00
2 25 12-61-0
13-0-45
யூரியா
7.2
13.6
33.6
3 25 12-61-0
0:0:50
யூரியா
7.2
18.4
37.6
4 15 19:19:19
0:0:50
யூரியா
16.00
18.00
33.00

மொத்தம் தேவைப்படும் அளவு ஒரு எக்டருக்கு 19:19:19 க்கு 32 கிகி, 12:61:0 க்கு 15 கிகி, 13:0:45க்கு 14 கிகி, 0:0:50க்கு 36 கிகி மற்றும் யூரியா 111 கிகி.

நீர் நிர்வாகம்

நட்டவுடன் ஒர தண்ணீரும், பின்னர் மூன்றாம் நாள் உயிர் தண்ணீர் பாய்ச்சவேண்டும். அறுவடை வரை 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது தேவைப்படும் போது நீர் பாய்ச்சவேண்டும்.

களைக் கட்டுப்பாடு மற்றம் பின்செய்நேர்த்தி

பின்செய்நேர்த்தி : தேவைப்படும் போது களை எடுக்கவேண்டும்.

ஒருங்கிணைந்து பயிர் பாதுகாப்பு

இலைப்பேன், வெங்காய ஈ, வெட்டுப்புழு போன்றவை வெங்காயத்தை தாக்கி சேதப்படுத்துவதில் முக்கியமானதாகும். கட்டுப்பாடு முறைகளை சின்ன வெங்காயம் சாகுபடி குறிப்பில் காணவும்.

அறுவடை

அறுவடைக்கு ஒரு வாரத்திற்கு முன்பு நீர் பாசனத்தை நிறுத்திவிடவேண்டும். சுமார் 75 சதம் தாள்கள் காய்ந்து படிந்தவுடன் அறுவடை செய்யவேண்டும். வெங்காயம் நன்றாக முதிர்ந்த பின் அறுவடை செய்யவேண்டும். அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன்னர் ள மாலிக்ஹைட்ராக்சைடு என்ற பயிர் ஊக்கியை 2500 பிபிஎம் என்ற விகிதத்தில் கலந்து இலையின் மேல் தெளிக்கவேண்டும். இந்தப்பயிரி ஊக்கி வெங்காயத்தின் நடுக்குருத்துப் பகுதியை  அடைந்து அறுவடையான பின், சேமித்து வைக்கும்போது முளைக்காதவாறு தடுக்கிறது. இந்த முறையில் நேர்த்தி செய்த வெங்காயங்களை அறுவடை செய்த 6-7 மாதங்கள் வரை முளைத்துவிடாதவாறு சேமித்து வைக்கமுடியும். வெங்காயத்தை நன்றாக காய வைத்துப் பிறகு சேமிக்கவேண்டும்.

மகசூல் : எக்டருக்கு 140-150 நாட்களில் 15 முதல் 18 டன்கள்.

Last Update : November 2014