தோட்டக்கலை :: காய்கறிப் பயிர்கள் :: கத்தரி

இரகங்கள் : கோ.1, கோ.2, எம்டியு 1, பிகேஎம் 1, பிஎல்ஆர் 1, கேகேஎம் 1, அண்ணாமலைஈ கோபிஎச் 1 (வீரிய ஒட்டு இரகம்) அர்கா நவனீத், அர்கா கேசவ், அர்கா நிரி, அர்கா சிரீஸ் மற்றும் அர்கா ஆனந்த்.

கோ – 1 (1978):
இது கலப்பிலா சந்ததியிலிருந்து தேர்வு செய்யப்பட்டது. பழமானது, நீளமாக, இளம் பச்சை நிறத்தில் காணப்படும். பழங்களானது மிருதுவான விதை கொண்டதாக இருக்கும். மகசூல் 20-25 டன்/எக்டர். பயிரின் வயது 140-145 நாட்கள்.

 

கோ – 2 (1988):
வரிக்கத்தரி எனும் கலப்பின சந்ததியிலிருந்து தேர்வு செய்யப்பட்டது. பழங்களானது சிறிதளவு நீள் தன்மை கொண்டதாகவும், அடர் நீலக்கோடுகள் பழத்தின் மேற்பரப்பில் முட்கள் இல்லாமல் காணப்படும். பழங்களானது அறுவடை மகசூல் 35 டன்/எக்டர். பயிரின் கால அளவு 150 நாட்கள்.

எம்.டி.யூ 1 (1979):
இது கல்லம்பட்டி நாட்டு இரகத்தின் கலப்பிலா சந்ததியிலிருந்து தெரிவு செய்யப்பட்டது. பழங்களானது வட்டமாக, பெரிய அளவில் சுமார் 200-250கி எடை கொண்டது. வெளிர் நீல நிறத்துடன் குறைவான விதை அளவு கொண்டது. மகசூல் 30 டன்/ எக்டர். கால அளவு 140 நாட்கள். மதுரை மற்றும் திருச்சி மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது.

 

பி.கே.எம் 1 (1984):
இது புழுதிக்கத்தரி நாட்டு இரகத்தின் தூண்டப்பட்ட சடுதி மாற்ற இரகமாகும். சிறிய பழங்கள் பச்சை கோடுகளுடன் காணப்படும். மகசூல் 3.5 டன்/ எக்டர். பயிரின் கால அளவு 150-155 நாட்கள். மானாவாரி சாகுபடிக்கு ஏற்றது.

 

         

 

பி.எல்.ஆர் 1 (1990):
            நாக்பூர் வகையிலிருந்து மறுதேர்வு செய்யப்பட்டது. பழங்கள் சிறியவை, மிதமான அளவு, ஊதா நிறம், முட்டை வடிவம், பளபளக்கும் தோற்றத்தில் காணப்படும். மகசூல் 25 டன்/ எக்டர். பயிரின் கால அளவு 135-140 நாட்கள்.

 

 

கே.கே.எம் 1 (1995):
இது குளத்தூர் நாட்டு இரகத்தின் சந்ததியாகும். பழங்கள் கொத்தாக 2-4 எண்ணிக்கையில், முட்டை வடிவத்தில் வெள்ளை நிறமாக இருக்கும். மகசூல் 37 டன்/ எக்டர். பயிரின் கால அளவு 130-135 நாட்கள்.


பி.பி.ஐ 1 (பி):
கருங்கல் நாட்டு இரகத்தின் ஒற்றை சந்ததியிலிருந்து தெரிவு செய்யப்பட்டது. பழமானது நீளமாக இளம்பச்சை நிறத்தில், குறைவான விதை மற்றும் கசப்புத் தன்மை கொண்டது. மகசூல் 50 டன்/ எக்டர். பயரின் கால அளவு 185 நாட்கள்.

 

பி.எல்.ஆர் (பி.ஆர்) 2:
இது செவந்தம்பட்டி நாட்டு இரகத்தின் ஒற்றை சந்ததி தேர்வு. பழமானது முட்டை வடிவில், ஊதா நிறத்துடன் பளபளப்புடன் இருக்கும். சராசரி மகசூல் 30 டன்/ எக்டர்.

த.வே.ப.க கத்தரி வி.ஆர்.எம் 1:
எலவம்பாடி கிராமம், வேலூரிலிருந்து தெரிவு செய்யப்பட்ட சந்ததி கலப்பில்லா இரகம். பழம் முட்டை வடிவத்தில் பளபளப்பான ஊதாநிறம், நுனியில் பச்சை நிற சாயம் போன்று காணப்படும். இலைப்புள்ளி நோய், வாடல் நோய் மற்றும் வண்டிற்கு எதிர்ப்பு சக்தி கொண்டது. கொத்தாக காய்க்கக்கூடியது. மகசூல் 40-45 டன்/ எக்டர். கால அளவு 140-145 நாட்கள்.

 

கோ.பி.எச் – 1 (2001):
EP 45 x  கோ 2 ன் வீரிய இனக்கலப்பு. பழமானது அடர் ஊதா நிறம், அதிக அஸ்கார்பிக் அமிலம் (16.65 மிகி /100 கி). மகசூல் 56 டன்/ எக்டர். பயிரின் கால அளவு 120-130 நாட்கள்.

 

கோ.பி.எச் 2 (2002):
இது EP 45 x பூசா உத்தம் இவற்றின் வீரிய இனக்கலப்பு ஆகும். இது பழத்துளைப்பானுக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்டது. பழமானது மிதமான அளவு, சிறிது நீண்டதாகவும், பளபளப்பான ஊதா நிறத்திலும் இருக்கும். இதில் 16.5 மிகி அஸ்கார்பிக் அமிலம் உள்ளது. இந்த இரகமானது நீர்பாசன சாகுபடிக்கு ஜீலை, டிசம்பர் மற்றும் ஜனவரி – ஜீன் மாதத்தில் பயிரிட பரிந்துரைக்கப்படுகிறது. அதிக மகசூலானது 50 டன்/ எக்டர் கிடைக்கும். பயிரின் கால அளவு 120-130 நாட்கள்.

மண் : நல்ல வடிகால் வசதியுள்ள, அங்ககப்பொருட்கள் நிரம்பிய மண் வகைகள் உகந்தது.

விதைப்பதற்கும் நடவிற்கும் ஏற்ற பருவம் : டிசம்பர் - ஜனவரி மற்றும் மே – ஜீன்
விதை அளவு : 400 கிராம் ஒரு எக்டருக்கு.
நாற்றாங்கால் அளவு: 100 சதுர மீட்டர் எக்டருக்கு.

விதையும் விதைப்பும்

ஒரு கிலோ விதைகளுக்கு 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி அல்லது கேப்டான் அல்லது திரம் 2 கிராம் கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும்.மேலும் விதைகளை அசோஸ்பைரில்லம் கொண்டும் நேர்த்தி செய்யவேண்டும். 400 கிராம் விதைகளுக்கு 40 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் சிறிது அரிசிக் கஞ்சி சேர்த்து நேர்த்தி செய்யவும்.இவ்வாறு நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை, உயரமான பாத்திகளில் 10 செ.மீ இடைவெளியில் அரை அங்குல ஆழத்திற்கு கோடுகள் போட்டு அதில் விதைகளைப் பரவலாகத் தூவவேண்டும். விதைத்த பின்பு மணல் போட்டு மூடி உடனே நீர் பாய்ச்சவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டசத்து மேலாண்மை

உரமிடுதல் : எக்டருக்கு

 

தொழு உரம் எக்டருக்கு தழை (கிலோ) மணி (கிலோ) சாம்பல் சத்துக்கள் (கிலோ)
அடியுரம் 25 டன்கள் இதனுடன் வேப்பம் பிண்ணாக்கு 200 கிலோ 50 50 30
நடவின் போது 2 கிலோ அசோஸ்பைரில்லம் - - -
மேலுரம் - 50 - -

பயிர்   இடவேண்டிய சத்துக்கள்(கிலோ ஒரு மரத்திற்கு) இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிலோ ஒரு மரத்திற்கு)  
    தழை மணி சாம்பல் 10:26:26 யூரியா
கத்தரி அடியுரம் 50 50 30 193 67
  மேலுரம் 50 0 0 0 109

மேற்படி உரங்களை கத்தரிச் செடியிலிருந்து 10 செ.மீ தள்ளி பட்டையாக மண்ணில் இட்டு கலந்து செடிகளுக்கு மண் அணைத்து விடவேண்டும். செடிகளுக்கு உரமிட்ட பின்பு உடனடியாக நீர் பாய்ச்சவேண்டும்.

உரப்பாசனம்
கலப்பு இரகங்களுக்கு ஊட்டச்சத்தின் அளவு தழை, மணி மற்றும் சாம்பல் சத்து முறையே எக்டருக்கு 200:150:100 கிகிஆகும். இதில் 75% மணிச்சத்தை (112.5 கிகி மணிச்சத்து 703 கிகி சூப்பர் பாஸ்பேட்டில் உள்ளது) அடியுரமாக அளிக்க வேண்டும். மீதமுள்ள தழை, மணி மற்றும் சாம்பல் சத்து 200:37.5:100 கிகி  உரப்பாசனமாக அளிக்க வேண்டும். தினமும் ஒரு மணி நேரம் நீர்ப்பாய்ச்ச வேண்டும். அதனுடன் கரையும் உரப்பாசனம் அளிக்க வேண்டும். அளவைப் பிரித்து பயிரின் ஆயுட்காலம் முழுவதும் 3 நாட்களுக்கு ஒரு முறை உரப்பாசனமாக அளிக்க வேண்டும். அளவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


பருவம்
பயிர் பருவம் ஆயுட் காலம் உர அளவு மொத்த உரம் அளிக்கப்படும் ஊட்டச்சத்து தேவையான %
தழைச் சத்து மணிச் சத்து சாம்பல் சத்து தழைச் சத்து மணிச் சத்து சாம்பல் சத்து
1 நடவு செய்தது முதல் பயிர் வளரும் பருவம் 10 19:19:19
13:0:45
யூரியா
39.47
5.50
25.65
7.50
0.70
11.80
7.50
-
-
7.50
2.50
-
10.00 5.00 10.00
உபரி மொத்தம் 20.00 7.50 10.00      
2 வளர்ச்சி பருவம் 30 12:61:0
13:0:45 யூரியா
24.50
88.89
142.4
2.94
11.56
65.50
15.00
-
-
40.00
-
-
40.00 10.00 40.00
உபரி மொத்தம் 80.00 15.00 40.00      
3 பூ உருவாவதிலிருந்து பறித்தல் வரை 30 19:19:19
13:0:45 யூரியா
39.47
50.00
100.00
7.50
6.50
46.00
7.50
-
-
7.50
22.50
-
30.00 5.00 30.00
உபரி மொத்தம் 60.00 7.50 30.00      
4. அறுவடை 80 12:61:0
13:0:45
யூரியா
12.30
44.40
71.13
1.48
5.84
32.72
7.50
-
-
-
20.00
-
20.00 5.00 20.00
உபரி மொத்தம் 40.00 7.50 20.00      
          200.00 37.50 100.00 100 25 100

மொத்தம் தேவைப்படும் அளவு ஒரு எக்டருக்கு 19:19:19 க்கு 79 கிகி, 12:61:0 க்கு 37 கிகி, 13:0:45க்கு 189 கிகி மற்றும் யூரியா 340 கிகி.


நீர் நிர்வாகம்

நடவு செய்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும். அதன் பின்னர் 7 நாட்களுக்கொருமுறை நீர் பாய்ச்சவேண்டும். மழைக்காலங்களில் வயலில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி

களை நிர்வாகம் : கத்தரி நாற்றுக்களை நடுவதற்கு முன் களைக்கொல்லி இடுதல் அவசியம். களைகள் முளைக்கும் முன் அவற்றைக் கட்டப்படுத்த புளுகுளோரலின் என்னும் களைக் கொல்லியினை 1 லிட்டர் என்ற அளவில் 500 லிட்டர் நீரில் நன்கு கலந்து ஒரே சீராகத் தெளிக்கவேண்டும். இவ்வாறு களைக்கொல்லி தெளித்தவுடன் நீர் பாய்ச்சி நாற்றுக்களை நடவேண்டும். பின்பு மேலுரமிடுவதற்கு முன்பு கொத்துக்களை எடுத்துக் களைகளை நீக்கவேண்டும்.

வளர்ச்சி ஊக்கிகள் : கத்தரியில் ட்ரைக்கோடானால் 2 பிபிஎம் மற்றும் சோடியம் போரேட் அல்லது போராக்ஸ் 35 மில்லி கிராம் இவற்றை ஒருலிட்டர் நீருடன் கலந்து நாற்று நட்ட 15 நாட்கள் கழித்து ஒரு முறையும், பிறகு பூக்கள் தோன்றும் பருவத்திலும் தெளிப்பதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

தண்டு மற்றும் காய்த்துளைப்பான்

நடவு செய்த 15-20 நாட்களில் கத்தரிச்செடிகளின் நுனித் தண்டுகள் இலைகளுடன் காய்ந்து தலை சாய்ந்து தொங்கி காணப்படும். அவைகளைக் கிள்ளி உள்ளே பார்த்தால் வெள்ளை நிறப் புழு காணப்படும். இவ்வகைப் புழுக்கள், காய்கள் பிஞ்சாக இருந்து வளர்ந்து வரும் சமயத்தில் காய்களைக் குடைந்து சாப்பிட்டு சேதப்படுத்தும்.

இதனைக் கட்டுப்படுத்த பாதிக்கப்ட்ட  செடிகளின் நுனித் தண்டினைக் கிள்ளி எறிந்திவிடவேண்டும். பாதிக்கப்பட்ட காய்களைப் பறித்து அழித்துவிடவேண்டும். கார்பரில் 50 சதத் தூளை ஒரு லிட்டருக்கு 2-4 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும். காய்களைத் தாக்கும் பருவத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை எண்டோசல்ஃபான் 2 மில்லியை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும். அல்லது குயினால்பாஸ் 25இசி 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீருடன் 2 மில்லி வேப்பெண்ணெய் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து கலவையுடன் சேர்த்துத் தெளிக்கவேண்டும் அல்லது வேப்பங்கொட்டைச்சாறு 50 மில்லியை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

சாம்பல் மூக்கு வண்டு : இவ்வகைப் பூச்சிகள், இலைகளிலுள்ள சாறினை உறிஞ்சுவதால் இலைகள் சக்தியிழந்து, காய்ந்துவிடும். இதனைக் கட்டுப்படுத்த ஒரு எக்டருக்கு கார்போஃபியூரான் 15 கிலோவை செடி நட்ட 15 நாட்களுக்குப் பின்னர் செடிகளின் வேர்ப்பாகத்தில் இடவேண்டும்.

நூற்புழுக்கள் : நூற்புழுத் தாக்குதலைத் தடுக்க விதைகளை ட்ரைக்கோடெர்மா விரிடி அல்லது ட்ரைகோடெர்மா ஹர்சியானம் ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் பூஞ்சாண விதை நேர்த்தி செய்து விதைக்கவேண்டும். மேலும் ஒரு சதுர மீட்டருக்கு 10 கிராம் கார்போஃபியூரான் இடுதல் வேண்டும்.

சிவப்பு சிலந்திப்பூச்சி : இதனைக் கட்டுப்படுத்த நனையும் கந்தகத் தூளை லிட்டருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும். அல்லது டைக்கோபால் 3 மில்லி மருந்தை 1 லிட்டர் நீருடன் கலந்து தெளிக்கவேண்டும்.
வெள்ளை ஈக்கள் : கோடை காலப்பயிரில் வெள்ளை ஈக்களின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இதனைக் கட்டுப்படுத்த மஞ்சள் நிற ஒட்டும் பசை அட்டைப்பொறி எக்டருக்கு 12 வீதம் வைக்கவேண்டும். வேப்பெண்ணெய் 3 மில்லியுடன் 1 லிட்டர் நீர் கலந்து, அதனுடன் டீப்பால் என்ற ஒட்டும் திவரம் 1 மில்லியுடன் ஒரு லிட்டர் தண்ணீர் கலக்கப்பட்ட கலவையுடன் சேர்த்து தெளிக்கவேண்டும்.

நோய்கள்

இலைப்புள்ளி நோய் : பருவமழைக் காலங்களில் வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் சமயங்களில் இலைப்புள்ளி நோய் அதிகமாகக் காணப்படும். இதனைக் கட்டுப்படுத்த டைத்தேன் எம் 45 பூசண கொல்லியினை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்கவேண்டும்.
வாடல் நோய் : இந்நோய் தாக்கப்பட்ட செடிகள் குட்டையாகவும் இலைகள் சிறுத்தும் காணப்படும். இச்செடிகள் பூக்காமல் மலடாக இருக்கும். இது நச்சுயிரி வகை நோய் ஆகும். இந்நோய் தாக்கப்பட்ட செடிகளை வேருடன் பிடுங்கி எரித்துவிடவேண்டும். நோய் பரப்பும் காரணிகளைக் கட்டுப்படுத்த மீதைல்டெமட்டான் 2 மிலி (அ) டைமெத்தோயோட் 2.5 மிலி தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.

அறுவடை

நடவு  செய்த 55-60 நாட்களில் முதல் அறுவடை ஆரம்பிக்கும், காய்கள்  பிஞ்சாக விதைகள் முற்றுவதற்கு முன்பு அறுவடை செய்யவேண்டும். காய்களை சுமார் 4 முதல் 5 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம். அறுவடை செய்யும் போது காம்பின் நீளம் 4-6 செ.மீ இருக்குமாறு அறவடை செய்யவேண்டும்.

மகசூல் : ஒரு எக்டருக்கு 150-160 நாட்களில் 25 முதல் 30 டன்கள்
(இரகங்கள்). வீரிய ஒட்டு இரகங்களில் 45-50 டன்கள் / எக்டர்.