தோட்டக்கலை :: காய்கறிப் பயிர்கள் :: கேரட்

மலைப்பகுதிகளுக்கு : ஊட்டி, நியு கொர்டா மற்றும் நேன்டிஸ்

சமவெளிப் பகுதிகளுக்கு : இந்தியா கோல்டு, பூசாகேசர் மற்றும் ஹாப்லாங் டான்வர்ஸ்.

மண் மற்றும் தட்பவெப்பநிலை : கேரட் சாகுபடி செய்வதற்கு இரும்பொறை மண் மிகவும் உகந்தது. குளிர் பிரதேசப்பகுதிகள் வெப்பநிலை 15 டிகிரி முதல் 20 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்போது கிழங்குகள் நல்ல ஆரஞ்சு நிறத்துடன் இருக்கும். மண்ணின் கார அமிலத்தன்மை 6.0-7.0 வரை இருத்தல்வேண்டும்.

பருவம் : மலைப்பகுதிகளில் பயிரிட ஊட்டி 1 மிகவும் ஏற்ற இரகம் ஆகும். நீர் வசதி இருந்தால்  ஆண்டு முழுவதும் பயிர்  செய்யலாம். கடல் மட்டத்திலிருந்து 1800 மீட்டர் உயரமுள்ள மலைப்பகுதிகளில் பயிரிடலாம்.
மலைப்பகுதிகளுக்கு ஜீலை – பிப்ரவரி மாதம் பயிரிட ஏற்றது.
சமவெளிகளுக்கு ஆகஸ்ட் மாதம் ஏற்றது.

நிலம் தயாரித்தல்

நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது பண்படுத்தவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

ஒரு எக்டருக்கு அடியுரமாக 30 டன் தொழு உரத்தை மண்ணுடன் கலக்கவேண்டும். பிறகு 90 கிலோ தழைச்சத்து, 90 கிலோ மணிச்சத்து, 90 கிலோ சாம்பல் சத்து இடவேண்டும். இதனுடன் 25 கிலோ சல்பேட்டையும் இடவேண்டும்.

பயிர்

 

இடவேண்டிய சத்துக்கள்(கிலோவில்)

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிலோவில்)

 

 

தழை

மணி

சாம்பல்

10:26:26

யூரியா

கேரட்

அடியுரம்

90

90

90

347

120

விதையும் விதைப்பும்

விதையளவு : எக்டருக்கு 4 கிலோ விதைகள்

விதைத்தல் : மலைப்பகுதியில் தேவையான அளவுக்கு நீள,அகலம் உள்ள மேட்டுப் பாத்திகளில் விதைக்கவேண்டும். சமவெளிப்குதிகளில் பார் பிடித்து செ.மீ 5 இடைவெளிவிட்டு விதைகளை விதைக்கவேண்டும். விதைகளை விதைக்கும் போது ஒரு பங்கு விதைக்கு நான்கு பங்கு மணல் கலந்த விதைக்கவேண்டும். விதைகள் விதைத்து 15 நாட்கள் கழித்து குழிக்கு வளமாக ஒரு செடிவிட்டு மீதியை கலைத்துவிடவேண்டும்.

நீர் நிர்வாகம்

நீர் பாய்ச்சுதல் : 5 நாட்களுக்கு ஒரு முறை நீா பாய்ச்சவேண்டும்.

களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி

களைக்கட்டுப்பாடு : விதைத்தவுடன் எக்டருக்கு புளுக்ஃகுளோரின் 1 லிட்டர் தெளித்து களைகள் முளைக்கும் முன்பே கட்டுப்படுத்தலாம். அல்லது விதைத்த 15 நாட்கள் கழித்து ஒரு கைக்கிளை எடுத்து 30வது நாளில் மண் அணைக்கவேண்டும்.
மேலுரம் இடுதல் : விதைத்து 45 நாட்கள் கழித்து 45 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்களை மேலுரமாக இடவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

பயிர்பாதுகாப்பு : கேரட்டை பூச்சிகள் அதிகம் தாக்குவதில்லை.

இலைப்புள்ளி நோய் : மேன்கோசெப் 2 கிராம் ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளித்து
இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.

ஊட்டி 1 இரகம், சாம்பல் மற்றும் இலைப்புள்ளி நோய்களுக்கு எதிர்ப்பு சக்தி உடையது.

அறுவடை

இரகங்களுக்கு ஏற்றவாறு அறவடைக் காலம் வேறுபடும். செடிகளின் அடிப்பாகத்தில் இலைகள் வாடத் தொடங்கினால் அதுவே கேரட் அறுவடை செய்ய அறிகுறியாகும்.

மகசூல் : எக்டருக்கு 100 முதல் 120 நாட்களில் 25 முதல் 30 டன் கிழங்குகள்.

வேர்ப்புழு : நடவின்போது ஒரு எக்டருக்கு 1 டன் வேப்பம் புண்ணாக்கு இடுவதன் மூலம் வேர்ப்புழுக்களை கட்டுப்படுத்தலாம்.