தோட்டக்கலை :: காய்கறிப் பயிர்கள் :: கருவேப்பிலை

சீன உருளைக்கிழங்கு (கோலியஸ் பர்விப்லோருஸ் L )

தாவரவியல் பெயர்: சொலானோஸ்டீபன் ரோட்டன்டிபோலியஸ்

குடும்பம் :லாபியாடே

இரகங்கள்: கோ 1 மற்றும் ஸ்ரீ தாரா ஆகியவை பிரபலமானவை

மண் மற்றும் தட்பவெப்பநிலை:

சிவப்பு, வண்டல் மண் மற்றும் வடிகட்டிய மண். நிழற்பாங்கான வெதுவெதுப்பான மற்றும் ஈரப்பதமான காலநிலையில் வளர கூடியது. இதன் வளர்ச்சிக்கு நல்ல மழை தேவை மற்றும் வறட்சியை தாங்காது. மழை இல்லாத நிலையில் பாசனம் செய்வது அதன் வளர்ச்சிக்கு உகந்தது .

பருவ காலம் :  மார்ச் -ஏப்ரல் நடவுக்கு சிறந்த பருவ காலம் ஆகும்.

விதை அளவு :500 மீ2 நிலபரப்பிற்கு 750-1200 கிலோ  கிழங்குகள் தேவைப்படும்.
நாற்றங்கால் வளர்ச்சி :

நடவிற்கு சுமார் ஒன்றரை மாதம் முன்பே நாற்றங்கால் தயாரிக்க வேண்டும். 500 மீ2 நிலப்பரப்பில் பயிரிட்டோமானால் அது கொடியாக வளர்வதற்கு 1 ஹெக்டர் நிலம் தேவைப்படும். மாட்டு சாணம் அல்லது மக்கிய உரம் 1 கிக /மீ2 அளிக்க வேண்டும். வரப்பு குறுகிய இடைவெளியில் 45/60 அமைக்க வேண்டும். 15-20கி எடையுள்ள கிழங்குகளை நடவிற்கு பயன்படுத்த வேண்டும். மார்ச் – ஏப்ரல் மாதங்களில் 750-1200 கிகி கிழங்குகளை 500 மீ2 பரப்பளவில் பயிர் செய்ய வேண்டும். கொடியின் வளர்ச்சியை ஊக்குவிக்க மேலுரமாக யூரியாவை 5 கிலோ /500 மீ 2 என்ற அளவில் நடவு செய்த மூன்று வாரங்களுக்கு பின்பு  இட வேண்டும். 15-20 செ.மீ நீளமுள்ள தண்டு துண்டுகளையும் நடவிற்கு பயன்படுத்தலாம். அதிக வளர்ச்சிக்கு ஒற்றை கணுவுடைய துண்டுகளை பயன்படுத்த வேண்டும். இவை ஒரு வாரத்தில் பக்கக் கிளைகள் விட்டு விளை நிலத்தில் நடவு செய்ய தயாராகிவிடும்.

நிலத்தை தயார் செய்தல் மற்றும் நடவு முறை :

நிலத்தினை 4 அல்லது 5 முறைக்கு மேல் மண் நன்றாக பதப்படும் வரை உழுதல் வேண்டும் மற்றும் 60 செ.மீ க்கு வரப்புகள் அமைக்க வேண்டும். 10 செ.மீ நீளமுள்ள துண்டுகளை நாற்றங்காலிருந்து விளை நிலத்தில் ஜூலை முதல் அக்டோபர் மாதங்களில் 30 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.  4-5 செ.மீ ஆழத்தில் நுனி பகுதி வெளியில் தெரியுமாறு நடவு செய்ய வேண்டும். இது விரைவில் கொடி வளர உதவும்.

பாசன முறை :

வார இடைவெளியில் நீர் பாசனம் செய்ய வேண்டும்.

உரங்கள் இடுதல் :

பண்ணை தொழு உரம் 25 டன் /ஹெக்டர் மற்றும் தழை, மணி மற்றும் சாம்பல் சத்து  30:60:150 கிலோ /ஹெக்டர் என்ற அளவில் அடியுரமாக இட வேண்டும். நடவு செய்த 30 நாட்களில் மண் அணைத்து 30 கிலோ நைட்ரஜன் /ஹெக்டர் அதனுடன் 2 கிலோ அசோஸ்பைரில்லம் இட வேண்டும். கொடியினை சுற்றி மண் அரித்திருந்தால் மீண்டும் 30 நாட்களுக்குப் பிறகு மண் அணைத்தல் வேண்டும். இவை கிழங்கு உருவாக உதவும்.
2 அல்லது 3 முறை களைகளை அகற்றுவது அவசியம். 2 மாதங்களுக்கு பின்பு மீண்டும் மண் அணைதல்  வேண்டும் .


பயிர் பாதுகாப்பு :

வேர் முடிச்சு நூற்புழு:

வேர் முடிச்சு நூற்புழு ஒரு தீவிரமான பூச்சி, கோலியஸ் வகையை சேர்ந்தது. பாதிக்கபட்ட தாவரத்தின் வேரானது உப்பிய நிலையிலும், நிகண்டுகலாகவும், குன்றிய வளர்ச்சி மற்றும் பலவீனமானதாகவும் இருக்கும். ஒரு மி.மீ க்கு குறைவான இப்புழுக்கள் தாவர வேர்களில் நுழையும் போது சிறியதாக இருக்கும்.


கட்டுப்படுத்தும் முறை :

நூற்புழுக்கள்:

வேர்ப் புழு தாக்குதல் இல்லாத நாற்றுகளை பயன்படுத்த வேண்டும். நிலத்தை ஆழ உழுவதன் மூலம் நூற்புழுக்களை அழிக்கலாம். மண்ணில் வெப்பமூட்டல் மூலமாகவும் இவற்றை கட்டுப்படுத்தலாம். சர்க்கரை வள்ளி கிழங்கினை மே- ஜூன் மாதங்களில் முந்தைய பயிராகவும், பாதுகாப்பு பயிராகவும் நடுவதன் மூலம் இப்புழுவை கட்டுப்படுத்தலாம்.

இலை மடிப்பு புழுக்கள் மற்றும் துளைப்பானை கட்டுப்படுத்த டைமெத்தோயேட் அல்லது ரோகார் 30 இசி அதாவது 1.7 மி.லி /லிட்டர் என்ற பூச்சிகொல்லி கரைசலில் கொடிகளை 10 நிமிடம் நனைக்க வேண்டும். விளைநிலத்தில் இதன் தாக்குதல் அதிகமாக காணப்பட்டால் மாலத்தியான் (அ) பென்தியான் (அ) பெனிட்ரோதியான் 50 இசி 1 மிலி/லிட்டர் தெளிக்க வேண்டும்.

அறுவடை :

நடவு செய்து 4-5 மாதத்திற்கு பின்பு கொடி காயும் நிலையில் இருப்பது அறுவடைக்கு ஏற்றது . தாவரத்தை வெளியே இழுத்து கிழங்குகளை தோண்டி எடுக்க வேண்டும். கிழங்கினை தனியே எடுத்த பின் மீதமுள்ள பயிர் எச்சங்களை எரித்து விட வேண்டும்.

மகசூல் :

120 நாட்களில் 15-20 டன் /ஹெக்டர் என்ற அளவில் அறுவடை செய்யலாம் .

Last Update : January 2016