தோட்டக்கலை :: காய்கறிப் பயிர்கள் :: கூர்க்கன் கிழங்கு

சிறுகிழங்கு அல்லது கூர்க்கன் கிழங்கு

இரகங்கள் : கோ 1 மற்றும் ‚தாரா

கோ 1

மண் மற்றும் தட்பவெப்பநிலை : நல்ல வடிகால் வசதி உள்ள செம்மண் பூமி ஏற்றது. வெப்பம் மற்றும் மிதவெப்பப் பிரதேசம் சாகுபடிக்கு ஏற்றது. றிழலான இடத்தில் நன்கு வளரும்.

பருவம் : லை - ஆகஸ்ட்

நிலம் தயாரித்தல்

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழது பண்படுத்தவேண்டும். கடைசி உழவின்போது எக்டருக்கு 25 டன் தொழு உரம் இட்டு, மண்ணுடன் கலக்கச் செய்யவேண்டும்.

விதையும் விதைப்பும்

60 செ.மீ இடைவெளியில் நடுவதற்கு வரப்பு கட்டவேண்டும். முளைவிட்ட கிழங்குகளை மார்ச், ஏப்ரல் மாதங்களில் 20-30 செ.மீ இடைவெளிவிட்டு பாத்திகளில் நடவேண்டும். 30-40வது நாளில் கொடிகளைக் கிள்ளி எடுக்கவேண்டும். நாற்றாங்காலில் நிழல் தரம் வாழை போன்ற மரங்களை நடுவதுடன் இளஞ்செடியின் அடிப்பாகத்தில் காய்ந்த இலைகளைப் போடவேண்டும். செடிகள் முளைக்கும் வரை நீர் பாய்ச்சுதல் வேண்டும். ஆனால் நீர் தேங்கக்கூடாது. நடுவதற்கு இளந்தண்டுகள் ஒரு மாதத்தில் கிடைக்கும். இந்தத் தண்டுகளை 10 செ.மீ நீளத்தில் இரண்டு அல்லது மூன்று கணுக்கள் இருக்கும்படி எடுத்து நடவேண்டும்.

நீர் நிர்வாகம்

நட்ட மூன்றாம் நாள் உயிர்தண்ணீர் விடவேண்டுமட். பின்பு வாரம் ஒரு முறை நீர் பாய்ச்சவேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
நட்ட இரண்டு மாதங்கள் கழித்து எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து, 60 கிலோ மணிச்சத்து, 150 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய இராசயன உரங்களை இடவேண்டும்.

பயிர்

 

ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள்(கிலோ)

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிலோ)

 

 

தழை

மணி

சாம்பல்

10:26:26

யூரியா

பொட்டாஷ்

சிறுகிழங்கு அல்லது கூர்க்கன் கிழங்கு

நட்ட இரண்டு மாதங்கள் கழித்து

30

60

150

231

15

150

களைக் கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி
நட்ட பின்பு 2 அல்லது 2 முறைகளை எடுக்கவேண்டும். நட்ட 2 மாதங்கள் கழித்து மண் அணைக்கவேண்டும். மண் அணைக்கும் போது 2 கிலோ அசோஸ்பைரில்லம் இடவேண்டும்.

அறுவடை
இலைகள் மஞ்சலாகி உதிரும் போது, கிழங்குகளை செய்யவேண்டும்.
மகசூல் : எக்டருக்கு 120 நாட்களில் 15 முதல் 20 டன் கிழங்குகள்

 

Updated on : Jan 2016