தோட்டக்கலை :: பழப்பயிர்கள் :: வாழை
வாழை வாழை இரகங்கள்

இரகங்கள்:

வாழைப்பழத்திற்கு: ரோபஸ்டா, குள்ள வாழை, கோ.1 மட்டி மற்றும் சன்ன செங்கதலி. காவன்டிஷ் இரகங்கள் ஏற்றுமதிக்கு உகந்ததாகும்.

வாழைக்காயாக உபயோகப்படுத்துவதற்கு:
மொந்தன், நேந்திரன், வயல் வாழை மற்றும் சாம்பல் நிற மொந்தன்.

மலைப்பகுதிக்கு ஏற்ற இரகங்கள்:
விருப்பாட்சி, சிறுமலை, செவ்வாழை, மனோரஞ்சிதம், நமரை மற்றும் லாடன்.

மண்ணும் தட்பவெப்பநிலையும்: நல்ல வடிகால் வசதியுள்ள இரும்பொறை மண் உகந்தது. காரமண் மற்றும் உப்ப மண் உகந்ததல்ல.

கற்பூரவள்ளி ரஸ்தாளி
More Varieties...
செவ்வாழை க்ராண்ட் நயன்

நடவு செய்யும் பருவம்
நன்செய் நிலங்களுக்கு தோட்டக்கலை நிலங்களுக்கு மலைவாழை படுகை மற்றும் நீர்ப்பாசன வசதியுள்ள இடங்களுக்கு

பிப்ரவரி - ஏப்ரல் : பூவன்,  ரஸ்தாளி, மொந்தன் மற்றும் கற்பூரவள்ளி,

ஏப்ரல் - மே: நேந்திரன் மற்றும் ரோபஸ்டா.

 

ஜனவரி - பிப்ரவரி  மற்றும்

நவம்பர் – டிசம்பர்

ஏப்ரல் - மே (கீழ்ப்பழனி மலைப்பகுதி)

ஜீன் – ஜீலை (சிறுமலை)

ஜனவரி - பிப்ரவரி மற்றும்  ஆகஸ்ட் - செப்டம்பர்  மாதங்கள் உகந்தது.

கன்றுகள் தேர்வும் நேர்த்தியும் சீரான வளர்ச்சிக்கும், நல்ல மகசூல் பெறவும் தரமான கன்றுகளைத் தேர்வு செய்து நடுதல் வேண்டும். தாய் மரத்திற்கு அருகாமையில், கிழங்கிலிருந்து வளரும், 2 முதல் 3 அடி  வரை உயரம் உள்ள சுமார் 3 மாத வயதான ஈட்டிக் கன்றுகளே சிறந்தவை. கன்றின் எடை 1.5 முதல் 2.0 எடையுள்ளதாகவும், பூச்சி மற்றும்  நோய் தாக்காத  கிழங்குகளாகவும் இருக்கவேண்டும். கிழங்கின் அடிப்பகுதியுள்ள வேர்களை நீக்கிடவேண்டும். கிழங்கின் மேல் பகுதியுள்ள தண்டுப்பகுதி 20 செ.மீ இருக்குமாறு தேர்ந்துதெடுக்கவும். வாடல் நோயைத் தவிர்க்க கிழங்குகளை 5 நிமிடம் 0.1 சதம்  எமிசான் கரைசலில் ( 1 கிராமினை 1 லிட்டர் தண்ணீரில் கரைக்கவேண்டும்) நனைத்து நடவு  செய்யவேண்டும். வாடல் நோய் எதிர்ப்புத்திறன் இல்லாத இரகங்களாகிய ரஸ்தாளி, மொந்தன், நெய் வண்ணன் மற்றும் விருப்பாட்சி போன்ற இரகங்களுக்கு இவ்வாறு செய்யவேண்டும்.
நூற்புழு தாக்குதலைத் தவிர்க்க, தோல் சீவிய கன்றுகளை சேற்றுக் குழம்பில் நனைத்து அதன் மீது கார்போ புயூரான் குருணை மருந்தை ஒரு கிழங்கிற்கு 40 கிராம் என்ற அளவில் தூவி நடவேண்டும். அல்லது 0.75 சதம் மோனோகுரோட்டோபாஸ் கரைசலில் கிழங்குகளை தோய்த்து நிழலில் சுமார் 24 மணி நேரம் உலர்த்தி நடவேண்டும்.

5-6 இலைகள் உள்ள திசு வளர்ப்பு கன்றுகளை நடவு செய்யலாம். நடவின் பொது ஒரு கன்றுக்கு 25 கிராம் சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸ் இடவேண்டும்.

மேலும் சணப்பை போன்ற பசுந்தாள் உரங்களை 45 நாள் வளர்த்து  உழுதல் வேண்டும். இதன் மூலம் நூற்புழு எண்ணிக்கையினை குறைக்கலாம்.

நிலம்  தயாரித்தல் :

நன்செய் நிலங்களுக்கு: லேசாக மண்ணைப் பறித்து அதன்மேல் நேர்த்தி செய்த கன்றுகளை நட்டுப்பின் மண் அணைக்கவேண்டும்.

தோட்டக்கால் நிலங்களுக்கு: 2 முதல்  4 தடவை நன்கு உழவேண்டும்.
படுகை நிலங்களுக்கு: மண்வெட்டியால் ஒரு டஅடி ஆழமாகத் கொத்திடவேண்டும்.

மலைப்பகுதிகளுக்கு:வனப்பகுதியை சரி  செய்து சம உயர வரப்பு அமைக்கவேண்டும்.

குழியெடுத்தல்

தோட்டக்கால்,  படுகை மற்றும் மலை வாழைகளுக்கு 45 கன சென்டிமீட்டர் அளவுள்ள குழிகளை எடுத்து ஒவ்வொரு குழிகளிலும் 10 கிராம் தொழு உரம், 250 வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை இட்டு மேல் மண்ணோடு நன்கு கலக்கி, குழியின் நடுவில் நேர்த்தி செய்யப்பட்ட கன்றுகளை வைத்து மண்ணால் மூடி சுற்றிலும் நன்கு மிதித்துவிடவேண்டும்.

விதையும் விதைப்பும்

இடைவெளி

நிலம்

இரகங்கள் இடைவெளி பயிர் எண்ணிக்கை எக்டர்
தோட்டக்கால் நிலம் ரோபாஸ்டா, நேந்திரன், 1.8 x 1.8 மீ 3086
குள்ளவாழை 1.5 x 1.5 மீ 4444
நஞ்சை நிலம் பூவன், மொந்தன்,ரஸ்தாளி, நெய்வண்ணன், நெய்பூவன் 2.1 x 2.1 மீ 2267
மலைப்பகுதி விருப்பாட்சி, சிறுமலை, நமரை மற்றும் லாடன் 3.6 x 3.6 மீ 750 (கலப்பு பயிர் – காப்பியுடன்)


Normal planting
(2.0 x 2.0 m)

3 suckers/pit
(3.6 x 3.6 m)

4 suckers/pit
(1.8 x 3.6 m)

நீர் நிர்வாகம்

நடவு செய்த உடனே நீர்ப்பாய்ச்சவேண்டும். அதற்குப்பிறகு 4 நாட்கள் கழித்து உயிர்த் தண்ணீர், வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து தோட்டக்கால் நிலத்திற்கு மற்றும் 10-15 நாட்களுக்கு ஒரு முறை நஞ்சை பகுதிகளுக்கும் நீர்ப்பாய்ச்சவேண்டும். உரமிட்ட பிறகு அதிக அளவு நீர்ப்பாய்ச்சவேண்டும்.


ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை: மேலே


பயிர்
  இடவேண்டிய சத்துக்கள்(கிராம் / ஒரு வருடத்திற்கு ) இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26, யூரியா இடவேண்டிய அளவு (கிராம் / ஒரு வருடத்திற்கு )
    தழை மணி சாம்பல் 10:26:26 யூரியா பொட்டாஷ்
வாழை தோட்டக்கால்            
  நேந்திரன் தவிர மற்ற இரகங்கள் 110 35 330 135 209 493
  நேந்திரன் 150 90 300 347 251 351
  நஞ்சைப் பகுதிகளுக்கு 210 35 450 135 426 694
  நேந்திரன் 210 50 390 193 414 568
  ரஸ்தாளி, பூவன், ரோபஸ்டா 160 50 390 193 414 568
        

மலை வாழை

அரை வட்ட வடிவ பாத்தியை மரத்திற்குக் கீழே அதாவது மரத்தைச் சுற்றி அமைக்கவும். அதில் 315 கிராம் (40:30:40) தழை, மணி, சாம்பல் சத்தைக் கலந்து இடவும். பின் 130 கிராம் மியூரோட் சாம்பல் சத்தை அக்டோபர் மாதத்தில் மற்றும் ஜனவரி, ஏப்ரல் மாதத்திலும் இடவும் அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போ பாக்டீரியா  உயிர் உரத்ததை 20 கி / மரம் என்ற அளவிற்கு 2-வது மற்றும் 4வது மாதத்தில் எல்லா இரகத்திற்கும் இடவும்.

தழைச்சத்து கலந்த வேம்பு

இதை 3, 5வது மற்றும் 5வது மாதத்திற்கு என மூன்று முறை பிரித்து அளிக்கவும்.
நடவு செய்த 4வது மாதம் முதல் சொட்டு நீர் பாசனம் வழியாக நாள் ஒன்றுக்கு ஒரு மரத்திற்கு 15 லிட்டர் தண்ணீர் கொடுக்கவேண்டும். மேலும் 5வது மாதம் முதல் தார் வெளிவரும் தருணம் வரை 20 லிட்டர்  தண்ணீரும், அதன் பின்னர் அறுவடை வரை 25 லிட்டர் தண்ணீர் கொடுக்கவேண்டும்.

நடவின் போதும் மற்றும் நடவு செய்த 5-வது மாதங்களில் 20 கிராம் அசோஸ்பைரில்லம்  மற்றும் பாஸ்போபேக்டீரிய வேண்டும். இதனை வேதியியல் உரங்கள் இடுவதற்கு முன்பாக இடவேண்டும்.

திசு வளர்ப்பு வாழைக்கு 50 சதவிகித் உரம் கூடுதலாக நடவு செய்த 2,4,6 மற்றும் 8-வது மாதங்களில் இடவேண்டும்.

நன்செய் வாழை: இரு வரிசைகளுக்கிடையே குழிகள் வெட்டவேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் குழிகளை ஆழப்படுத்தி, பாத்தியின் மேலே  மண்ணைப் பரப்பவேண்டும். இருமாதங்களுக்கு ஒரு முறை குழி தோண்டவும். மாதம் ஒரு முறை அதிகமாக வந்த பக்கக் கன்றுகளை நீக்கவும். பூ முழுவதுமாக  விரிந்து ஒரு வாரம் கழித்து ஆண் பூக்களை நீக்கவேண்டும். கன்றுகளுக்கு பூ பூப்பதற்கு முன்பாகவோ, பூக்கும் சமயத்திலோ முட்டுக் கொடுக்கவேண்டும். மறுதாம்புப் பயிரில் (பூவன், மொந்தன், ரஸ்தாளி) இரண்டாம் பூ பூக்க, முதல் பயிரின் அறுவடைக்குப் பின்பே அனுமதிக்கவேண்டும்.

தோட்டக்கால் வாழை:

இரண்டு மாதத்திற்கு ஒரு முறை மண் வெட்டி, கொத்து கொண்டு மண் அணைக்கவேண்டும். மாதம் ஒரு முறை பக்கக் கன்றுகளை அகற்றவேண்டும். காய்ந்த மற்றும் நோய் தாக்கப்பட்ட இலைகளைச் சேகரித்து எரித்துவிடவேண்டும். இவ்வாறு செய்தால் இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்தலாம். கடைசி சீப்பு வெளிவந்த ஒரு வாரத்தில் ஆண் பூவை விடாமல் இருக்க முட்டுக் கொடுக்கவேண்டும். குறைக்காம்பு அழுகல்  நோயைத் தடுக்க கண்ணாடி இலைக்கொண்டு குலைக்க காம்பை மூடி விடவேண்டும். வெய்யிலினால் காய்கள் சேதம் அடைவதைத் தடுக்க, குலைகளை வாழை இலைகளைக் கொண்டு மறைத்து வைக்கவேண்டும். மரம் தூர்விடும் தருவாயில் மறுதாம்புப் பயிருக்கு ஒரு வீரிய கன்றை ஒதுக்கிவிடவேண்டும்.

பலவருட வாழை

இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மண்வெட்டியால் மண்ணை வெட்டவேண்டும். ஜனவரி - பிப்ரவரி மாதத்தில் ஆழமாக வெட்டவேண்டும். அதே சமயம் குழிகளில் உள்ள உப்புக்களை அகற்றவேண்டும்.

மலை வாழை

ஜனவரி, ஏப்ரல், சுீலை, அக்டோபர் ஆகிய 4 மாதங்களில்  மண்ணைக் கிளறவேண்டும். துளைப்பானைத் தடுக்கவும். கன்றுகள் மண்ணுள்ளே இருக்கவும், மேல் மட்டைகளை கிழங்குகளை வரை அகற்றவேண்டும்.

வளர்ச்சி ஊக்கிகள்

பழத்தின் தரத்தை உயர்த்த 2,4 மருந்தை 25 பிபிஎம் (25 மிகி / லிட்டர்) என்ற அளவில் பூவன், மொந்தன்ஈ ரஸ்தாளி, கோ 1 ஆகிய வாழைகளினல் தெளிக்கவேண்டும். இது பூவன் வாழையில் விதை உருவாவதையும் தடுக்கும். நடவு செய்த 6-வது மாதத்தில் பிளான்டோசைம் (2 மிகி / லிட்டர்) தெளிக்கவேண்டும்.

ஊடுபயிர்

அவரை வகைக் காய்கறிகள், பீட்ரூட், சணல் போன்றவற்றை சாகுபடி செய்யலாம். பூசணி குடும்ப காய்கறிப் பயிர்களை சாகுபடி செய்வதைத் தவிர்க்கவும்.


ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு: மேலே

கிழங்கு வண்டு: இதனைக் கட்டுப்படுத்த 10 முதல் 20 கிராம் கார்பரில் தண்டுப் பகுதியைச் சுற்றி தூவி மண்ணைக் கிளறிவிடவேண்டும்.

வாழை அசுவினி
இதுவாழை முடிக்கொத்து நோயைப் பரப்பும் வைரஸ் கிருமியைப் பரப்புகிறது. இதனைக் கட்டுப்படுத்த கீழே காணும் மருந்துகளில் ஏதேனும் ஒன்றைத் தெளிக்கவேண்டும். பாஸ்போமிடான் ஒரு மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது மெத்தில் டெமட்டான் 2 மில்லி தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து தண்டின் மேலிருந்து  அடி வரை தெளிக்கவேண்டும். இதை 21 நாள் இடைவெளியில் சுமார் 1 மில்லி மோனோகுரோட்டோபாசை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ள ஊசி மூலம் செலுத்தவேண்டும். குறை வந்த பிறகு மருந்து செலுத்தக்கூடாது.

சாறுண்ணிகள் மற்றும் கண்ணாடி இறக்கை பூச்சி

இவைகள் இலைகளிலிருந்து சாற்றை உறிஞ்சுவதால், இலைகளின் மேல் பாகத்தில் சிறிய வெள்ளை நிறப்புள்ளிகள் தென்படும். இதனால் வாழையின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

கட்டுப்படுத்துதல்

எக்டருக்கு மீத்தைல் டெமடான் 20 இசி 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீர் அல்லது மோனோகுரோட்டோபாஸ் 1 மில்லி ஒரு லிட்டர் தண்ணீருடன் என்ற விகிதத்தில் ஏதாவது ஒன்றினைத் தெளித்துக் கட்டுப்படுத்தவேண்டும்.

நூற்புழுக்கள்

அறிகுறிகள் :

  • வேர்களிலும், கிழங்குகளிலும் சாற்றை உறிஞ்சி வாழ்கின்றன. இதனால் வேர்களிலும், கிழங்குகளிலும் கருமை நிறங்கள் காணப்படும். நூற்புழுக்கள் ஏற்படுத்தும் காயங்கள் வழியாக பாக்டீரியா மற்றும் பூசண நோய்க்கிருமிகள் எளிதில் நுழைந்து நோய்களை உண்டாக்க ஏதுவாகும். தாக்கப்பட்ட வாழைகள் வாடும்.

கட்டுப்பாடு :

  • நடவுக்கு வாழைக்கன்றுகளை நூற்புழுக்கள் தாக்காத இடங்களிலிருந்து தேர்வு செய்ய வேண்டும்.
  • தாக்கிய இடங்களில் மீண்டும் வாழையைப் பயிரிடாமல் மாற்றுப்பயிர் செய்ய வேண்டும்.
  • கிழங்கில் மருந்திடல் (Paring and Prolinage): வாழைக் கன்றுகளை நடுவதற்குமுன் கிழங்குப்பகுதியில் உள்ள வேர்கள் மற்றும் கருநிறப் பகுதிகளை கத்தியால் நன்கு சீவிவிட்டு, குழைந்த களிமண்ணில் கிழங்கை முக்கி எடுத்து அதன்மீது 40 கிராம் கார்போஃபியூரான் குறுணை மருந்தைப் பரவலாகத் தூவி, பின்னர் நட வேண்டும்.

தண்டுத் துளைக்கும் வண்டு

அறிகுறி: இவ்வண்டு சதைப்பற்றுள்ள வாழைத் தண்டில் சிறிய துளைகளிட்டு அதனுள் முட்டையிடும். துளைகளிலிருந்து பழுப்பு நிறத்தில் பிசுபிசுப்பான திரவம் வெளிவரும். இது முதல் அறிகுறியாகும். பின்பு முட்டைகள் பொரித்து 3 முதல் 25 புழுக்கள் வரை தண்டினைக் குடைந்து உணவாக உட்கொண்டு வேகமாக வளரும். இதனால் தண்டின் திசுக்கள் பாதிக்கப்பட்டு வாழை இலையின் ஓரங்கள் காய்ந்து இலைகள் வெளுத்து விடும். இலைகள் கொத்தாக ஒரே இடத்திலிருந்து வெளிவருவதுபோல் காணப்படும். வாழைப்பட்டைகள் அழுகிவிடும். பூ வெளிவருவது பாதிக்கப்பட்டு. காய்களின் முதிர்ச்சியும் பாதிக்கப்படும். புழுக்களின் சேதம் அதிகமாக இருந்தால், மிக இலேசான காற்றில் கூட தாக்கப்பட்ட வாழை மரங்கள் ஒடிந்து விழுந்து விடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

  • வாழைத் தோட்டத்தில் அவ்வப்போது காய்ந்த இலைகளையும் சருகுகளையும் அப்புறப்படுத்தி தூய்மையாக வைக்கவேண்டும்.
  • பக்கக் கன்றுகளை அதிகம் வளரவிடாமல் வெட்டி அகற்றிவிடவேண்டும்.
  • வண்டு தாக்கிய மரங்களை சிறு துண்டுகளாக வெட்டி உலர வைத்து பின்பு தீயிட்டு அழிக்கவேண்டும்.
  • மோனோகுரோட்டோபாஸ் 1.50 மில்லியுடன்  350 மில்லி தண்ணீரை எடுத்துக் கொள்ளவேண்டும். இம்மருந்து கரைசலைத் தண்டின் அடிப்பாகத்திலிருந்து 60 செ.மீ உயரத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ள சாய்வாகக் கீழே நோக்கி தண்டினுள் ஆழமாகச் செலுத்த வேண்டும்.
  • இதே போன்று வாழைத் தண்டில் 150 செ.மீ உயரத்தில், கீழே செலுத்திய பக்கத்திற்கு எதிர்புறத்தில் மேலும் 2 மில்லி செலுத்தவேண்டும். மொத்தமாக ஒரு மரத்திற்கு நான்கு மில்லி அளவு மருந்து செலுத்தவேண்டும்.
  • மரத்தின் 5வது மாதம் முதல் 8வது மாதம் வரை ஒவ்வொரு மாதமும் இந்த ஊசி மூலம் பூச்சிக்கொல்லி மருந்து போடுவதன் மு{லம் வண்டின் தாக்குதலைத் தவிர்க்க முடியும்.
வாழை பயிரைத் தாக்கும் பூச்சிகள் பற்றிய விரிவான தகவல்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்...


நோய்கள்

சிகடோக்கா இலைப்புள்ளி நோய்

அறிகுறிகள்:  
          இந்நோய் தாக்கிய இலைகளில் முதலில் மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றி, பின் அவை பழுப்பு நிறக் கோடுகளாக மாறி நடுவில் சாம்பல் நிறமாக இருக்கும். பாதிக்கப்பட்ட இலைகள் நுனியிலிருந்து கருக ஆரம்பித்து இலை முழுவதும் விரையில் காய்ந்து விடும். காய்களின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு பிஞ்சிலே காய் பழுத்து வீணாகிவிடும்.

கட்டுப்படுத்தும் முறை

இது ஒரு வைரஸ் நோய். இந்நோய் தாக்கப்பட்ட மரங்களின் இலைகள் சிறுத்து, மஞ்சள் மற்றும் கரும்பச்சை கோடுகள் மற்றும் புள்ளிகளுடன் அடுக்கடுக்காக வெளிவரும்.

  • வைரஸ் தாக்கப்பட்ட மரங்களை அழித்து அப்புறப்படுத்த வேண்டும். மானோகுரோட்டோபாஸ் 1 மில்லி மருந்தை 4 மில்லி தண்ணீரில் கலந்து 45 நாள் இடைவெளியில் மூன்றாவது மாதத்திலிருந்து ஊசி மூலம் தண்டு பாகத்தில் செலுத்தவேண்டும்.
  • கன்று நடுவதற்கு முன்பே கார்போபியூரான்  3 ஜி குருணை மருந்து 40 கிராமை, களிமண் குழம்பில் தோய்த்து எடுக்கப்பட்ட கிழங்கில் தூவவேண்டும்.
  • 200 மில்லி கிராம் பெர்னோக்சான் கொண்ட மாத்திரைகளைக் கன்றினுள் 7 செ.மீ  ஆழத்திற்கு கேப்சூல் “அப்ளிகேட்டர்” கருவி மூலம் செலுத்தவேண்டும். அல்லது 5 மில்லி பெர்னோக்சான் திரவத்தை ஊசி மூலம் தண்டுக்குள் செலுத்தவேண்டும்.
  • நோய் தாக்கப்பட்ட செடிகளை வேரோடு அகற்றிடவேண்டும்.
  • குழிகளில் ஒன்று முதல் 2 கிலோ சுண்ணாம்பை இட்டு மண்ணால் மூடி விடவேண்டும்.
  • கார்பென்டாசிம் 2 கிராம் மருந்தை 100 மில்லி அளவு தண்ணீரில் கரைத்து அதிலிருந்து 3 மில்லி மருந்தை எடுத்த ஊசி மூலம் தண்டுப்பகுதியும், கிழங்கும் சந்திக்கும் பகுதியில் 45 டிகிரி சாய்வாக 10 செ.மீ ஆழத்தில் செலுத்தவேண்டும். இவ்வாறு  கன்று நட்ட 3வது மற்றும் 6வர் மாதங்களில் செய்யவேண்டும்.

கொட்டை வாழை: பூவன் இரகத்தில் இது காணப்படும். இதனைத் தடுக்க 2,4டியை பிபிஎம் என்ற அளவில் பூ விரிந்து 20 நாட்களுக்குள் தெளிக்கவேண்டும். அல்லது 1.2 கிராம் சோடியம் உப்பு 2,4 டியை லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும். இந்த அளவு 200 தார்களுக்குப் போதுமானது.

வாழை பயிரைத் தாக்கும் நோய்கள் பற்றிய விரிவான தகவல்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்...
மேலே



அறுவடை:

வாழ்நாள்: கன்று நட்டு 12 முதல் 15 மாதங்கள் கழித்து அறுவடைக்குத் தயாராகிவிடும்.

அறுவடை: மண், இரகங்கள் ஆகியவற்றைப் பொறுத்து பூ பூத்த 90 முதல் 150 நாட்கள் கழித்து தார்களை அறுவடை செய்யலாம்.
மகசூல்: (டன்களில் / எக்டருக்கு / ஒரு வருடத்திற்கு)

பூவன்      40 முதல் 50
மொந்தன்       30 முதல் 40
ரஸ்தாளி       40 முதல் 50
ரொபஸ்டா     50 முதல் 60
குள்ள வாழை  50 முதல் 60


சார்புடைய இணையதளங்கள் :

வாழையில் நூற்புழுக்களின் தாக்கம், கட்டுப்பாட்டு முறைகள்

தேசிய வாழை ஆராய்ச்சி மையம்

மேலே