தோட்டக்கலை :: பழப்பயிர்கள் :: பலா

இரகங்கள் : வெளிப்பலா, சிங்கப்பூர் பலா, ஒட்டுப்பலா, பன்ருட்டி, பர்லியார் 1, பிஎல்ஆர் 1, பிபிஐ 1 மற்றும் பிஎல்ஆர் (ஜே) 2.

மண் மற்றும் தட்பவெப்பநிலை : பலாவை கடல் மட்டத்திலிருந்து 1200 மீட்டர் கரையுள்ள பிதேசங்களில் பயிரிடலாம். எல்லாவிதமான நிலத்திலும் நன்கு வளரும். ஆனால் நிலம் ஆழமாகவும், நல்ல வடிகால் வசதி உள்ளதாகவும் இருக்கவேண்டும். அமில பாங்கான நிலங்களில் 1 சதவிகிதம் ஆழமாகவும், சல்பேட்டுக்களில் இட்டு அமிலத்தன்மையினைக் குறைக்கலாம்.

நிலம் தயாரித்தல்

நிலத்தயாரிப்பு மற்றும் நடவு செய்தல்: நிலத்தை நன்றாக உழுது பின்பு, 1 மீட்டர் அகலம், 1 மீட்டர் ஆழம் உள்ள குழிகளை எடுக்கவேண்டும். பின்பு ஒவ்வொரு குழியிலும்  செடிகள் நடுவதற்கு ஒரு பத்து நாட்களுக்கு முன்பு 10 கிலோ தொழு உரத்துடன் மேல் மண் நன்கு கலக்கப்பட்டு இடவேண்டும்.

விதையும் விதைப்பும்

பொதுவாக ஒட்டுச்செடிகளை 8x8  மீட்டர் இடைவெளியில் ஜீன் டிசம்பர் வரை உள்ள காலக் கட்டத்தில் நடவேண்டும்.

நீர் நிர்வாகம்

செடிகள் நன்றாக வளரும் வரை வாரம் ஒரு முறையும், பின்பு தேவைப்படும்போதும் நீர் பாய்ச்சவேண்டும்.


ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

உரமிடுதல் : செடி ஒன்றுக்கு வருடா வருடம் இடப்படவேண்டிய உரத்தின் அளவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. (கிலோவில்)

 

தொழு உரம்

தழைச் சத்து

மணிச் சத்து

சாம்பல் சத்து

ஒரு வருடம்

10.0

0.15

0.08

0.10

வருடா வருடம் அதிகரிப்பு

10.0

0.15

0.08

0.10

6 வருடங்களுக்குப்பிறகு

50.0

0.75

0.45

0.50


பயிர்

 

இப்கோ காம்ப்ளக்ஸ் 10:26:26 யூரியா இடவேண்டிய அளவு (கிலோ / ஒரு மரத்திற்கு)

 

 

10:26:26

யூரியா

பொட்டாஷ்

பலா

ஒருவருடம்

0.310

0.260

0.033

 

வருடா வருடம் அதிகரிப்பு

0.310

0.260

0.033

 

6 வருடங்களுக்குப் பிறகு

1.540

1.300

0.170

மேற்படி உரங்களை மே, ஜீன் மாதங்களில் ஒரு முறையும், செப்டம்பர்,அக்டோபர் மாதங்களில் ஒரு முறையும் என இரண்டு முறை பிரித்து இடவேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

பூச்சிகள் : வண்டு போன்ற ஒரு வகைப் பூச்சிகள் காணப்பட்டால் மிதைல் பாரத்தியான் 50 இசி 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். அல்லது நடுத்தர வயதுடைய மரங்களுக்கு மீதைல் பாரத்தியான் 2 சதவிகிதம் அல்லது குயினால்பாஸ் தூவும் மருந்து 1.5 சதவிகிதம் மருந்தை மரம் ஒன்றுக்கு 5 கிலோ வீதம் தூவவேண்டும்.

அழுகல் நோய் : இந்நோய் தென்பட்டால் கட்டுப்படுத்த ஒரு சதவிகித போர்டோக் கலவை அல்லர் காப்பர் ஆக்சி குளோரைடு 2.5 கிராமை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவேண்டும்.

அறுவடை

விதைகள் மூலமாக வளர்ந்த செடிகள் 8 வருடங்களில் காய்ப்புக்கு வரும். ஆனால் ஒட்டுக் கட்டப்பட்ட செடிகள் ஐந்து வருடங்களிலே காய்ப்புக்கு வரும். பழங்களை மார்ச் மாதம் முதல் ஜீலை வரை அறுவடை செய்யலாம்.

மகசூல் : 30-40 டன்கள் / ஒரு வருடத்திற்கு / ஒரு எக்டருக்கு.