தோட்டக்கலை :: நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறை & குறைபாடுகள் :: திராட்சை

Zinc

துத்தநாகச்சத்து பற்றாக்குறை:

‘சிற்றிலை’ அல்லது ‘இலைக் கொத்து’ நோய் என்று அழைப்பார்கள்

அறிகுறிகள் :

  • நுனியில் உள்ள இலைகள் மற்றும் பக்க கிளைகள் சிறுத்துக் காணப்படும்
  • இலைக்காம்புக்கும் தண்டுக்கும் இடைப்பட்ட கோணம் பெரியதாக இருக்கும்
  • இளம் இலைகள் மஞ்சளாக மாறும்

நிவர்த்தி :

  • 5 கிராம் துத்தநாக சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் கரைத்த கரைசலை 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை இலைவழியாகத் தெளிக்க வேண்டும்.