அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: வேளாண் பயிர்கள் :: தானியங்கள்
கோதுமை
கோதுமை மனிதன் உட்கொள்ளும் தானிய வகைகளில் முக்கியமான இடம் வகிக்கின்றது. கோதுமை மாவு சப்பாத்தி,ரொட்டி மற்றும் அடுமனைப்பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. கோதுமை டிரிட்டிகம் இனத்தைச் சேர்ந்தது 30,000க்கும் மேற்பட்ட இன வகைகளைக் கொண்டது. கோதுமை வகைகளில் ரொட்டிக்கு டி.சட்டைவம், மாக்ரோனி (பிழியப்படும் பதார்த்தத்தில்) டி.டியூரம் வகையும் பயன்படுத்தப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்

கலவைகள்
பதப்படுத்துதல்
ஊட்டச்சத்துக்கள் விபரம்

கோதுமை வகைகள்
கோதுமையானது அதன் தன்மை கொண்டு கடின கோதுமை அல்லது பலவீனமான கோதுமை என்று பிரிக்கப்படுகிறது. பலமான கோதுமை அதிக அளவு கொள்ளளவு பெரிய உள் கட்டமைப்புக் கொண்டதாகவும், அத்துடன் நல்ல தன்மையைக் கொண்டதாகவும் உள்ளது. இத்தகைய நல்ல தன்மையைக் கொண்டதாகவும் உள்ளது. இத்தகைய கோதுமை அதிக புரதச் சத்து மிகுந்ததாகவும் உள்ளது. கடின கோதுமை பெரும்பாலும் மாவு வகைகளுக்கும்  ரொட்டி தயாரிக்கவும பயன்படுகிறது. இது குறைந்த அளவு புரதச்சத்து மற்றும் குறைந்த உள் கட்டமைப்புக் கொண்டதாகும். பலவீனமான கோதுமை பிஸ்கட், கேக் செய்ய ஏற்றதாகும். இது ரொட்டி தயாரிக்க ஏற்புடையதல்ல.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015