 |
உழவரின் வளரும் வேளாண்மை : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தமிழ் மாத இதழான வளரும் வேளாண்மை விரிவாக்க கல்வி இயக்ககத்திலிருந்து 1975 ஆம் ஆண்டிலிருந்து விவசாயிகளின் நலனுக்காக வெளியிடப்படுகிறது. 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து அதிக எண்ணிக்கையிலான சந்தாதாரர்களைக் கவருவதற்காக, பலவண்ணங்களில், தரமாக தயாரித்து வெளியிடப்பட்டு வருகின்றது.
2007-08 ஆம் ஆண்டில் 8 சிறப்பிதழ்கள் வெளிவந்துள்ளன. அவை ஏப்ரல் 2007-ல் கல்வி சிறப்பிதழ், மே 2007 - தோட்டக்கலை சிறப்பிதழ், ஜ¤லை 2007 - அங்கக வேளாண்மை சிறப்பிதழ், செப்டம்பர் 2007 - வேளாண்மை ஊரக மேம்பாட்டு மேலாண்மை சிறப்பிதழ், அக்டோபர் 2007. பயிர் பாதுகாப்பு சிறப்பிதழ், ஜனவரி 2008 - விதை தொழில்நுட்ப சிறப்பிதழ், பிப்ரவரி 2008 - சுற்றுப்புற சூழல் அறிவியல் சிறப்பு இதழ் மற்றும் மார்ச் 2008 - மூங்கில் சிறப்பிதழ் போன்றவை தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அக்டோபர் 2008, வரை 5084 பேர் ஆண்டு சந்தாதாரர்களாகவும் 5616 பேர் வாழ்நாள் சந்தாதாரர்களாகவும் உள்ளனர். |