முதல் பக்கம் தொடர்புக்கு  
சார்புடைய தலைப்புகள்
நீர் தேவை
வேறுபட்ட சுற்றுப்புற அமைப்புக்கான நீர் மேலாண்மை
பாசனத்திற்கான நெருக்கடி பருவங்கள
நீர் மேலாண்மை முறைகள்
நெல் வயலிலிருந்து நீர் இழப்பு ஏற்படுவதற்கான முக்கிய கூறுகள்
நீர் அழுத்தம்

நெற்பயிரில் நீர் மேலாண்மை


நீர் தேவை:  

   நெற்பயிர் முளைப்பு, வளர்ச்சி, பெருக்கம் மற்றும் உற்பத்திக்கு நீர் மிகவும் இன்றியமையாத ஒன்று. இத்தேவை இயற்கையாக மழை மூலம் அல்லது செயற்கையாக பாசன முறையிலும் அளிக்கலாம்.

  • சராசரி நீர் தேவை - 1100 மி.மீ

  • சராசரி நீர் தேவை (திருந்திய நெல் சாகுபடி முறைக்கு) - 700 மி.மீ.
  • வேளாண் வானிலை, இரகத்தின் கால அளவு மற்றும் மண்ணின் தன்மையைப் பொருத்து, தினசரி சராசரி நீர் தேவை 6-10 மி.மீ மற்றும் மொத்த நீர் தேவை 1100-1250 மி.மீ வரை வேறுபடுகின்றது.

     



  • பயிர் வளர்ச்சிக் கட்டங்களைப் பொருத்து நீர் தேவை:

    பயிர் வளர்ச்சி கட்டங்கள்

    நீர் தேவை (மி.மீ)

    மொத்த நீர் தேவையில் சதவிகிதம்

    நாற்றங்கால்

    40

    3.22

    நடவு வயல் தயாரிப்பு

    200

    16.12

    நடவு முதல் பூங்கொத்து உருவாகும் வரை

    458

    37.00

    பூங்கொத்து உருவாக்கம் முதல் பூத்தல் முடிய

    417

    33.66

    பூத்தல் பருவம் முதல் முதிர்ச்சி பருவம் முடிய

    125

    10.00



    செயல் கட்டங்களைப் பொருத்து நீர் தேவை:

    செயல்கள்

    நீர் தேவை (மி.மீ)

    நாற்றங்கால்
    நடவுவயல் தயாரித்தல்
    வயல் பாசனம்
    மொத்தம்

    40
    200
    1000
    1240


    நீர்ப்பாசன அட்டவணை:

    குறுகிய கால இரகம்

    மத்திய கால இரகம்

    நீண்ட கால இரகம்

    நாட்கள்

     

    நீர் பாசன எண்ணிக்கை

    நீர் அளவு (செ.மீ)

    நாட்கள்

    நீர் பாசன எண்ணிக்கை

    நீர் அளவு (செ.மீ)

    நாட்கள்

    நீர் பாசன எண்ணிக்கை

    நீர் அளவு (செ.மீ)

    1-25

    5-7

    2-3

    1-30

    5-7

    2-3

    1-35

    6-8

    2-3

    25

    -

    மெல்லிய நீர் படலம்

    30

    -

    மெல்லிய நீர் படலம்

    35

    -

    மெல்லிய நீர் படலம்

    28

    -

    உயிர் நீர்ப்பாசனம்

    33

    -

    உயிர் நீர்ப்பாசனம்

    38

    -

    உயிர் நீர்ப்பாசனம்

    29-50

    6

    2-5

    34-65

    6-8

    2-5

    39-90 (அ) 95

    12-15

    2-5

    51-70

    5-6

    2-5

    66-95

    8-10

    2-5

    96-125

    7-9

    2-5

    71-105

    5-6

    2-5

    96-125

    6-8

    2-5

    126-150

    5-6

    2-5


      மேலே செல்க


    வேறுபட்ட சுற்றுப்புற அமைப்புக்கான நீர் மேலாண்மை:
    திருந்திய நெல் சாகுபடி :
    • முதல் பத்து நாட்களுக்கு மண்ணின் ஈரத் தன்மைக்காக  நீர் பாசனம் செய்ய வேண்டும்.
    • மண்ணில் மயிர்கோடு போன்ற விரிசல் ஏற்பட்டால் 2.5 செ.மீ ஆழம் வரை நீர் தேக்கம் இருக்குமாறு பாசனம் செய்ய வேண்டும்.  பூங்கொத்து உருவாக்கம் வரை இம்முறையை மேற்கொள்ள வேண்டும்.
    •  பின்பு ‘நீர் மறைய நீர் பாய்ச்சுதல்” முறையில்,  கட்டிய நீர் மறைந்த ஒரு நாளுக்குப் பிறகு 5.0 செ.மீ ஆழம் வரை நீர் பாசனத்தை அதிகரிக்க வேண்டும்.

    நஞ்சையில் சேற்று நெல்:
      • சேற்றுழவு மற்றும் நிலம் சமன்படுத்தல் நீர் தேவையைக் குறைக்கும்.
      • இழுவை இயந்திரம் மூலம் (கூண்டு போன்ற சக்கரம் உடைய இயந்திரம் (கேஜ் வீல்)) மூலம் செய்வதால் நீர் உட்கசிவு ஏற்படுவதை குறைக்க முடிகிறது. மேலும் 20 சதவிகிதம் வரை நீர் சேமிப்பு      செய்ய முடிகிறது.  
      • சேற்றுழவின் போது 2.5 செ.மீ நீர் இருக்குமாறு பராமரித்து, பசுந்தாளை இட்டு உழவு செய்ய வேண்டும். சணப்பை போன்ற குறைந்த நார்த்தன்மை கொண்ட பயிராக இருப்பின் 7 நாட்கள் வரை மக்க விட வேண்டும். அதிக நார்த்தன்மை கொண்ட கொழுஞ்சி, (டெப்ரோசியா பர்பூரியா) போன்ற பயிர்களை 15 நாட்கள் வரை மக்க விட வேண்டும்.
      • நடவு செய்தலின் போது, குறைந்த ஆழமாக 2 செ.மீ அளவு நீர் போதுமானது. அதிக ஆழம் நீர் இருப்பின் ஆழ்நடவு ஏற்பட்டு தூர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.
      • நடவு செய்து 7 நாட்கள் வரை 2 செ.மீ அளவு நீர் இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.
      • பயிர் உயிர் பிடித்த பிறகு நீர் சுழற்சி அமிழ்வு முறை நெற்பயிருக்குச் சிறந்தது. பயிர்க்காலம் முழுவதும், 5 செ.மீ அளவு நீர் அமிழ்வு முறை தொடரப்பட வேண்டும்.
      • வேர் விடுதல் மற்றும் தூர்விடும் பருவங்களில் போதுமான அளவு நீர் தேவை இல்லையெனில் ஈரஅழுத்தம் ஏற்பட்டு வளர்ச்சி ஏற்படாமல் பாதிப்புக்குள்ளாகும்.  மேலும் இதனால் தூர்கள் உற்பத்திக் குறைந்து, நிலைக்கும் திறன் குறைந்து, மகசூல் குறைவும் ஏற்பட வாய்ப்புள்ளது.

    சேற்று வயல் நேரடி விதைப்பு:
      • முதல் ஒரு வாரத்திற்கு வயலில் மெல்லிய நீர் படலம் இருக்குமாறு மண்ணை ஈரப்படுத்திக்  கொள்ள வேண்டும்.
      • பயிர் வயதைப் பொருத்து பாசனம் செய்யும் ஆழத்தை 2.5 செ.மீ வரை உயர்த்திக் கொள்ளலாம்.
      • எஞ்சிய நீரை வடிகட்ட  வடிகால் வசதி அமைக்கப்பட வேண்டும்.  எஞ்சிய நீர் மறைந்தவுடன், பாசன அட்டவணையைப் பின்பற்ற வேண்டும்.  அறுவடை செய்வதற்கு 15 நாட்கள் முன்னரே பாசனம் செய்வதை நிறுத்திவிட வேண்டும்.

    நஞ்சையில் புழுதி விதைத்த இறவை நெல்:
      • பாசன நெல்லைப் போல், கால்வாய் நீரை பாசனத்திற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
      • துளையிட்டு விதைக்கும் நெல்லுக்கு, விதைத்து 10-15 நாட்களில், எஞ்சிய மழை நீரை வடிகட்ட  அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.  தூர்விடும் பருவத்தில் 2.5 செ.மீ உயரத்திற்கு மேல் வயலில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
      • துளையிட்டு விதைக்கும் நெல்லில் ஹோட்டா செயல்முறை மூலம் நடவுசெய்து 40 நாட்களான பிறகு சமப்படுத்தல் வேண்டும். இதனால் பயிர் வளர்ச்சிப் பருவத்தில் பெய்யும் போதுமான மழைநீரை தேக்கிவைக்க இம்முறை உதவுகிறது.
    பகுதி பாசன நெல்லில் நீர் நிர்வாகம்: (பகுதி உலர்ந்த நெல்)
      • விதை முளைத்த 30-35 நாட்களிலிருந்து  கண்மாயில் தேக்கி வைத்துள்ள நீரைக்கொண்டு பாசனம் செய்தல் வேண்டும்.
      • 2.5-5.0 செ.மீ ஆழம் வரை நீர்பாசனம் அளித்தல் வேண்டும் “ நீர் மறைய நீர் பாய்ச்சுதல்” நல்லது.

    பாசனத்திற்கான முன் எச்சரிக்கைகள் (பொதுவானது):

      • நீர்  ஆதாரத்தைப் பொருத்து வயல் பாத்தி 25-50 சென்ட் வரை அமைக்கலாம்.
      • ஒரு வயலில் இருந்து மறுவயலுக்கு வயல் பாசனம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
      • வயலில் பிரதான வரப்பிற்கு இணையாக சிறிய வரப்பை 30-45 செ.மீ தூரத்தில் வயலுக்குள்ளேயே அமைக்க வேண்டும்.  இதனால் பிரதான வரப்பிலிருந்து ஏற்படும் நீர் கசிவை தடுக்க முடிகிறது.
      • நீர் கசிவு ஏற்படாமல் இருக்க, நீர் தேக்கம் 5 செ.மீ (அல்லது அதற்கு குறைவான ஆழம் இருப்பதே)  நல்லது.
      • நீர் தேங்கிய நிலையில், வயலைச் சுற்றி 60 செ.மீ ஆழம் மற்றும் 45 செ.மீ அகலம் உள்ள திறந்த வடிகால் அமைக்க வேண்டும்.
      • வயலில் விரிசல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
      • நஞ்சை நிலத்தில் இருபயிர் சாகுபடி முறையில், நீர் பற்றாக்குறை இருப்பின் குறுவை நெல்லுக்குப் பதிலாக நிலக்கடலை/பயரு பயிரிடலாம்.

      மேலே செல்க

    பாசனத்திற்கான நெருக்கடி பருவங்கள்:  

       எந்த பயிர் நிலையில், நீர் அழுத்தத்தினால் மிகவும் குறைந்த மகசூல் கிடைக்கிறதோ, அந்த பயிர் நிலையே, பாசனத்திற்கான நெருக்கடியான கட்டம் எனப்படுகிறது.  இதுவே அதிகநீர் தேவைஉள்ளகாலம் எனவும் அழைக்கப்படுகிறது
          
    நீர் தேவையின் நெருக்கடியான கட்டங்கள் பின்வருமாறு

    •    வீரிய தூர்கள் உருவாகும் பருவம்
    •    பூங்கொத்து  உருவாக்கம்
    •   கதிர் விடுதல்
    •    பூட்டைப் பருவம்
    •    பூத்தல் பருவம்

       மேற்கூறிய இந்நிலைகளில், பாசன இடைவெளி குறித்த காலத்தை விட அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.  இதனால் தெவிட்டு நிலைக்குக் கீழ் ஈரத்தன்மையின்மை ஏற்பட வாய்ப்புள்ளது.




      மேலே செல்க

    நீர் மேலாண்மை முறைகள்:
    தொடர் மூழ்குநிலை/அமிழ்வுநிலை:
      • ஊட்டச்சத்து கிடைக்கும் தன்மை அதிகரிப்பதற்கும், குறைந்த களை நிர்வாக பிரச்சனைகளுக்கும் தொடர் அமிழ்வு முறை பின்பற்றப்படுகிறது.
      • குறைந்த அமிழ்வாக 5 செ.மீ ஆழம் வரை பயிர் காலம் முழுவதும் கடைப்பிடித்தல், அதிக மகசூல் ஏற்பட வழி வகுக்கிறது.


    வேறுபட்ட கட்டங்களில், நீர் அமிழ்வு ஆழம்:

    பயிர் வளர்ச்சிக் கட்டங்கள்

    அமிழ்வு ஆழம் (செ.மீ)

    நடவின் போது

    2

    நடவு செய்து 3 நாட்கள் வரை

    5

    நடவு செய்து 3 நாட்களிலிருந்து தூர்கள் உருவாகுதல்  வரை

    2

    மிகுந்த தூர்கள் உற்பத்தி நிலை (வளமான வயலில் மட்டும்)

    3 நாட்களுக்கு நீரை வடிக்கவேண்டும்

    மிகுந்த தூர்கள் உற்பத்தி முதல் பூங்கொத்து உருவாகுதல் வரை.

    2

    பூங்கொத்து உருவாக்கம் முதல் பூத்து 21 நாட்கள் வரை

    5

    பூத்து 21 நாட்களுக்குப்  பிறகு

    பாசன பிடிப்பு

     

    இடைவிட்ட அமிழ்வு முறை:

      • தொடர் அமிழ்வு முறையில் நெல் உற்பத்திக்கு அதிக அளவு நீர் தேவைப்படுவதால், இடைவிட்ட அமிழ்வு முறைப் பின்பற்றப் படுகின்றது. இதனால் பாசன தேவையை குறைக்க முடிகிறது.
      • அதிக ஈரப்பதம் மற்றும் குறைந்த நீராவியாகுதல் ஆகிய நிலைகளில் இடைவிட்ட அமிழ்வு முறை சிறந்ததாக உள்ளது. அதாவது பயிர் நெருக்கடியான கட்டங்களில் அமிழ்வு முறை பின்பற்றுதல். மேலும் மயிர் கோடு போன்ற விரிசல் ஏற்படும் நிலை வரை உலர விடுதல், பின் மீண்டும் நீர் பாய்ச்சுதல் முறையை பின்பற்ற வேண்டும்.
      • மழைப்பொழிவு, நீர் கட்ட ஆழம் மற்றும்  மண் நயத்தைப் பொருத்து இடைவிட்ட காலம் ஒன்று முதல் ஒன்பது நாட்கள் வரை வேறுபடும்.
      • இம்முறையினால் 30 சதவிகிதம் வரை நீர் சேமிக்கலாம்.

    தொடர்ச்சியான நீர்பாசன ஓட்டம்:


    • தொடர்ச்சியான நீர்பாசன முறையில் வயலுக்கு வயல் பாசனம் மேற்கொள்ளப்படுகிறது. தாழ்வான பகுதி நெல்லில் நிலையான நீர் இருப்பதால் நீர்பாசன தேவை குறைகிறது. இதனால் அதிக நீர் உபயோகத்திறன் ஏற்படுகின்றது.
    • வயலுக்கு வயல் நீர் ஓட்டம் ஏற்படுவதனால், நெற்தானிய மகசூல் அதிகரிக்கிறது.  மேலும் மண்ணில் தீங்கு விளைக்கின்ற உப்புகள் தேக்கம் ஏற்படுவதை தடுக்கிறது.
    • தொடர் நீர்பாசன முறையில் தழைச்சத்து சேதம் அதிகமாகவே உள்ளது. பிரச்சனைக்குரிய மண்ணுக்கு இம்முறை பாசனம் ஏற்றது.


    சுழற்சி முறை பாசனம்:

      • தேவையான அளவு பாசனத்தை சீரான இடைவெளியில் அளிக்க வேண்டும். இதில் இரு பாசனத்திற்கும் இடையில் நீர் தேக்கம் இருக்கக்கூடாது.
      • பயிருக்கு எந்நிலையிலும் நீர் பற்றாக்குறை ஏற்படாதவாறு பாசன இடைவெளியை அமைத்துக் கொள்ள வேண்டும்.
      • நீர் பற்றாக்குறை ஏற்படும் காலத்தில் இம்முறை பின்பற்றப்படுகிறது.
      • சுழல் பாசன முறையில் முக்கியமான ஒரு நன்மையானது, மழைப்பொழிவினை மிகுதியாகப் பயன்படுத்திக் கொள்ளுதல்.
      • பயிரின் நெருக்கடியான காலக்கட்டத்தில் ஆழம் குறைவான அமிழ்வு முறை சிறந்தது.


      மேலே செல்க

    நெல் வயலிலிருந்து நீர் இழப்பு ஏற்படுவதற்கான முக்கிய கூறுகள்  

    நீர் இழப்பு ஏற்படுவதை இரண்டாகப் பிரிக்கலாம்.; ஆவியாக இழப்பு ஏற்படுதல் மற்றும் திரவம் முறையில் இழப்பு ஏற்படுதல்

      • இலைப் பரப்புலிருந்து நீராவிப்போக்கு ஏற்படுவது மற்றும் நீர்பரப்பில் ஆவியாகுதல் ஆகிய இரண்டும் இணைந்தே ஆவியாகி வெளியீடாதல் எனப்படுகின்றது.
      • திரவம் முறையில் ஏற்படும் இழப்பு இரு வகைகள் ஆகும்.  ஆழமான நீர்க்கசிவு மற்றும் நிலப்பரப்பின் மேல் உள்ள எஞ்சிய நீர் வழிந்தோடுதல் என இரு முறையில் இழப்பு ஏற்படுகிறது.


    ஆவியாகி வெளியீடாதல்:

      • முன் வளர்ச்சிப் பருவத்தில், ஆவியாகுதல் அதிகமாய் இருக்கும். இந்நிலையில் இலைப்பரப்புப் குறியீட்டெண் சிறியதாக இருப்பதால் ஆவியாகி வெளியீடாதல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
      • பெரும்பாலான வெப்ப மண்டலத்தில், குளிர் காலத்தில் ஆவியாகி வெளியீடாதலின் தேவை சராசரியாக 4-5 மி.மீ/நாள் ஆகும். உலர் பருவத்தில் 8-10 மிமீ/நாள் என அதிகமாகக் காணப்படும்.

    நீர் ஊடுருவல் மற்றும் நீர் கசிவு:

      • நீர் ஊடுவருவல் செங்குத்தான திசையிலும், நீர்க்கசிவு இடைநிலை இயக்கத்திலும் கரைகளின் மூலம் ஏற்படும்.
      • நில அமைப்பு, மண்ணின் தன்மைகள், மற்றும் நிலத்தடி நீர்மட்டம் ஆழத்தைப் பொருத்தும் நீர் ஊடுருவல் ஏற்படுகிறது. நிலத்தடி நீர்மட்டத்தைக் கொண்ட கடின மண், மண் மேல் பரப்பிற்கு பக்கமாக இருந்தால், நீர் ஊடுருவதலின் இழப்பு 1.0மி.மீ/நாள் என குறைவான அளவிலும், இளக்க மண்ணில் 10.0 செ.மீ/நாள் என்று அதிக அளவிலும் காணப்படுகிறது.
      • நீர்க்கசிவு, பொதுவாக மண் மேல்பரப்பு அல்லது நீரோடைகள், ஆறுகள்/வடிகால்கள் ஆகியவற்றுக்குள் ஏற்படும். ஆனால் நீர் ஊடுருவல் பெரும்பாலும் நிலத்தடி நீர்மட்டத்திற்கே பங்களிக்கிறது.


    மேல்மட்ட வழிந்தோட்டம்:

      • தாழ்வான நெல் உற்பத்தி பகுதிகளில் முக்கியமாக வயலுக்கு வயல் தொடர்ச்சியான நீர்பாசன ஓட்டம் இருக்கும் இடத்தில் அதிக அளவிலான நீர் இழப்பு ஏற்படுகின்றது.
      • கிணற்றுப் பாசன முறையாக இருப்பின் மேல்மட்ட வழிந்தோட்டம் ஏற்படாது.
      • மேல்மட்ட வழிந்தோட்டம் குளிர்காலத்தில் மிகவும் அதிகளவில் ஏற்படும் குறிப்பாக கடுமையான மழைப்பொழிவு சமயத்தில் அதிகமாய் இருக்கும்.


    நீர் இழப்பைக் குறைக்க சில குறிப்புகள் (பொதுவானது:)

    • ஆழமான சேற்றுழவு மற்றும் நிறைவான நில சமப்படுத்தலின் மூலம் நீர் ஊடுருவல் மற்றும் நீர்க்கசிவு குறைய வாய்ப்புள்ளது.
    • தொழு உரம்/மக்கிய உரம்/பசுந்தாள் உரம் ஆகியவை இடுவதால் நீராவி; நீர் ஊடுருவல் மற்றும் நீர்க்கசிவு ஆகியவை ஏற்படுவதைக் குறைக்கலாம்.
    • கால்வாய் மற்றும் வாய்க்கால்களில் உள்வரிப்பூச்சு  செய்வதால் நீர்க்கசிவு ஏற்படுவதை சரிபார்க்க முடிகிறது.
    • நன்கு சமப்படுத்திய நில அமைப்பில், மண் தெவிட்டு நிலையில் இருப்பின், நீராவி ஆகுதலின் இழப்பை 50 சதவிகிதம் வரை குறைக்கலாம்.
    • களிமண்/குறுமண் (இளகிய நயம் கொண்ட மண் மட்டும்) @ 150 கன மீட்டர்/எக்டர் என்ற அளவில் அளிப்பதனால், நீர் ஊடுருவல் 20-25 சதவிகிதம் வரை குறைகிறது.

    நீர் ஊடுருவல் ஏற்படுவதை குறைக்க வழிகள்:

    • தனிப்படுத்தப்பட்ட சிறிய இடத்தை விட பெரிய அளவில் நெற்பயிரை பயிரிடுதல்.
    • அடிமண் இறுக்கம்
    • மழைநீர் சேகரிப்பு மற்றும் அணைக்கரை மேலாண்மை மூலம் குளிர்காலத்தில் மேல்மட்ட வழிந்தோட்டம் ஏற்படாமல் தடுக்க லாம்.

      மேலே செல்க

    நீர் அழுத்தம்:





    நெல் பயிரில் ஏற்படும் அதிக நீர் அல்லது நீர் பற்றாக்குறையே நீர் அழுத்தம் எனப்படுகிறது. இருப்பினும், ஈர அழுத்தம் என்பது நீர் பற்றாக்குறை ஏற்படுவதையே குறிக்கிறது.

    நீர் பற்றாக்குறை மற்றும் நெல்லின் செயற்பாங்கு:

    நீராவிப்போக்கு அதிகமாய் ஏற்படும் இடத்தில், நீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.  பயிர் வளர்ச்சிக் கட்டத்தில் ஏற்படும் நீர் பற்றாக்குறையால் பயிர் வளர்ச்சி மற்றும் நெல் மகசூல் பாதிக்கப்படுகிறது.

    தழை வளர்ச்சிக் கட்டம்:
      • நடவு செய்த உடனே, போதுமானளவு நீர் அமிழ்வு (5 செ.மீ) அளவு தேவைப்படுகிறது. இந்நீர் தேக்கம் இருப்பதினால் அதிக காற்றினால் பயிர் சேதம் அடைவதை தடுத்து வேர் வளர்ச்சிக்குத் துணைபுரிகிறது.
      • முன் வேர் வளர்ச்சிக் கட்டத்தைத் தொடர்ந்து, குறைந்த ஆழமாக (2 செ.மீ) நீர் தேக்கம் தருவதினால், அதிக தூர்கள் உற்பத்திக்கும், வேர்கள் மண்ணில் கெட்டியாக பிடித்துக் கொள்ளவும் உதவுகின்றது.
      • விரைந்து தூர் உருவாகும் கட்டத்தில், ஈர அழுத்தம் ஏற்பட்டால்  30 சதவிகிதம் வரை மகசூல் குறைய வாய்ப்புள்ளது.

      இனப்பெருக்க பருவம் :
        • நீர் பற்றாக்குறைக்கு அதிக உணர் நுட்பம் கொண்டவை நெற்பயிர் குறிப்பாக பூங்கொத்து வகை வளர்ச்சி முதல்  பூட்டைப் பருவம் வரை.
        • 11 நாளில் இருந்து 3 நாட்கள் ஏற்படும் ஈர அழுத்தம் மற்றும் பூட்டைப் பருவத்திற்கு 3 நாட்கள் முன்னர் ஏற்படும் அழுத்தம் ஆகியவற்றால், அதிக சதவிகித மலட்டுத்தன்மை ஏற்பட்டு அதிக அளவு மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
        • இனப்பெருக்க நிலையில் ஏற்படும் ஈர அழுத்தத்தினால் 50-60 சதவிகிதம் வரை மகசூல் குறைவு ஏற்படுகிறது.

        முதிர்ச்சிக் கட்டம்:
          • (பால் பருவம்-தானிய முதிர்ச்சி) இப்பருவத்தில் மண் ஈர அழுத்தத்தினால் வெகுவாக பாதிப்பு ஏற்படுவதில்லை.
          • (மஞ்சளான நிறமுடைய) முதிர் நிலைக்குப் பின் நீர் தேக்கம் தேவையில்லை.
          • அறுவடை செய்வதற்கு 7-10 நாட்கள் முன்னரே வயலில் உள்ள நீரை வடித்து விட வேண்டும்.

          நீர் அழுத்த மேலாண்மை:
            • நீர் பற்றாக்குறை நிலைகளில் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த  சைகோசெல் @ 1000 பிபிஎம் (1மிலி வணிகப்பொருள்/1லிட்டர் தண்ணீரில்) கலந்து தெளிக்க வேண்டும்.
            • பரிந்துரைக்கப்பட்ட பொட்டாஷியத்தில் 50 சதவிகிதத்தை அடியுரமாகவும் மற்றும் 25 சதவிகிதத்தை தூர் உருவாகும் கட்டத்திலும் மீதமுள்ள 25 சதவிகிதத்தை பூங்கொத்து வகை உருவாகும் கட்டத்திலும் அசோஸ்பைரில்லத்துடன் கலந்து பிரித்திடுதல், முறையில் அளிக்க வேண்டும்.  (விதை , நாற்று நனைத்தல், மண்ணில் இடுதல்) இவ்வாறு அளிப்பதினால் ஈர அழுத்தத்தினால் ஏற்படும் தீமையான விளைவுகளைக் கட்டுப்படுத்த முடிகிறது.
            • 1 சதம் பொட்டாசியம்குளோரைடுகரைசலுடன் 16 மணி நேரத்திற்கு (விதைமற்றும் பொட்டாஷ்கரைசல் 1:1)  முன்பு விதை கடின நேர்த்தி செய்து, பின்பு சேமிக்கும் அளவு ஈரத்தன்மை கிடைக்கும் வரை நிழலில் உலர வைக்க வேண்டும். இதன் மூலம் வறட்சியை தாங்கிக் கொள்ளும் ஆற்றலை பயிர் பெறுகிறது.
            • வெவ்வேறு உயிர் வினையியல் கட்டத்தில் ஏற்படும் ஈர அழுத்தத்தை சரிசெய்ய கயோலின் 3 சதவிகிதம் அல்லது பொட்டாஸியம் குளோரைடு 1 சதவிகிதம் என்ற அளவில் தழைப்பருவத்தில் தெளிக்க வேண்டும்.



    அதிக நீர் மற்றும் பயிரின் செயற்பாங்கு:

    • அதிக நீர் உள்ள நிலைகளில் நெற்பயிரின் ஏற்புத்திறன் வேறுபட்ட பயிர் வளர்ச்சிக்கட்டங்கள், இரகங்கள் மற்றும் காலங்களைப் பொருத்து வேறுபடும்.
    • தெளிவான நீரை விட கலங்கலான நீர் பயிரை அதிகம் சேதப்படுத்துகின்றது.
    • நாற்று வளர்ச்சியிலிருந்து தூர்விடும் கட்டம் வரை பயிர் அதிக பாதிப்புக்கு உள்ளாகாது.
    • தழை வளர்ச்சிக் கட்டத்தில் அதிக நீர் இருப்பின், தூர் உற்பத்தியைத் தடுக்கிறது.
    • தூர்கள் உற்பத்தி முதல் பூத்தல் கட்டம் வரை ஏற்படும் பாதிப்பை விட பூத்தல் முதல் முதிர்ச்சிக் கட்டம் வரையிலே நெற்பயிர் அதிக பாதிப்புக்குள்ளாகிறது.
    • வயலில் நீர் பெருக்கு இருப்பின் பயிர்கள் சீரான தன்மையற்ற முறையில் முதிர்ச்சியடைந்து அறுவடை தாமதம் அடைகிறது.

    அதிக நீர் மேலாண்மை:
    • நில சமப்படுத்தலின் மூலம் வயலில் அதிக நீர் இருப்பின் வெளியேற்றம் செய்யப்படுகிறது.
    • வேர்ப்பகுதியில் உள்ள அதிகமான நீரை  வடிகால் மூலம் வடிக்கச் செய்வதால், பயிர் வளர்ச்சிக்கு ஏற்படும் தீங்குகளை தடுக்க முடிகிறது.
    •  நீர் தேங்கும் பரப்புகளில்  பின் தூர்விடும் கட்டம் தான் வடிகால் செய்ய ஏற்ற தருணம்.
    • நீர் தேங்கிய பரப்புகளில் கட்டுப்பாடான நீர்ப்பாசனம் அதிக நீர் பயன்படுத்தலைக் குறைக்கிறது.
    • வெள்ளப்பெருக்கு தடுப்பு முறை: ஆறுகளிலிருந்து வயலுக்குச் செல்லும் நீர் ஓட்டத்தைத் தடுக்க வரப்புகள்/ அணைக்கரை அமைக்க வேண்டும்.

      மேலே செல்க