முக்கிய பகுதிகள்
மீன் வளம் :: முன்னுரை
 
   
முன்னுரை

மீன்கள், இறால்கள், சிங்கிறால்கள், நண்டுகள், மெல்லுடலிகள் இன்னும் பல கடல் உயிரினங்களை பிடித்து வளர்ப்பது பிடிப்பு மீன் வளம் என்றாகும். இந்தியாவில் நிறைய நீர் வளம் உள்ளது இது பிடிப்பு மீன் வளத்திற்கு எற்றதாகும். உலக அளவின் இந்தியா மீன்உற்பத்தியில் மூன்றாவது இடமும் மற்றும் உள்நாட்டு மீன் உற்பத்தியில் இரண்டாவது இடமும் வகிக்கிறது. இந்த மீன்வளத்துறையின் மூலம் சுமார் 11 கோடி மக்கள் பகுதி நேர அல்லது முழுநேர வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர். மேலும் பல்லாயிரக்கணக்கான மக்களின் விருப்பமான உபதொழிலாக மீன் வளர்ப்பு/பிடிப்பு  விளங்குகிறது. கடல் வளம் மூலம் மற்றும் உள்நாட்டு நீர் வளம் மூலம் கிடைத்த மீன் உற்பத்தி 3.9 கோடி டன் மற்றும் 4.5 கோடி டன் ஆகும்.

உள்நாட்டு
பிடிப்பு மீன் வளம்

உள்நாட்டு நீர் வளங்கள் ஆறு, கால்வாய், நதி, வெள்ளச்சமவெளி, நன்செய், கடற்கரைக்காயல் மற்றும் நீர்தேக்கங்களாகும். கடல் நீர் தேக்கங்கள் பிடிப்பு மீன் வளத்திற்கும் மட்டும் பயன்படுகிறது. ஆனால் உள்நாட்டு நீர் தேக்கங்கள், வளர்ப்பு மற்றும் பிடிப்பு மீன் வளத்திற்கு பயன்படுகிறது. இந்தியா, உள்நாட்டு பிடிப்பு மீன் வளத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும், இங்கு மொத்தம் 30% மீன் உற்பத்தியாகிறது. நிறைய உள்நாட்டு மீன் தேக்கத்தினால் பொருளாதார அளவில் பிடிப்பு மீன் வளம் முன்னேருகிறது.

கடல்மீன்
பிடிப்பு வளம்

இந்தியாவில் கடல் மீன் பிடிப்பு வளம் மூலம் பெரிய கடற்கறை வழி (8118 கி.மீ.) மற்றும் பொருளாதாரத் தனி உரிமைப் பகுதி (2.025 ச.கி.மீ.) அமைந்துள்ளது. இந்தயாவில் கடல் மீன் பிடிப்பு வளம் ஒரு முக்கியமான அங்கம் வகிக்கிறது. இதன் மூலம் இரண்டுகோடி மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. கடல் மீன் பிடிப்பினால் கப்பல் படகுகளின் எண்ணிக்கை உயர்ந்து வரகிறது. அதாவது 280491 கப்பல்கள் இதில் பலமையான கப்பல்கள் (181284), இயந்திர படகுகள் (44578) மற்றும் விசைப்படகுகள் (53684) உள்ளது . மொத்த கடல் மீன் பிடிப்பு உற்பத்தியில் பலைய, இயந்திரம் மற்றும் விசைப் படகுகளின் பங்கு 9%, 26% மற்றும் 65%ஆகும்.
கடல் பகுதிகளில் 100 மீ ஆழம் வரை தீவிர மீன்பிடிப்பு பகுதி ஆழ்கடல் பகுதிகளில் அதிகபட்ச நிரந்தர மீன்பிடிப்பு அளவைத் தாண்டும்போது மீன் அளவு குறைவதால் போதிய அளவு கிடைப்பதில்லை. கடற்கரையோரப் பகுதிகளில் மீன்வளம் குறைந்துவிட்டதால். ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு தற்போது வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றது. புதிதாக ஆழ்கடலில் மீன் பிடிக்க நீளடுக்குத் தூண்டில், சுருக்கு வலை மற்றும் கணவாய் போலி இரை ஆகியவை உபயோகின்றன. இவைகளை உபயோகிக்கும்போது கவனம் தேவை.

 

 

 
மேலாண்மை
   
   
இதரவகை
   

தீவு வகை மீன்வளர்ப்பு
கடல்முகத்துரை மீன் வளர்ப்பு
நீர் மாசுபடுதல் மீன் வளர்ப்பு
கட்டுப்படுத்தப்பட்ட மீன் வளர்ப்பு முறை
கேள்வி-பதில்

   
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008