Agriculture Engineering
| | | | | | | | | |
உமி/தோல்/தானியம் நீக்கும் கருவிகள்


கையால் இயங்கும் மிளகு பிரித்தெடுக்கும் இயந்திரம்

பயன்

:

மிளகு கொத்திலிருந்து மிளகைப் பிரித்து எடுக்க உதவுவது.

திறன்

:

மணிக்கு 60 கிலோ.

விலை

:

ரூ.4500/-

அமைப்பு

:

இப்பிரிப்பானில் மரப்பட்டைகள் பொருத்தப்பட்ட இரும்பு உருளை, அரை உருளைப் பெட்டி, உள்வாய், சல்லடை கைப்பிடி, ஆகியவை உள்ளன.  உருளையின் மேற்புரத்தில் 8 மரப்பட்டைகள் பெருத்தப்பட்டு அரை உருளைப் பெட்டியினுள் இவ்வுருளை பொருத்தப்பட்டுள்ளது.  அரை உருளைப் பெட்டிக்கும் மரப்பட்டைகளுக்கும் இடையில் மிளகு பிரிக்கப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்

:

மிளகு கொத்திலிருந்து மிளகு பிரித்தெடுக்கப்படுகிறது.
காலால் மிதித்து மிளகு பிரித்தெடுப்பது தவிர்க்கப்படுகிறது.
சிறு விவசாயிக்கு ஏற்றது.