Agriculture Engineering
| | | | | | | | | |
பண்ணைக் கருவிகள் :: வர்த்தக ரீதியான கருவிகள்

 

மனித சக்தியால் இயங்கும் பழ அறுவடை கருவி

பயன்

பழங்களை அறுவடை செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றது.

திறன்

நீளம் (மி.மீ)  
:
400
அகலம் (மி.மீ)   
:
290
எடை (கிலோ)      
:
0.45
கொள்ளளவு (கிலோ/மணி நேரம்)   
:
65
ஆள் திறன்   
:
ஒரு நபர்

அம்சங்கள்

இது மனிதனால் இயக்கக்கூடிய இயந்திரம். முதலில் தனி பழங்கள் இரண்டு தாடைக்கு நடுவே ஒன்று சேர்ந்து பின் கத்திரியில் சுழன்று அடித்தண்டுகளை துண்டுகளாக்கிவிடும்.தாடைகள் 14 அளவிகளைக் கொண்டது.இது மிதமான இரும்புத் தகட்டால் செய்யப்பட்டது.இவைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து இழுவை சுருளாகக் காணப்படும்.10 மி.மீ மென்மையான இரும்பு கம்பிகள் பொருத்தப்பட்டது.கைப்பிடி இந்த இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ளது. தாடையின் ஒரு பக்கத்தில் சுர அடைப்புக்குறி மற்றும் கயிறுகள் தாடையை இயக்குவதற்காகப் பொருத்தப்பட்டுள்ளது.பழங்களை தூக்கும் பொழுது அதன் தோல்கள் பாதிக்கப்படாமல் இருக்க 3மி.மீ அளவு கெட்டியான ரப்பர் தாழை தாடையின் உட்புறம் பொருத்தப்பட்டிருக்கிறது.பழங்களை பிரித் தெடுக்கும் போது வளையத்தில் உள்ள கயிற்றை அழுத்த வேண்டும்.தாடையின் அடியில் துணி அல்லது வலை கொணரி பொருத்தப்பட்டது.இதனால் அறுவடை செய்யப்பட்ட பழங்கள் நிலத்தில் விழுந்து சேதமடையாமல் பாதுகாக்க உதவுகின்றது.இந்தக் கருவி பீச்,பியர் மற்றும் ஆரஞ்சு பழங்களை அறுவடை செய்ய உதவும்.ஒரு மணி நேரத்திற்கு ஒரு நபர் இந்தக் கருவியைப் பயன்படுத்தி 250 – 300 பழங்கள் வரை அறுவடை செய்யலாம்.