Agriculture Engineering
| | | | | | | | | |
பண்ணைக் கருவிகள் :: வர்த்தக ரீதியான கருவிகள்

 

மனித சக்தியால் இயங்கும் மருந்து தெளிப்பான்

பயன்

இந்தக் கருவி சிறிய நாற்றங்கால்,ரோஜா செடிகள்,வீட்டுத் தோட்டம் மற்றும் ஈரமான பூச்சிக்கொல்லி மற்றும் பூசணக் கொல்லியை தெளிப்பதற்கு ஏற்ற கருவி ஆகும்.

திறன்

வகை            
:
மனிதனால் இயங்கக் கூடியவை
தொட்டியின் விட்டம் (மி.மீ)  
:
130
உயரம் (மி.மீ)  
:
210
எடை (கிலோ)    
:
1.2
அம்சங்கள்

  • இந்தக் கைத் தெளிப்பானில் சிறிய கொள்ளளவு காற்றியக்குத் தெளிப்பான் உள்ளது.இதில் ரோமியம் கலந்த பித்தளை தொட்டி உள்ளது.இதன் கொள்ளளவு 0.5 – 3 லிட்டர்.திமிய எக்கியினால் அழுத்தம் ஏற்படும்.காற்று எக்கி தொட்டியின் உள்ளேயே இருக்கும்.
  • தெளிப்பானில் சிறிய வெளியேறும் குழாய் உள்ளது.அதில் கூம்பு போன்று தெளிமுனை பொருத்தப்பட்டிருக்கிறது.
  • சில வடிவங்களில் தெளிமுனையுடன் சுருள் நெம்புகோல் தொட்டியின் மேலே பொருத்தப்பட்டிருக்கும்.அது திரவத்தை வெளிக்கொண உதவும்.தெளிப்பதற்கு தொட்டி நான்கில் மூன்று பங்கு அளவு நிரைந்திருக்க வேண்டும்.
  • காற்று எக்கியினால் திரவம் வெளியே வரும்.பொதுவாக கிடைபொருள் இரசாயணங்கள் இந்த விதமான தெளிப்பான்களில் நன்றாக தெளிக்க முடியாது.
  • தெளிப்பதற்கு ஈரமான பவுடரை போட்டு நன்றாக குலுக்கவும்.அப்பொழுதுதான் இரசாயணத்தில் கலந்து தேங்கி நிற்கும்.
  • இயக்குவதற்கு தெளிப்பானின் தெளிமுனையை சரியாக திருப்பி வைக்க வேண்டும். எக்கி பித்தளையினால் ஆனது.இந்தக் கருவி ஒரே ஒரு நபரால் இயக்கப்படும் கருவி.