Agriculture Engineering
| | | | | | | | | |
பண்ணைக் கருவிகள் :: வர்த்தக ரீதியான கருவிகள்


டிராக்டரால் இயங்கும் சட்டிப்பலுகு

பயன்:

முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலை பண்படுத்தல்.

திறன்:

வகை    
:
டிராக்டர் வகை
நீளம் (மி.மீ)   
:
1980 – 226
அகலம் (மி.மீ)  
:
1150 – 1900
உயரம் (மி.மீ)    
:
1143 – 1350
வட்டின் எண்ணிக்கை    
:
10-16
வட்டின் விட்டம் (மி.மீ)  
:
457 – 660
வட்டின் புரியிடை
:
228 – 280
எடை (கிலோ)    
:
330 – 490
தேவையான அளவு சக்தி (ஹெச்.பி)    
:
20 – 60, டிராக்டர்
கொள்ளளவு(ஹெச்/நாள்)  
:
2.5

 

                                                         

 

 

                                               
                                

 

அம்சங்கள்:
  • டிராக்டர் ஏற்றப்பட்ட கொத்துக் கலப்பை வட்டில் இரண்டு கூட்டு வட்டு ஒன்றின் பின்னால் ஒன்று பொருத்தப்பட்டிருக்கிறது. வட்டில் உள்ள முதல் கூட்டு வட்டு மண்ணை வெளியே தள்ளவும், பின்புறம் உள்ள கூட்டு வட்டு மண்ணை உள்ளே தள்ளவும் பயன்படும். இதனால் எந்த மண் கட்டியும் உடையாமல் பாதியாக இருக்காது.
  • கொத்துக் கலப்பையில் திண்ணிய அமைப்பு மற்றும் மூன்று துளை இணக்கம் உள்ளது. வட்டுகள் கொத்துக்கலப்பையில் முக்கியமான பகுதிப்பொருள் ஆகும். இதில் உயர்தர கரிம இரும்பு அல்லது உலோக இரும்பினால் செய்யப்பட்டது.
  • வெட்டும் முனைகள் கனமாகவும் தேவையான அளவு கடினமாகவும் இருக்கும். கூட்டு வட்டுகள் ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கும் அமைப்பின் எதிர் திசையில் நகரும். முன்புறம் உள்ள வட்டு எவ்வளவு அளவு மண்ணை தள்ளுகிறதோ அதே அளவை தான் பின்புறம் உள்ள வட்டு தள்ளும்.
  • பழத்தோட்டம் மற்றும் தோட்டப்பயிரில் இயக்கப்படும்போது கொத்துக் கலப்பை இடது மற்றும் வலப்புறங்களில் உள்ள அடிக்கிளை மற்றும் மண்ணை மரத்தின் அருகில் அல்லது தொலைவில் தள்ளிவிடும்.
  • கருவியின் வெளியில் உள்ள விளிம்பில் பிளப்பு வெட்டும் பகுதி வட்டில் பொருத்தப்பட்டிருக்கும்.
  • இவை வயலில் களையெடுப்பதற்கு பயன்படும். மூன்று துளை நீர் விசையியல் இணைப்பு மற்றும் நீர் விசையியலை கட்டுப்படுத்தும் அமைப்பு இருப்பு நிலையை மாற்றி அமைக்க உதவும்.